புராணசிங்கபாளையம் திரௌபதியம்மன் கோயில்
புராணசிங்குபாளையம் திரௌபதியம்மன் கோயில் சுற்றுவட்டார பகுதிகளில் முதன்மையான கோவிலாக விளங்குகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலானது தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில், புதுச்சேரி மாநில எல்லைக்கு அருகில் அமைந்துள்ள புராணசிங்குபாளையம் (பி. எஸ். பாளையம்) என்னும் ஊரில் உள்ள அம்மன் கோயிலாகும்.[1] இங்கு வசிக்கும் வன்னிய குல மக்களின் குலதெய்வமாக திரௌபதியம்மன் கோவில் உள்ளது.
அருள்மிகு திரௌபதியம்மன் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | விழுப்புரம் |
அமைவிடம்: | மெயின் ரோடு, புராணசிங்கபாளையம், விழுப்புரம் வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | வானூர் |
மக்களவைத் தொகுதி: | விழுப்புரம் |
கோயில் தகவல் | |
மூலவர்: | திரௌபதியம்மன் |
சிறப்புத் திருவிழாக்கள்: | தீமிதி திருவிழா |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
வரலாறு
தொகுஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலில் பாண்டவர்களின் மனைவி திரௌபதியம்மன் சன்னதியும், போத்தராசா, விநாயகர், ஐயப்பன் மற்றும் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
தொகுஇக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. சித்திரை மாதம் தீமிதி திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.மகாபாரத நிகழ்வுகளை நினைவுகொள்ளும் வகையில் அரக்குமாளிகை எரிப்பு, பகாசூரனுக்கு பீமன் உணவு வழங்குதல் மற்றும் வதம் செய்தல், கிருஷ்ணரின் தலைமையில் அருச்சுனன்-திரௌபதி திருகல்யாணவைபோகம், கிருஷ்ணரின் கருடவாகன சேவை, விஸ்வரூப சேவை, குதிரைவாகன சேவை, மஞ்சள்நீராட்டு ,அரவான் பலி போன்ற திருவிழாக்கள் மிகவும் பிரசித்திபெற்றது. பத்து நாட்கள் புராணசிங்குபாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களும் விழாக்கோலம் கொண்டிருக்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)