புரா கிரியா சக்தி, பாலி
புரா கிரியா சக்தி (Pura Griya Sakti) என்பது பாலினிய இந்து கோவிலாகும், இது இந்தோனேஷியாவில் பாலியில் கியானார் ரீஜென்சி, தேகலலாங் துணை மாவட்டம்,கேண்டரன் நிர்வாக கிராமம், மனுவாபா கிராமத்தில் அமைந்துள்ளது. மரச் செதுக்கல் மற்றும் அரிசி வயலுக்காக இந்த மாவட்டம் பெயர் பெற்றது. [1] மனுவாபா என்ற சிறிய கிராமம் கேண்டரனுக்கு வடக்கே சுமார் 4 கி.மீ அல்லது குனுங் காவி [2] கோயிலுக்குப் புகர் பெற்ற தம்பக்சைரிங் நகரிலிருந்து தென்மேற்கே சுமார் 4 தொலைவில அமைந்துள்ளது. புரா கிரியா சக்தி அப்பகுதியில் காணப்படுகின்ற ஒரு சக்திவாய்ந்த பிராமண சாதியின் முக்கிய கோயில் ஆகும். [3]
வரலாறு
தொகுபுரா கிரியா சக்தி 17 ஆம் நூற்றாண்டில் பெடாண்டா மனுவாபா என்பவரால் நிறுவப்பட்டது. பெடாண்டா மனுவாபா , பெடாண்டா சக்தி வாவ் ராவ் (பெடாண்டா மனுவாபா நிரார்த்தா) என்பவரின் பேரன் ஆவார். அவர் மயாபாகித்து அரசு வீழ்ச்சி அடைந்த பிறகு ஜாவாவிலிருந்து பாலி நகருக்கு வந்த முதல் பிராமணனாகக் கருதப்படுகிறார். நிரார்த்தா பாலிக்கு பாடு ரெங்காங் மன்னர் கெல்கெல் பகுதியை ஆட்சி செய்த காலகட்டத்தின்போது, சக.1550 ஆம் ஆண்டில், வந்து சேர்ந்தார். நிரார்த்தா பாலி முழுவதும் பயணித்து, அப்போது இந்து மதத்திற்கு புத்துயிர் தரும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் இறுதியில் மாஸில் குடியேறி ஒரு உள்ளூர் இளவரசனின் மகளை மணந்தார். 1589 ஆம் ஆண்டில் அவர் கெல்கெல் மன்னனுக்கு அரச ஆலோசகராகவும், பிரதான பூசாரியராகவும் நியமிக்கப்பட்டார். அவர் இந்த நிலையைத் தக்கவைத்துக் கொண்டு பிராமணர்களின் சக்தியை பலப்படுத்த பயன்படுத்த ஆரம்பித்தார். [4]
இந்த பழமையான கோயில் 1900களின் இறுதியில் புதிய கோயில் கட்டுமானம் அமைக்கப்பட்டு மாற்றப்பட்டது. புதிய கோயில் சுவர், கோயில் வளாகத்தைச் சுற்றிலும் கட்டப்பட்டது. மேலும் சில புதிய பிறந்த நிலையிலான வாயில் பகுதிகள் அமைக்கப்பட்டன. புதுப்பித்தலின் போது வாண்டிலனும் மீட்டமைக்கப்பட்டது. [5]
கோயில் தளவமைப்பு
தொகுஇந்தக் கோயில் வளாகம் ஒரு மலைப்பாங்கான நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. கோயில் வடக்கு-தெற்கு நிலையில் அமைந்துள்ளது, வடக்கு பகுதி கோயிலின் மிக உயர்ந்த பகுதியாகும். இது மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும்: கோயில் வெளிக் கருவறை (ஜாபா பைசன் அல்லது நிஸ்டானிங் மண்டலா), நடுக் கருவறை (ஜாபா டெங்கா அல்லது மத்தியப் மண்டலா) மற்றும் உள்ளே உள்ள முக்கிய கருவறை (ஜீரோ அல்லது உமதமானிங் மண்டலா) என்பனவாகும். கோயில் வளாகத்தின் மிக புனிதமான பகுதியான ஜீரோ, கோயில் வளாகத்தின் மிக உயர்ந்த பகுதியான வடக்கு திசையில் அமைந்துள்ளது. [6]
கோயிலின் மிகக் குறைந்த கீழ் நிலையில் தெற்குப் பகுதியில் ஒரு பெரிய, கூட்டமாக ஒன்று சேர்வதற்குரிய இடமான வேண்டிலான் என்னும் இடம் உள்ளது. அங்கு பொதுக் கூட்டங்கள் மற்றும் சேவல் சண்டை சடங்குகள் போன்றவை நிகழ்த்தப் பெறுகின்றன. படிகள் வெளிப்புற கருவறையின் மேல் நிலைக்கு இட்டுச் செல்கின்றன. மேல் மட்டத்தில், கேம்லான்கள் எனப்படுகின்ற இசையோடு கூடிய நிகழ்ச்சி அமைக்கப்படும் இடம் உள்ளது. அதில் இரண்டு ஜோடி பேல் காங் ("காங் பெவிலியன்") பகுதிகள் உள்ளன. மிகவும் அலங்கரிக்கப்பட்ட பேல் குல்குல் (ஸ்லிட்-டிரம் டவர்) இந்த பகுதியில் தெருவுக்கு அருகில் அமைந்துள்ளது. பேல் குல்குல் அறிவிப்புகளை அறிவிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிற ஓர் இடமாகும். வெளிப்புறக் கருவறைக்குச் செல்லும் படிகளில் ஒரு பெரிய மரம் வளர்ந்துள்ளது. இந்த மரம் ஒரு புலியின் ஆவியான, ரது கெடே மக்கானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சன்னதியாகக் கருதப்படுகிறது. [6]
வெளிப்புறக் கருவறை மற்றொரு கட்டங்கள் வழியாக நடுத்தர கருவறையுடன் இணைக்கப்பட்டுள்ளது, அங்கு பிறந்த நிலையிலான ஒரு நுழைவாயில் உள்ளது. அங்கிருந்து நடுத்தர கருவறைப் பகுதிக்கு நுழைந்து செல்ல முடியும். உட்புறக் கருவறையில் நடத்தப் பெறுகின்ற சடங்கு நிகழ்ச்சிகளை எதிர்கொள்கின்ற வகையில் நடுத்தர கருவறை பல பெவிலியன்களைக் கொண்டு அமைந்துள்ளது. அங்கு கெடோங் சினுப் வாஸ்த்ரா என்னும் இடத்தில், நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்கான சாதனங்களை வைத்துக் கொள்வதற்காக ஒரு சேமிப்புக் கொட்டகை உள்ளது. ஒரு பியாசன் பெடாண்டா என்பது பூசாரி தங்கள் வேண்டுதல்களை இறைவனுக்கு படைக்கின்ற ஒரு சிறிய பெவிலியன் உள்ளது. அப்பகுதியில் மேலும் ஒரு சேமிப்பு அறையும் உள்ளது. நடுத்தர கருவறையில் ஒரு சமையலறை அமைந்துள்ளது. [6]
படிகள் ஏறி மற்றொரு பிறந்த நுழைவாயிலைக் கடந்து நடுத்தர கருவறையிலிருந்து உள் கருவறையினை அடையலாம். பிரதான கருவறை அமைந்துள்ள கோயிலின் மிகவும் புனிதமான பகுதியாகும். உள் கருவறை. கோயிலின் நிறுவனர் பெடாண்டா மனுவாபாவின் ஆவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட பெவிலிங் கெடோங் என்ற பெவிலியன் போன்ற கோயிலின் பிரதானப் பகுதி உள்ளது. இந்த சன்னதியின் பின்னணியில் ஒரு பெரிய மற்றும் பின்னிப்பிணைந்த ஆலமரம் உள்ளது. முதன்மை சன்னதியின் பக்கத்தில் பத்மாசனா உள்ளது இது ஒரு உயர்ந்த கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறிய சன்னதியின் வடிவத்தில் அமைந்துள்ளது. சேமிப்பிற்குப் பயன்படுத்தப்படும் உள் கருவறையில் ஓரிரு பெவிலியன்கள் உள்ளன. பெசான்டியன் பெவிலியன் மதம் தொடர்பான கோஷத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. பெவேடன் பெமாங்கு என்பது பூசாரியார்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு பெவிலியன் ஆகும். [6] உள் கருவறை பொதுவாக பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. ஆனால் கோவில் பூசாரியிடம் அனுமதி பெற்று அங்கே செல்லலாம்.[5]
குறிப்புகள்
தொகு- ↑ Auger 2001.
- ↑ "Gunung Kawi", Wikipedia (in ஆங்கிலம்), 2015-12-16, பார்க்கப்பட்ட நாள் 2019-11-30
- ↑ Stuart-Fox 1999.
- ↑ Stuart-Fox 1999, ப. 46.
- ↑ 5.0 5.1 Auger 2001, ப. 98.
- ↑ 6.0 6.1 6.2 6.3 Stuart-Fox 1999, ப. 47.