புன்னிலப் பக்கி

புன்னிலப் பக்கி
ஒசை (ராஜஸ்தானில் பதிவிடப்பட்டது)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கேப்ரிமுல்கசு
இனம்:
கே. அபினீசு
இருசொற் பெயரீடு
கேப்ரிமுல்கசு அபினீசு
கோர்சூபீல்டு, 1821

புன்னிலப் பக்கி (Savanna nightjar)(கேபரிகசு அபினீசு) என்பது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் ஒரு வகை இரவு பக்கி ஆகும். எட்டு துணையினங்கள் இந்தச் சிற்றினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவை: கே. அ. மான்டிகோலசு, கே. அ. அமோயென்சிசு, கே. அ. இசுடிக்டோமசு, கே. அ. அபினிசு, கே. அ. திமோரென்சிசு, கே. அ. கிரிசேடசு, கே. அ. மைண்டனென்சிசு மற்றும் சி. ஏ. புரோபின்கசு.[2] இதன் வாழ்விடம் திறந்தவெளி காடுகள் மற்றும் புதர்கள் நிறைந்த பகுதிகள் ஆகும். இதன் நீளம் சுமார் 25 cm (9.8 அங்) ஆகும். உடலின் மேல் பகுதிகள் பழுப்பு-சாம்பல் மற்றும் புழுவார்த்தமாதிரி, வெளிர் பழுப்பு நிறப் புள்ளிகளுடன் இருக்கும்.[3] கீழ்ப்பகுதி பழுப்பு நிறத்தில், சிறிய கோடுகளுடன் இருக்கும். புன்னிலப் பக்கி இரவாடுதல் வகையினைச் சார்ந்தது. இதன் சிறப்பியல்பான உரத்த சிணுங்கல் இதனை அடையாளம் காணப்பயன்படக்கூடியது.[3] முக்கியமாக மாலை நேரத்தில் பறக்கும் போது இந்த சிணுங்கல்கள் கேட்கும். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக மதிப்பிட்டுள்ளது. ஏனெனில் இது ஒரு பெரிய வரம்பினையும் எண்ணிக்கையினையும் கொண்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 BirdLife International (2016). "Caprimulgus affinis". IUCN Red List of Threatened Species 2016: e.T22689985A93255114. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22689985A93255114.en. https://www.iucnredlist.org/species/22689985/93255114. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. Gill, F; D Donsker (eds.). "Frogmouths, Oilbird, potoos & nightjars". IOC World Bird List Version 6.3. பார்க்கப்பட்ட நாள் 30 September 2016.
  3. 3.0 3.1 Myers, Susan (2016). Wildlife of Southeast Asia. Princeton University Press. p. 78. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781400880720.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புன்னிலப்_பக்கி&oldid=3813270" இலிருந்து மீள்விக்கப்பட்டது