புரோமசமிலம்
புரோமசமிலம் (Bromous acid) என்பது HBrO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஓர் அமிலமாகும். இவ்வமிலத்தில் புரோமின் +3 ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது. புரோமசமிலத்தின் உப்புகள் புரோமைட்டுகள் எனப்படுகின்றன. இந்த அமிலம் நிலையற்றது மற்றும் ஒரு வினையில் இடைநிலையாக உருவாகிறது. உதாரணமாக, ஐப்போபுரோமைட்டுகளின் ஆக்சிசனேற்ற வினையின்[1] போது இது இடைநிலையாகத் தோன்றுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்s
ஐதராக்சி-λ3-புரோமனோன்
ஐதராக்சிடோராக்சிடோபுரோமின் புரோமசமிலம் | |
இனங்காட்டிகள் | |
ChEBI | CHEBI:29247 |
ChemSpider | 145144 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 165616 |
| |
பண்புகள் | |
HBrO2 | |
வாய்ப்பாட்டு எடை | 112.911 கி/மோல் |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | ஐதரோபுரோமிக் அமிலம்; ஐப்போபுரோமசமிலம்; புரோமிக் அமிலம்; பெர்புரோமிக் அமிலம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வேதியியல்
தொகுமரபார்ந்த வேதியியல் முறை அல்லது மின்வேதியியல் முறையில் நேர்மின் முனை ஆக்சிசனேற்றம் வழியாக புரோமசமிலத்தைத் தயாரிக்க முடியும்.
- HBrO + HClO → HBrO2 + HCl
ஐப்போ புரோமசமிலத்தை விகிதச் சிதைவுக்கு உட்படுத்தினால் அது புரோமசமிலம் மற்றும் ஐதரோபுரோமிக் அமிலம் ஆகியனவாகப் பிரிகிறது.
- 2 HBrO → HBrO2 + HBr
புரோமிக் அமிலமும் ஐதரோ புரோமிக் அமிலமும் விகிதச்சேர்க்கை வினையில் ஈடுபட்டு புரோமசமிலத்தைக் கொடுக்கின்றன.
- 2 HBrO3 + HBr → 3 HBrO2
சேர்மங்கள்
தொகுபல புரோமைட்டு சேர்மங்கள் நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகின்றன. இவற்றைத் தனித்துப் பிரிக்கவும் இயலும். உதாரணமாக , NaBrO2• 3H2O மற்றும் Ba(BrO2)2•H2O.[1]
பயன்கள்
தொகுபெர்மாங்கனேட்டுகளை மாங்கனேட்டுகளாக ஒடுக்கும் வினைகளில் புரோமைட்டுகள் பயன்படுகின்றன.
- 2MnO−
4 + BrO−
2 + OH− → 2MnO2−
4 + BrO−
3 + H2O
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Egon Wiberg, Arnold Frederick Holleman (2001) Inorganic Chemistry, Elsevier பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5