புரோலாக்டின்

புரோலாக்டின் (Prolactin) அல்லது லூட்டியோடிரோபிக் இயக்குநீர் (Luteotropic hormone, LTH) என்பது முன்புற பிட்டியூட்டரியினால் சுரக்கப்படும் ஒரு இயக்குநீர் ஆகும். லூட்டியோடிரோஃபின், லூட்டியோடிரோஃபிக் இயக்குநீர், லாக்டோஜெனிக் இயக்குநீர், மாம்மோடிரோபின் போன்ற பல்வேறு பெயர்களால் புரோலாக்டின் அழைக்கப்படுகிறது. இது பெண் பாலூட்டிகளில் பால் உற்பத்தியைத் தூண்டுகிறது. ஆக்சிடோசினின் செயலும் புரோலாக்டினின் செயலும் பொதுவாகக் குழப்பப் படுகிறது. புரோலாக்டின் பால் உற்பத்தி செய்வதில் பங்கேற்கிறது. ஆக்ஸிடோஸினோ உற்பத்தியான பால் வெளியே சுரக்கப்படுவதற்கு உதவுகிறது.

புரோலாக்டின்
அடையாளம் காட்டிகள்
குறியீடு PRL
Entrez 5617
HUGO 9445
மனிதனில் இணையவழி மென்டலியன் மரபுரிமை 176760
RefSeq NM_000948
UniProt P01236
வேறு தரவுகள்
இருக்கை Chr. 6 p22.2-p21.3

புரோலாக்டின் மிகும் நிலைகள்

தொகு
  • புரோலாக்டினோமா
  • தைராய்டு குறைநிலை
  • டோப்பமைன் எதிர்ப்பு மனநல மருந்துகள் உட்கொள்ளும் போது
  • தாய்மை நிலை

புரோலாக்டின் குறையும் நிலைகள்

தொகு
  • புலீமியா நெர்வோஸா
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோலாக்டின்&oldid=2899258" இலிருந்து மீள்விக்கப்பட்டது