பும்சவனம் (Pumsavana (पुंसुवनं), இந்து சமயத்தவர்களில், திருமணமான ஒரு பெண் முதன்முதலாக கருவுறுற்ற 3 அல்லது 4வது மாதத்தில் செய்யப்படும் சடங்காகும்.[1] பும்சவனம் சடங்கு குறித்து கிரகஸ்த சூத்திரங்கள் மற்றும் பல தர்ம சாத்திரங்களில் குறிப்பிட்டுள்ளது. [2][3][4]இச்சடங்கின் போது கருவுற்ற பெண் விரும்பிய இனிப்புப் பண்டங்களை கணவன் ஊட்டுவது வழக்கம்.

பும்சவனம் சடங்கின் போது கருவுற்றப் பெண் உண்பதற்காக வைக்கப்பட்டுள்ள இனிப்புப் பலகாரங்கள், கேரளா

சடங்கு முறை தொகு

இச்சடங்கின் போது கருவுற்ற மனைவி விரும்பியதை கணவன் ஊட்ட வேண்டும். குறிப்பாக பால், தயிர் மற்றும் வெண்ணெய் கலந்து ஊட்ட வேண்டும். [5]மேலும் ஆலமரத்தின் ஒரு கொழுந்து இலையின் சாற்றை, கருவுற்ற மனைவியின் மூக்கில் கணவன் ஊற்றுவார். ஆண் குழந்தை பிறக்க விரும்பினால், வலது மூக்கிலும்; பெண் குழந்தை பிறக்க விரும்பினால் இடது மூக்கிலும் ஊற்றுவர்.அதைத் தொடர்ந்து கருவுற்ற பெண்ணுக்கு விரும்பிய இனிப்பு பலகாரங்கள் படைப்பதுடன்; அனைவருக்கும் விருந்து படைக்கப்படும்.[6][7]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Pandey, R.B. (1962, reprint 2003). The Hindu Sacraments (Saṁskāra) in S. Radhakrishnan (ed.) The Cultural Heritage of India, Vol.II, Kolkata:The Ramakrishna Mission Institute of Culture, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85843-03-1, p.392
  2. Joyce Flueckiger, Everyday Hinduism, John Wiley & Sons, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1405160117, pages 169-191
  3. David Knipe (2015), Vedic Voices: Intimate Narratives of a Living Andhra Tradition, Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0199397693, pages 32-37
  4. Mary McGee (2007), Samskara, in The Hindu World (Editors: Mittal and Thursby), Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0415772273, pages 332-356
  5. Ute Hüsken, Will Sweetman and Manfred Krüger (2009), Viṣṇu's Children: Prenatal Life-cycle Rituals in South India, Otto Harrassowitz Verlag, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3447058544, page 123
  6. Helene Stork (Editor: Julia Leslie), Roles and Rituals for Hindu Women, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120810365, pages 92-93
  7. B Rama Rao, Bulletin of the Indian Institute of History of Medicine கூகுள் புத்தகங்களில், Vol. 33-34, page 153
"https://ta.wikipedia.org/w/index.php?title=பும்சவனம்&oldid=3858530" இலிருந்து மீள்விக்கப்பட்டது