புபன் காகர்

புபன் காகர் (Bhupen Khakhar) (10 மார்ச் 1934 மும்பை - 8 ஆகத்து 2003 வடோதரா) இந்திய சமகால ஓவியக் கலையில் ஒரு முன்னணி கலைஞராவார். இவர் பரோடா குழுமத்தின் உறுப்பினராக இருந்தார். மேலும், இவரது பணிக்கு சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார்.

புபன் காகர்
பிறப்புபுபன் காகர்
(1934-03-10)10 மார்ச்சு 1934
மும்பை, இந்தியா
இறப்பு(2003-08-08)8 ஆகத்து 2003
வடோதரா

படைப்புகள்

தொகு

காகர் ஒரு சுய பயிற்சி பெற்ற கலைஞராக இருந்தார். மேலும் ஓவியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது படைப்புகள் இயற்கையில் அடையாளங்கள் இடம் பெற்றன. மேலும், மனித உடல் மற்றும் அதன் அடையாளத்துடன் தொடர்புடையவை. ஒரு வெளிப்படையான ஓரின சேர்க்கைக் கலைஞரான இவரது படைப்பில், [1] பாலின வரையறைகள் மற்றும் பாலின அடையாளத்தின் சிக்கல்கள் இடம் பெற்றன. இவரது ஓவியங்களில் பெரும்பாலும் இந்தியப் புராணங்கள் மற்றும் புராணக் கருப்பொருள்கள் பற்றிய குறிப்புகள் இருந்தன.

1958ஆம் ஆண்டில், காகர் இளம் குசராத்தி கவிஞரும் ஓவியருமான குலாம் முகமது சேக்கைச் சந்தித்தார். அவர் காக்கரின் கலை மீதான ஆர்வத்தை ஊக்குவித்தார். மேலும் வதோதராவில் புதிதாக நிறுவப்பட்ட நுண்கலை பீடத்திற்கு வர இவரை ஊக்குவித்தார். [2]

தொழில்

தொகு

கக்கரின் எண்ணெய் ஓவியங்கள் பெரும்பாலும் கதை மற்றும் சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இவரது முதல் காட்சிப்படுத்தப்பட்ட படைப்புகள் பிரபலமான அச்சிட்டுகளிலிருந்து வெட்டப்பட்ட தெய்வங்களையே வழங்கின. இவர் 1965 ஆம் ஆண்டிலேயே தனி கண்காட்சிகளை நடத்தத் தொடங்கினார். இவர் பெரும்பாலும் சுயமாக கற்றுக்கொண்டிருந்தாலும், இவரது பணி விரைவில் கவனத்தையும் விமர்சன பாராட்டையும் பெற்றது. 1980களில், இவர், இலண்டன், பெர்லின், ஆம்ஸ்டர்டம், தோக்கியோ போன்ற தொலைதூர நாடுகளில் தனி நிகழ்ச்சிகளை நடத்தினார். [3]

கக்கரின் பெரும்பாலும் வெளிப்படையாக ஓரினச்சேர்க்கை கருப்பொருள்கள் சிறப்பு கவனத்தை ஈர்த்தன. ஓரினச்சேர்க்கை என்பது அந்த நேரத்தில் இந்தியாவில் அரிதாகவே பேசப்பட்ட ஒன்று. கலைஞர் தனது சொந்த ஓரினச்சேர்க்கையை மிகவும் தனிப்பட்ட வழிகளில் ஆராய்ந்தார். அதன் கலாச்சார தாக்கங்கள் மற்றும் அதன் நகைச்சுவையான மற்றும் சிற்றின்ப வெளிப்பாடுகள் இரண்டையும் தொட்டார். காகர் ஓரினச்சேர்க்கை காதல், வாழ்க்கை மற்றும் சந்திப்புகளை ஒரு தனித்துவமான இந்திய கண்ணோட்டத்தில் வரைந்தார். [4]

விருதுகளும் கௌரவங்களும்

தொகு

2000ஆம் ஆண்டில், காகருக்கு ஆம்ஸ்டர்டாமின் அரண்மனையில் 'பிரின்ஸ் கிளாஸ்' விருது வழங்கப்பட்டது. மற்ற கௌரவங்களுக்கிடையில், இவர் 1986 ஆம் ஆண்டில் ஆசிய அமைப்பின் நட்சத்திர அறக்கட்டளையின் கூட்டாளர் என்ற கௌரவமும், 1984 ஆம் ஆண்டில் மதிப்புமிக்க பத்மசிறீ (இந்திய அரசாங்கம் வழங்கிய சிறந்த விருது) ஆகியவற்றை வென்றார். பிரித்தானிய அருங்காட்சியகம், இலண்டன், தி டேட் கேலரி, , தி நியூயார்க், நியூயார்க் நவீனக்கலை அருங்காட்சியகம் போன்றவற்றில் இவரது படைப்புகளைக் காணலாம்.

காகர் பற்றிய புத்தகங்கள்

தொகு
  • Bhupen Khakhar, A Retrospective, Timothy Hyman, The National Gallery of Modern Art and the Fine Art Resource, 2003
  • Desai, Mahendra; Bhupen Khakhar (1983). A Man Labelled Bhupen Khakhar Branded As Painter. Bombay: Identity People. இணையக் கணினி நூலக மைய எண் 19123585.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. BBC news
  2. Bhupen Khakhar, Timothy Hyman, Chemould Publications and Mapin Publishing, 1998, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85822-55-7
  3. Vadehra Art Gallery, 20th Century Museum of Contemporary Art www.contemporaryindianart.com பரணிடப்பட்டது 2016-10-18 at the வந்தவழி இயந்திரம்
  4. Bhupen Khakhar, Timothy Hyman, Chemould Publications and Mapin Publishing, 1998, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85822-55-7

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புபன்_காகர்&oldid=3603423" இலிருந்து மீள்விக்கப்பட்டது