புரோட்டான் (ஏவூர்தி)

புரோட்டான் (Proton) என்பது ருசியா நாட்டின் ஏவூர்தி ஆகும். இது நான்கு நிலைகளைக் கொண்ட ஒரு நீட்டிக்கப்பட்ட ஏவூர்தி ஆகும். வணிக ரீதியாகவும் மற்றும் ருசிய அரசு விண்வெளி அமைப்பின் ஏவுதலுக்காகவும் இது பயன்படுத்தப்படுகிறது. முதல் புரோட்டான் ஏவூர்தி 1965 ஆம் ஆண்டு ஏவப்பட்டது. மேம்படுத்தப்பட்ட தற்போதைய புரோட்டான் ஏவூர்திகள் இன்று வரை பயன்பாட்டில் இருக்கின்றன. ஏவூர்தி வரலாற்றில் அதிக திறனுடைய அதி உந்துகிகள் (heavy boosters) பயன்படுத்தப்படும் ஏவூர்திகளுள் புரோட்டான் ஏவூர்தியும் ஒன்று. அனைத்து புரோட்டான் ஏவூர்திகளும் ருசியாவின் மாஸ்கோவில் அமைந்துள்ள குருநிசேவ் மாகாண ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி மையத்தில் ( Khrunichev State Research and Production Space Center) தயாரிக்கப்பட்டு பைக்கனூர் விண்வெளி ஏவுதளம் (Baikonur Cosmodrome) ஏவுதளத்திற்கு கிடைமட்டமாக எடுத்துச் செல்லப்படுகிறது. ஏவுதளத்தின் செலுத்து பீடத்தில் (launch pad ) புரோட்டான் ஏவூர்தி செங்குத்தாக நிலைநிறுத்தப்படுகிறது.[1][2]

புரோட்டான்-கே ஏவூர்தி
புரோட்டான்-கே ஏவூர்தி

வகைகள் தொகு

  • புரோட்டான்-கே (Proton-K)
  • புரோட்டான்-எம் (Proton-M)

என இதில் இரு வகைகள் உள்ளன.

திறன் தொகு

புரோட்டான் ஏவூர்தியானது பூமியின் தாழ் வட்டப்பாதைக்கு 22.8 டன்கள் எடையையும்,[3] புவிநிலை வட்டப்பாதைக்கு 6.3 டன்கள் எடையையும்[4] எடுத்துச் செல்லவல்லது. 2030 ஆம் ஆண்டில் இவ்வேவூர்தி ஓய்வுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.[5]

வணிகம் தொகு

ருசிய விண்வெளி வியாபாரத்தில் 1994 முதல் இன்றுவரை புரோட்டான் ஏவூர்தி 4.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சம்பாதித்துக் கொடுத்துள்ளது. இது வருங்காலங்களில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.[6]

மேம்பாடு தொகு

புரோட்டான் ஏவூர்தியின் மேம்பாடானது புதிய அங்காரா ஏவூர்தி அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அதிதிறனுடைய அங்காரா எளிமையானதும் செலவு குறைந்ததும் ஆகும். புரோடான் ஏவூர்தியின் முக்கிய மேம்பாடாக அதன் கடுங்குளிர் இயந்திரம் மேம்படுத்தப்படும்.

சக ஏவூர்திகள் தொகு

புரோட்டான் ஏவூர்தியின் திறனை ஒத்த ஏவூர்திகள்:

  • அதிதிறன் டெல்டா IV (Delta IV Heavy)
  • அதிதிறன் அட்லஸ் V (Atlas V Heavy)
  • ஏரியான் 5 (Ariane 5)
  • லாங் மார்ச்சு 5 (Long March 5)
  • அங்காரா 5 (Angara A5)
  • பால்கன் 9 (Falcon 9)
  • ஹெச்-IIபி (H-IIB)

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோட்டான்_(ஏவூர்தி)&oldid=3590280" இருந்து மீள்விக்கப்பட்டது