புய்யா
புய்யான் (Bhuiyan) அல்லது புய்யா (Bhuiya) என்பது இந்திய மாநிலங்களான பீகார், சார்க்கண்டு, மத்தியப் பிரதேசம், ஒடிசா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவற்றில் காணப்படும் ஒரு பழங்குடி சமூகம். அவை புவியியல் ரீதியாக வேறுபட்டவை மட்டுமல்ல, பல கலாச்சார வேறுபாடுகள் மற்றும் துணைக்குழுக்களையும் கொண்டுள்ளன. [2]
(2011) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
இந்தியா | |
ஒடிசா | 306,129[1] |
மொழி(கள்) | |
ஒடியா, இந்தி | |
சமயங்கள் | |
நாட்டுப்புற மதம், இந்து சமயம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
பூயான் |
சொற்பிறப்பியல்
தொகுபுய்யான்களின் பெயர் சமசுகிருத வார்த்தையான "பூமி" என்பதிலிருந்து வந்தது. புய்யாகளில் பெரும்பாலானவர்கள் விவசாயம் செய்பவர்கள். பலர் தாங்கள் இந்து தெய்வமான பூமாதேவியிலிருந்து வந்தவர்கள் என்று நம்புகிறார்கள். அவர்கள் வலுவான குடும்ப உறவுகளைக் கொண்ட தந்தைவழி உறவு முறைக் குழுக்களாக இருக்கின்றனர். [3]
தற்போதைய சூழ்நிலைகள்
தொகுபுய்யா சமூகத்தில் குறிப்பிடத்தக்க பொருளாதார மாறுபாடுகள் உள்ளன. கத்வார் மற்றும் திகாயித் போன்ற பகுதிகளில் சிலர் நில உரிமையாளர்களாக உள்ளனர். ஆனால் பலர் நிலத்தில் சுயாதீனமாக அல்லது கூலித் தொழிலாளர்களாக வேலை செய்வதை நம்பியுள்ளனர். கூடை செய்தல், கால்நடை வளர்ப்பு, மீன்பிடித்தல், வேட்டையாடுதல் மற்றும் விறகு, தேன் மற்றும் பிசின் போன்ற வனப் பொருட்களை விற்பனை செய்தல் ஆகியவை அவர்களின் வாழ்வாதாரத்திற்கு பங்களிக்கின்றன, இருப்பினும் உணவு சேகரிப்பு நடைமுறை பெரும்பாலும் அழிந்து விட்டது. கத்வார் இடைக்காலத்தில் அரசராக இருந்தார்கள். அவர்கள் நாகவன்சி மன்னர் பிரதாப் கர்ணுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். நாக்வன்சி கத்வார் கிளர்ச்சியை கர்யாகர் மன்னர் பாக்தியோ சிங்கின் உதவியுடன் அடக்கினார். 1857 கிளர்ச்சியில், திகாயிட் உம்ராவ் சிங் ஓர்மஞ்சியில் உள்ள பந்த்காவாவின் மன்னராக இருந்தார். ராஞ்சியில் கிழக்கிந்திய நிறுவனத்துக்கு எதிரான கிளர்ச்சியில் பங்கேற்றார். [4] [5]
அதிகாரப்பூர்வ வகைப்பாடு
தொகு1931 ஆம் ஆண்டில், பிரித்தானியக் காலத்தில், இவர்கள் பழமையான பழங்குடியினராக பட்டியலிடப்பட்டனர். 1936 இல் இவர்கள் பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் என்று பட்டியலிடப்பட்டனர். [6] பாட்னா பிரிவு, பலமு, அசாரிபாக், மன்பூம் மற்றும் வங்காளத்தில், இவர்கள் பட்டியல் சாதியில் சேர்க்கப்பட்டனர். [7] சுதந்திரத்திற்குப் பிறகு, உத்தரபிரதேச அரசு ஒரு பட்டியல் சாதியாக வகைப்படுத்தியது. ஆனால் 2007 வாக்கில், இவர்கள் பட்டியல் பழங்குடியினராக மறுவடிவமைக்கப்பட்ட பல குழுக்களில் ஒன்றாகினர். [8] 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்த பழங்குடி வகை சோன்பத்ரா மாவட்டத்திற்கு மட்டுமே பொருந்தும். [9] பீகார் மற்றும் சார்க்கண்டில் பட்டியல் சாதியில் சேர்க்கப்பட்டுள்ளார். [10] இவர்கள் சார்க்கண்டின் மொத்த பட்டியல் சாதி மக்கள் தொகையில் 21% ஆவர். [10]
உத்தரப் பிரதேசத்திற்கான 2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 4095 பேர் உள்ளனர். [11]
சான்றுகள்
தொகு- ↑ "A-11 State Primary Census Abstract for Individual Scheduled Tribes (Odisha)". censusindia.gov.in. 16 November 2022.
- ↑ West, Barbara A. (2009). Encyclopedia of the Peoples of Asia and Oceania. Infobase. pp. 107–108. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8160-7109-8.
- ↑ West, Barbara A. (2009). Encyclopedia of the Peoples of Asia and Oceania. Infobase. pp. 107–108. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8160-7109-8.West, Barbara A. (2009).
- ↑ "Model makeover for martyr hamlets". telegraphindia.com.
- ↑ "JPCC remembers freedom fighters Tikait Umrao Singh, Sheikh Bhikari". news.webindia123.com. Archived from the original on 2019-05-04. பார்க்கப்பட்ட நாள் 2023-02-11.
- ↑ Nirmal Sengupta (14 May 1988). "Reappraising Tribal Movements: II: Legitimisation and Spread". Economic and Political Weekly. பார்க்கப்பட்ட நாள் 13 October 2022.
- ↑ "Government of India 1935 (Scheduled Caste) Order, 1936" (PDF). 30 April 1936. பார்க்கப்பட்ட நாள் 13 October 2022.
- ↑ Darpan, Pratiyogita (July 2007). "State At A Glance — Uttar Pradesh". Pratiyogita Darpan 2 (13): 81. https://books.google.com/books?id=7egDAAAAMBAJ&pg=PT72.
- ↑ "State wise Scheduled Tribes — Uttar Pradesh" (PDF). Ministry of Tribal Affairs, Government of India. Archived from the original (PDF) on 2016-11-23. பார்க்கப்பட்ட நாள் 2017-02-04.
- ↑ 10.0 10.1 "Status of Financial Exclusion among the Bhuiya of Jharkhand". anvpublication. 2019. பார்க்கப்பட்ட நாள் 19 September 2022.
- ↑ "A-10 Individual Scheduled Caste Primary Census Abstract Data and its Appendix - Uttar Pradesh". Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2017-02-04.