கபச் சுரப்பி

(பிட்யூட்டரி சுரப்பி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கபச் சுரப்பி (Pituitary gland) அல்லது பிட்யூட்டரி சுரப்பி அல்லது கைப்போபிசிசு என்பது முதுகெலும்புகளில் உள்ள ஒரு நாளமில்லாச் சுரப்பி ஆகும். இது மனிதர்களில், மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது. இது ஐப்போதாலமசின் அடிப்பகுதியிலிருந்து வெளியேறுகிறது. மனித பிட்யூட்டரி சுரப்பி முட்டை வடிவிலானது. இது சுமார் 1 செமீ விட்டமும், 0.5–1 கிராம் (0.018–0.035 oz) எடையுடன் ராச்மா அளவிலானது.

கபச் சுரப்பி
பக்கப் பார்வை
கபச் சுரப்பி அமைவு
விளக்கங்கள்
முன்னோடிநரம்பு மற்றும் வாய்க்குழி புறப்படலம், ரத்தேக் பையுடன்
தமனிSuperior hypophyseal artery, infundibular artery, prechiasmal artery, inferior hypophyseal artery, capsular artery, artery of the inferior cavernous sinus[1]
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்hypophysis cerebri, glandula pituitaria
MeSHD010902
NeuroLex IDbirnlex_1353
TA98A11.1.00.001
TA23853
FMA13889
Anatomical terms of neuroanatomy

பிட்யூட்டரி சுரப்பியின் இரண்டு முக்கிய மடல்கள் உள்ளன. இதில் ஒன்று முன்புற மடல் மற்றொன்று பின்புற மடல். ஒரு சிறிய இடைநிலை மடலால் இவை இணைக்கப்பட்டு பிரிக்கப்பட்டுள்ளன. முன்புற மடல் (அடினோஹைபோபிசிசு) பல இயக்குநீர்களை (கார்மோன்கள்) உற்பத்தி செய்து சுரக்கும் சுரப்பிப் பகுதியாகும். பின்புற மடல் (நியூரோஹைபோபிசிசு) ஐப்போத்தலாமசு உற்பத்தி செய்யப்படும் நியூரோகைபோபிசியல் கார்மோன்களை சுரக்கிறது. இரண்டு மடல்களும் வெவ்வேறு தோற்றம் கொண்டவை. இவை இரண்டும் கைபோதாலமசால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

பிட்யூட்டரி சுரப்பியிலிருருந்து சுரக்கும் இயக்குநீர்கள் வளர்ச்சி, இரத்த அழுத்தம், ஆற்றல் மேலாண்மை, பாலியல் உறுப்புகளின் அனைத்து செயல்பாடுகள், தைராய்டு சுரப்பி, வளர்சிதை மாற்றம், கர்ப்பத்தின் சில அம்சங்கள், பிரசவம், தாய்ப்பால், சிறுநீரகத்தில் நீர்/உப்பு செறிவு, வெப்பநிலை கட்டுப்பாடு, மற்றும் வலி நிவாரணம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

கட்டமைப்பு

தொகு

மனிதர்களில், பிட்யூட்டரி சுரப்பியானது ஆப்புரு எலும்பின் கைப்போபைசல் போசாவில், நடுத்தர மண்டை ஓட்டின் மையத்தில் உள்ளது. இது செல்லா டர்சிகா எனப்படும் பாதுகாப்பு எலும்பு உறையில் அமர்ந்து, டூரல் மடிப்பு டயாபிராக்மா செல்லால் மூடப்பட்டிருக்கும். [2]

பிட்யூட்டரி சுரப்பி முன்புற பிட்யூட்டரி, பின்புற பிட்யூட்டரி மற்றும் ஒரு இடைநிலை மடல் ஆகியவற்றால் ஆனது.[3] இடைநிலை மடல் மனிதர்களில் குருதிக்குழல் இல்லாமல் காணப்படும். பல விலங்குகளில், இந்த மூன்று மடல்கள் தனித்தனியாக உள்ளன. இடைநிலை மடல் பல விலங்கு இனங்களில் காணப்படும்; குறிப்பாக கொறித்துண்ணிகள், எலிகள் மற்றும் சுண்டெலி. இவை பிட்யூட்டரி வளர்ச்சி மற்றும் செயல்பாட்டை ஆய்வு செய்ய பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து விலங்குகளிலும், சதைப்பற்றுள்ள, சுரப்பியின் முன்புற பிட்யூட்டரியானது, ஐப்போத்தலாமசின் நீட்சியான பின்பக்க பிட்யூட்டரியின் நரம்பியல் கலவையிலிருந்து வேறுபட்டது.[4] In all animals, the fleshy, glandular anterior pituitary is distinct from the neural composition of the posterior pituitary, which is an extension of the hypothalamus.[4]

பிட்யூட்டரி சுரப்பியின் உயரம் 5.3 முதல் 7.0 மிமீ வரை இருக்கும். பிட்யூட்டரி சுரப்பியின் பருமன் 200 முதல் 440 மிமீ 3 வரை இருக்கும்.[5] இதன் மிகவும் பொதுவான தட்டை வடிவம், 46% மக்களில் காணப்படுகிறது. இது 31.2 சதவிகித மக்களில் குவிந்தும், 22.8% மக்களில் குழிவாகவும் காணப்படுகிறது.[5]

முன் பிட்யூட்டரியில் பல்வேறு வகையான கலன்கள் உள்ளன.[6] இவை கார்மோன்களை ஒருங்கிணைத்து சுரக்கின்றன. பொதுவாக முன்புற பிட்யூட்டரியில் உருவாகும் ஒவ்வொரு முக்கிய கார்மோனுக்கும் ஒரு வகையான உயிரணுவுடன் இருக்கும். தனித்துவமான கார்மோனுடன் பிணைக்கும் உயர்-தொடர்பு ஆன்டிபாடிகளுடன் சிறப்பு கறைகள் இணைக்கப்பட்டிருந்தால், குறைந்தது 5 வகையான செல்களை வேறுபடுத்தலாம்.

எண் உயிரணு வகை கார்மோன் சதவீதம்



</br> செல் வகை
1. சோமாடோட்ரோப்கள் மனித வளர்ச்சி கார்மோன் (hGH) 30-50%
2. கார்டிகோட்ரோப்சு அட்ரினோ கார்டிகோ டிராபிக் கார்மோன் (ACTH) 20%
3. தைரோட்ரோப்சு தைராய்டு-தூண்டுதல் கார்மோன் (TSH) 3–5%
4. கோனாடோட்ரோப்சு கோனாடோட்ரோபிக் கார்மோன்கள் = லுடினைசிங் கார்மோன் (LH) மற்றும் போலிகல்-ஸ்டிமுலேட்டிங் கார்மோன் (FSH) 3–5%
5. லாக்டோட்ரோப்கள் புரோலாக்டின் (PRL) 3–5%

செயல்பாடு

தொகு
 
பிட்யூட்டரி இயக்குநீர்

முன் பிட்யூட்டரி கார்மோன்களை சுரப்பதன் மூலம் பல உடலியல் செயல்முறைகளை ஒழுங்குபடுத்துகிறது. இதில் மன அழுத்தம் (அண்ணீரகப் புறணியூக்க இயக்குநீர் சுரப்பதன் மூலம்), வளர்ச்சி (வளர்ச்சி இயக்குநீர் மூலம்), இனப்பெருக்கம் (கருமுட்டை தூண்டும் இயக்குநீர் மற்றும் லூட்டினைசிங் இயக்குநீர் சுரப்பதன் மூலம்), வளர்சிதை மாற்ற விகிதம் (தைரோட்ரோபின் சுரப்பதன் மூலம்) மற்றும் பாலூட்டுதல் (புரோலாக்டின் சுரப்பதன் மூலம்) ஆகியவை அடங்கும். இடைநிலை மடல் மெலனோசைட்-தூண்டுதல் கார்மோனை ஒருங்கிணைத்து சுரக்கிறது. பின்புற பிட்யூட்டரி (அல்லது நியூரோகைபோபிசிசு) என்பது சுரப்பியின் மடல் ஆகும். இது பிட்யூட்டரி தண்டு (இன்பண்டிபுலர் தண்டு அல்லது இன்புண்டிபுலம் என்றும் அழைக்கப்படுகிறது) எனப்படும் ஒரு சிறிய குழாய் வழியாக இடைநிலை எமினென்சு மூலம் ஐப்போத்தலமசுடன் செயல்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது கைட்ரோ எலக்ட்ரோலைடிக் நிலைத்தன்மையை (வாசோபிரெசின் சுரப்பதன் மூலம்), பிரசவத்தின் போது கருப்பைச் சுருக்கம் மற்றும் மனித இணைப்பு (ஆக்சிடாசின் சுரப்பதன் மூலம்) ஆகியவற்றை ஒழுங்குபடுத்துகிறது.

முன்புறம்

தொகு

முன் பிட்யூட்டரி ஹகார்மோன்களை ஒருங்கிணைத்து சுரக்கிறது. குறிப்பிடப்படும் அனைத்து வெளியிடும் கார்மோன்கள் (-RH) வெளியிடும் காரணிகள் (-RF) என்றும் குறிப்பிடலாம்.

சோமாடோட்ரோப்கள் :

  • மனித வளர்ச்சி கார்மோன் (HGH), 'வளர்ச்சி கார்மோன்' (GH) அல்லது சோமாடோட்ரோபின் என்றும் குறிப்பிடப்படுகிறது. இது ஹைபோதாலமிக் வளர்ச்சி கார்மோன்-வெளியிடும் கார்மோனின் (GHRH) செல்வாக்கின் கீழ் வெளியிடப்படுகிறது மற்றும் கைபோதாலமிக் வளர்ச்சியூக்க்கத் தடுப்பி மூலம் தடுக்கப்படுகிறது .

கார்டிகோட்ரோப்கள் :

  • முன்னோடி புரோபியோமெலனோகார்டின் புரதத்திலிருந்து பிளவுபட்டு, அண்ணீரகப் புறணியூக்க இயக்குநீர் (ACTH) மற்றும் பீட்டா-எண்டோர்பின் மற்றும் மெலனோசைட்-தூண்டுதல் கார்மோன் ஆகியவை அடங்கும்.[7]

தைரோட்ரோப்சு :

  • தைரோட்ரோபின் (TSH) ஐப்போதாலமிக் தைரோட்ரோபின்-வெளியிடும் கார்மோனின் (TRH) தூண்டு கீழ் வெளியிடப்படுகிறது மற்றும் சோமாடோசுடாடின் மூலம் தடுக்கப்படுகிறது.

கோனாடோட்ரோப்சு :

லாக்டோட்ரோப்கள் :

  • புரோலாக்டின் (PRL), கைபோதாலமிக் டிஆர்ஹெச், ஆக்சிடோசின், வாசோபிரசின், வாசோஆக்டிவ் குடல் பெப்டைட், ஆஞ்சியோடென்சின் II, நியூரோபெப்டைட் ஒய், கேலனின், பொருள் பி, பாம்பெசின் போன்ற பெப்டைடுகள் (காசுட்ரின் பைப்டைட் மற்றும் நீரை வெளியிடும்) ஆகியவற்றால் சீரற்ற முறையில் தூண்டப்படுகிறது. நியூரோடென்சின், மற்றும் கைபோதாலமிக் டோபமைனால் தடுக்கப்படுகிறது.[8]

இந்த கார்மோன்கள் ஐப்போதாலமசின் தூண்டுதலின் கீழ் முன்புற பிட்யூட்டரியிலிருந்து வெளியிடப்படுகின்றன. ஐப்போதாலமிக் கார்மோன்கள் கைபோதாலமிக்-கைபோபிசியல் சிரை அமைப்பல் எனப்படும் ஒரு சிறப்பு தந்துகி அமைப்பின் மூலம் முன்புற மடலில் சுரக்கப்படுகின்றன.

பின்புறம்

தொகு

பின்புற பிட்யூட்டரி சுரப்பி பின்வரும் முக்கியமான நாளமில்லா கார்மோன்களை சேமித்து சுரக்கிறது (ஆனால் ஒருங்கிணைக்கவில்லை):

மாக்னோசெல்லுலர் நியூரான்கள் :

  • ஆன்டிடியூரிடிக் ஹார்மோன் (ADH, வாசோபிரசின் மற்றும் அர்ஜினைன் வாசோபிரசின் ஏவிபி என்றும் அழைக்கப்படுகிறது), இதில் பெரும்பாலானவை ஐப்போதாலமசில் உள்ள சுப்ராப்டிக் உட்கருவிலிருந்து வெளியிடப்படுகின்றன.
  • ஆக்சிடாசின், பெரும்பாலானவை கைபோதாலமசில் உள்ள பாராவென்ட்ரிகுலர் உட்கருவிலிருந்து வெளியிடப்படுகின்றன. நேர்ப்பின்னூட்டத்தை உருவாக்கும் சில கார்மோன்களில் ஆக்சிடாசின் ஒன்றாகும். எடுத்துக்காட்டாக, கருப்பைச் சுருக்கங்கள் பின்புற பிட்யூட்டரியிலிருந்து ஆக்சிடாசின் வெளியீட்டைத் தூண்டுகிறது. இது கருப்பைச் சுருக்கங்களை அதிகரிக்கிறது. இந்த நேர்ப்பின்னூட்டம் பிரசவகாலம் முழுவதும் தொடர்கிறது.

கார்மோன்கள்

தொகு
  • Chromophil
  • Acidophil cell
  • Basophil cell

மேற்கோள்கள்

தொகு
  1. "[Arteries to the pituitary]". Nippon Rinsho 51 (10): 2550–4. 1993. பப்மெட்:8254920. 
  2. Mancall, Elliott L.; Brock, David G., eds. (2011). "Cranial Fossae". Gray's Clinical Anatomy. Elsevier Health Sciences. p. 154. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4377-3580-2.
  3. "Anatomy, Head and Neck, Pituitary Gland". StatPearls [Internet] (StatPearls Publishing). Jan 2020. பப்மெட்:31855373. https://www.ncbi.nlm.nih.gov/books/NBK551529/. பார்த்த நாள்: 24 Sep 2020. 
  4. 4.0 4.1 Melmed, Shlomo (2011). The Pituitary - (Third ed.). San Diego, CA: Academic Press is an imprint of Elsevier. pp. 23–25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-380926-1.
  5. 5.0 5.1 Yadav, Pratiksha; Singhal, Shubham; Chauhan, Surbhi; Harit, Saumya (2017). "MRI Evaluation of Size and Shape of Normal Pituitary Gland: Age and Sex Related Changes". Journal of Clinical and Diagnostic Research. doi:10.7860/JCDR/2017/31034.10933. http://jcdr.net/article_fulltext.asp?issn=0973-709x&year=2017&volume=11&issue=12&page=TC01&issn=0973-709x&id=10933. 
  6. Textbook of Medical Physiology. Elsevier Saunders.
  7. Dall’Olmo, Luigi; Papa, Nicole; Surdo, Nicoletta Concetta; Marigo, Ilaria; Mocellin, Simone (2023-08-22). "Alpha-melanocyte stimulating hormone (α-MSH): biology, clinical relevance and implication in melanoma". Journal of Translational Medicine 21 (1): 562. doi:10.1186/s12967-023-04405-y. பன்னாட்டுத் தர தொடர் எண்:1479-5876. பப்மெட்:37608347. 
  8. Shlomo Melmed (3 December 2010). The pituitary. Academic Press. p. 40. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-380926-1.

வெளி இணைப்புகள்

தொகு

வார்ப்புரு:Endocrine system

"https://ta.wikipedia.org/w/index.php?title=கபச்_சுரப்பி&oldid=4099543" இலிருந்து மீள்விக்கப்பட்டது