புரோவா சக்மா

புரோவா சக்மா (Prova Chakma) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மிசோரம் சட்டமன்றத்தில் உறுப்பினராக உள்ளார். இவர் தற்போது லுங்லேய் மாவட்டத்தின் மேற்கு துய்புயி தொகுதியில் இருந்து தேந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார்.[1][2][3]

புரோவா சக்மா
மிசோரம் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2023
முன்னையவர்நிகார் காந்தி சக்மா
தொகுதிமேற்கு துய்புயி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1975 (அகவை 48–49)
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிமிசோ தேசிய முன்னணி
முன்னாள் கல்லூரிவிநாயகா மிசன் பல்கலைக்கழகம்
வேலைஆசிரியர்

2023 ஆம் ஆண்டு நடைபெற்ற மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் மிசோ தேசிய முன்னணி கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இவர், காங்கிரசு கட்சியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் நிகார் காந்தி சக்மாவை 711 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[4][5] 2023 ஆம் ஆண்டில் சக்மா உட்பட மூன்று பெண்கள் மட்டுமே சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[6][7][8]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

தமிழ்நாட்டின் விநாயக மிசன் பல்கலைக்கழகத்தில் இவர் முதுகலைப் பட்டம் பெற்றார். ஓர் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவர் சியாமல் காந்தி சக்மா என்பவரை மணந்தார். [9]

மேற்கோள்கள்

தொகு
  1. "Member of Mizoram Legislative Assembly". mizoram.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2023-12-07.
  2. "West Tuipui Assembly Election Results 2023 Highlights: MNF's Prova Chakma defeats INC's Nihar Kanti Chakma with 711 votes". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-07.
  3. "Mizoram Assembly Election Result 2023: ZPM secures majority in state; check out the list of winners and losers". Zee Business. 2023-12-04. பார்க்கப்பட்ட நாள் 2023-12-09.
  4. "Mizoram 2023 highlights: MNF wins Thorang, West Tuipui, Tuichawng; ZPM gets Lunglei South". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-12-04. பார்க்கப்பட்ட நாள் 2023-12-07.
  5. "Prova Chakma Election Results 2023: News, Votes, Results of Mizoram Assembly". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-07.
  6. "Mizoram Election Results Usher in New Politics and Developmental Challenges". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2023-12-07.
  7. "Three Women Clinch Wins In Mizoram Elections, Paves Way For Gender Diversity". Northeast Today (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-12-05. பார்க்கப்பட்ட நாள் 2023-12-07.
  8. "Mizoram Assembly polls 3 women candidates win elections". The Week (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-07.
  9. "Prova Chakma(MNF):Constituency- WEST TUIPUI (ST)(LUNGLEI) - Affidavit Information of Candidate:". www.myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2023-12-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோவா_சக்மா&oldid=4081395" இலிருந்து மீள்விக்கப்பட்டது