புரோகோபிசு பாவ்லோபூலோசு

புரோகோபிசு பாவ்லோபூலோசு (Prokopis Pavlopoulos, கிரேக்க மொழி: Προκόπης Παυλόπουλος, பிறப்பு சூலை 10, 1950) கிரேக்க வழக்கறிஞரும் பல்கலைக்கழகப் பேராசிரியரும் அரசியல்வாதியுமாவார். 2004–09 காலகட்டத்தில் கிரேக்க உள்துறை அமைச்சராகப் பணியாற்றி உள்ளார்.

புரோகோபிசு பாவ்லோபூலோசு
Προκόπης Παυλόπουλος
கிரீசின் குடியரசுத் தலைவர்
தேர்வு
பதவியில்
13 மார்ச்சு 2015
பிரதமர்அலெக்சிசு சிப்ராசு
Succeedingகரோலோசு பபூலியாசு
உள்துறை அமைச்சர்
பதவியில்
10 மார்ச்சு 2004 – 11 செப்டம்பர் 2009
பிரதமர்கோசுடாசு கரமன்லிசு
முன்னையவர்கோஸ்டாஸ் ஸ்கண்டலிடிஸ்
பின்னவர்கியான்னிசு ரகோசிசு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 சூலை 1950 (1950-07-10) (அகவை 73)
கலாமாடா, கிரீசு
தேசியம்கிரேக்கர்
அரசியல் கட்சிபுதிய சனநாயகக் கட்சி
துணைவர்விளாசியா பெல்ட்செமி
பிள்ளைகள்2 மகள்கள்
1 மகன்
முன்னாள் கல்லூரிஏதென்சு பல்கலைக்கழகம்
பாந்தியன்-அசாசு பல்கலைக்கழகம்

பெப்ரவரி 18, 2015 அன்று கிரேக்க நாடாளுமன்றம் பாவ்லோபூலோசை புதிய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளது. நடப்பு தலைவர் கரோலோசு பபூலியாசின் பதவிக்காலம் மார்ச்சு 13, 2015 அன்று முடிவடைகின்றது; இதனையடுத்து பாவ்லோபூலோசு குடியரசுத் தலைவராக பதவியேற்பார்.[1]

மேற்சான்றுகள் தொகு