புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் கோயில்
சீனிவாச பெருமாள் கோயில் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் புரசைவாக்கம் புறநகர்ப் பகுதியில்[1][2][3][4] அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.
புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் கோயில் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 13°04′55″N 80°15′03″E / 13.081875°N 80.250920°E |
பெயர் | |
பெயர்: | புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | புரசைவாக்கம் |
மாவட்டம்: | சென்னை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சீனிவாச பெருமாள் |
இந்தக் கோயிலானது, 13°04′55″N 80°15′03″E / 13.081875°N 80.250920°E (அதாவது, 13°04'54.8"N, 80°15'03.3"E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 33 மீட்டர் உயரத்தில் அமையப் பெற்றுள்ளது. இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.[5] 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் இக்கோயிலின் கும்பாபிசேகம் நடைபெற்றது.[6] 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இக்கோயிலில் இலட்சார்ச்சனை நடைபெற்றது.[7] சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தயாரித்த பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் வரைவுப் பட்டியலில் புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் கோயிலும் ஒன்று.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ India Census Division (1965). Madras (in ஆங்கிலம்). Office of the Registrar General.
- ↑ மாலை மலர் (2021-10-16). "இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை: தி.நகர் திருப்பதி ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-29.
- ↑ தினத்தந்தி (2022-01-14). "திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-29.
- ↑ மாலை மலர் (2020-12-25). "சென்னை: பெருமாள் கோவில்களில் பக்தர்கள் இல்லாமல் சொர்க்கவாசல் திறப்பு". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-29.
- ↑ "Arulmigu Srinivasa Perumal Temple, Purasawalkam, Chennai - 600084, Chennai District [TM000432].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-01-29.
- ↑ மாலை மலர் (2017-09-11). "புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 15-ந்தேதி நடக்கிறது". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-29.
- ↑ மாலை மலர் (2019-04-08). "புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-29.
- ↑ "Heritage Buildings - Draft List". www.cmdachennai.gov.in. Archived from the original on 2022-11-24. பார்க்கப்பட்ட நாள் 2023-01-29.