புன்னையாடி ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயில் (வனத்திருப்பதி)

புன்னையாடி ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவில் (வன திருப்பதி), தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம்,, ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம், கச்சினாவிளை ஊராட்சியில் உள்ள புன்னையாடி கிராமத்தில் அமைந்த ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயில் ஆகும்.[1][2] திருமாலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில் மூலவர் ஸ்ரீநிவாசப் பெருமாள் என்ற ஆதிநாராயணன் மற்றும் தாயார் பத்மாவதி ஆவர். ஸ்ரீஆதிநாராயணன் (சிவனைத் தழுவிய பெருமாள்) கருவறையிலிருந்து பக்தர்களுக்கு நின்ற வடிவில் அருள்பாலிக்கிறார்.. திருமால் மார்பில் சிவலிங்கம் உள்ளது.

இக்கோயிலில் முருகன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, நரசிம்மர், அனுமன் மற்றும் ஆண்டாள் நாச்சியாருகு தனித்தனி சன்னதிகள் உள்ளது. கோயில் நுழைவாயிலில் இராஜ விநாயகருக்கு தனிச்சன்னதி அமைந்துள்ளது. இக்கோயிலின் தல விருட்சம் புன்னை மரம் ஆகும். இக்கோயில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை வழிபாட்டிற்கு திறந்திருக்கும். இக்கோயில் சுற்றிலும் புன்னை மரங்கள் அதிகம் வளர்ந்துள்ளது.

இக்கோயிலுக்கு தெற்கே 12.4 கிலோ மீட்டர் தொலைவில் தேரி செம்மணல் மேடுகள் 5 முதல் 50 அடி வரை உயரம் வரை 8,000 எக்டேர் பரப்பளவில் உள்ளது..

அமைவிடம்

தொகு

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் அமைந்த இந்த வனத்திருப்பதிக் கோயில் திருச்செந்தூருக்கு வடமேற்கே 17 கிலோ மீட்டர் தொலைவிலும்; தூத்துக்குடிக்கு தெற்கே 30 கிலோ மீட்டர் தொலைவிலும்; திருநெல்வேலிக்கு தென்கிழக்கே 37 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. அருகில் அமைந்த பேரூராட்சிகள்: காயல்பட்டினத்திற்கு (மேற்கில் 15 கிமீ)., ஆழ்வார்திருநகரிக்கு கிழக்கே 13 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

வரலாறு

தொகு

பழமையான இக்கோயில் முன்னர் சிறிய அளவில் இருந்தது. திருமுருக கிருபானந்த வாரியாரின் ஆலோசனையின் பேரில், புன்னையாடி கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட தொழிலதிபர் சரவண பவன் ராஜகோபாலனின் தலைமையிலான திருப்பணிக்குழு, 23,000 சதுர அடியில் பழைய கோவிலுக்குப் பதிலாக கட்டப்பட்ட புதிய கோயிலில் திருவிழா மண்டபம், பிரகார மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், பிரதான கோபுரம்-ராஜகோபுரம். மற்றும் கருவறை மண்டபங்கள் நிறுவப்பட்டது. மேலும் இக்கோயிலில் விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் அழகிய முறையில் செதுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து வசதிகள்

தொகு

தொடருந்து நிலையங்கள்

தொகு

புன்னையாடி கிராமத்திற்கு அருகில் உள்ள தொடருந்து நிலையங்கள் பின்வருமாறு:[3] [4]

பேருந்துகள்

தொகு

புன்னையாடி கிராமத்திலிருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர், காயல்பட்டினம், குறும்பூர், நாசரேத்து, ஆறுமுகநேரி, மற்றும் ஆழ்வார்திருநகரி செல்வதற்கு பேருந்து வசதிகள் உள்ளது.

உணவகங்கள்

தொகு

இக்கிராமத்தைப் பூர்விகமாகக் கொண்டவர் மறைந்த தொழிலதிபர் சரவண பவன் பி. ராஜகோபாலன் ஆவார். அவரது உணவகத்தின் கிளை இக்கிராமத்தில் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு