புரோமித்தோசீன்

வேதிச் சேர்மம்

புரோமித்தோசீன் (Promethocene) என்பது Pm(C5H5)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புரோமித்தியத்தின் உலோக-கரிம சேர்மமான இது கதிரியக்கப் பண்பு கொண்டுள்ளது. உலர்ந்த காற்றில் நிலைப்புத்தன்மை கொண்டுள்ளது. புரோமித்தோசீன் பொது இடைநிலை உலோகங்களின் வளையபெண்டாடையீனைல் அணைவுச் சேர்மங்களிலிருந்து வேறுபட்டதாகும். இது ஓர் அயனியாகப் பிணைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.[1] அணு மின்சுமை மற்றும் மூலக்கூறு சுற்றுப்பாதைகளை கணக்கிடும் இயற்கை மக்கள்தொகை பகுப்பாய்வு என்ற முறையிலான கோட்பாட்டு கணக்கீடுகள் புரோமித்தியத்தின் மின்னணு கட்டமைப்பு 6s0.115d1.194f2.21.[2] என்று காட்டுகின்றன.

புரோமித்தோசீன்
Promethocene
பெயர்கள்
வேறு பெயர்கள்
புரோமித்தியம் வளையபெண்டாடையீனைடு
இனங்காட்டிகள்
112341-23-8 Y
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • c1ccc[cH-]1.c2ccc[cH-]2.c3ccc[cH-]3.[Pm+3]
பண்புகள்
Pm(C5H5)3
வாய்ப்பாட்டு எடை 340.285
தோற்றம் மஞ்சள் ஆரஞ்சு திண்மம்[1]
கொதிநிலை 145~260 °C
(10-3~10-4mmHg, sublimates)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

டெட்ரா ஐதரோபியூரான் கரைசலில் உள்ள நீரற்ற [[புரோமித்தியம்(III) குளோரைடு |புரோமித்தியம்(III) குளோரைடுடன்]] சோடியம் வளையபெண்டாடையீனைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் புரோமித்தோசீன் உருவாகும்.

3C5H5Na + PmCl3 → (C5H5)3Pm + 3 NaCl

வேதிப் பண்புகள் தொகு

புரோமித்தோசீன் தண்ணீருடன் வினைபுரியும் போது சிதைந்து [[புரோமித்தியம்(III) ஐதராக்சைடு |புரோமித்தியம்(III) ஐதராக்சைடை]] கொடுக்கிறது. உடன் வளையபெண்டாடையீன் சேர்மமும் இவ்வினையில் உருவாகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 《无机化学丛书》. 第七卷 钪 稀土元素. 易宪武 等主编. 科学出版社. 2.3.7 稀土元素有机化合物. P260~261. 1.π络合物
  2. Krinsky, Jamin L.; Minasian, Stefan G.; Arnold, John (2010-12-08). "Covalent Lanthanide Chemistry Near the Limit of Weak Bonding: Observation of (CpSiMe3)3Ce−ECp* and a Comprehensive Density Functional Theory Analysis of Cp3Ln−ECp (E = Al, Ga)". Inorganic Chemistry (American Chemical Society (ACS)) 50 (1): 345–357. doi:10.1021/ic102028d. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோமித்தோசீன்&oldid=3903279" இலிருந்து மீள்விக்கப்பட்டது