புர்கா ஆறு

இந்தியா, சார்க்கண்டில் உள்ள ஆறு

புர்கா ஆறு (Burha River) என்பது இந்திய மாநிலமான சார்க்கண்டில் உள்ள பலமு பிரிவின் லதேஹர் மாவட்டத்தில் பாயும் ஆறாகும். இது புர்ஹாக் ஆறு என்றும் அழைக்கப்படுகிறது.

புர்கா ஆறு
புர்ஹாக் ஆறு
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்சார்க்கண்டு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்வடக்கு கோயல் ஆறு

பெத்லா தேசிய பூங்காவின் தெற்கே சற்று உயரமான கிண்ண வடிவ செச்சாரி பள்ளத்தாக்கு உள்ளது. இதைச் சுற்றி உயரமான மலைத்தொடர் உள்ளது. கிண்ணத்தின் விளிம்புப் பகுதியில் நீர்நிலையை உருவாக்குகிறது. இந்த நீர்நிலையிலிருந்து 10க்கும் மேற்பட்ட ஆறுகள் தோன்றுகின்றன. இவை அனைத்தும் ஒன்றிணைந்து வடக்கு கோயலின் முக்கிய துணை ஆறுகளின் ஒன்றான புர்கா ஆற்றினை உருவாக்குகின்றன.[1]

செச்சாரி பள்ளத்தாக்கின் அனைத்து பக்கமும் உயரமான மலைகளால் சூழப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தாக்கின் மேற்கில் சிர்குஜாவின் பெரிய நிலத்தின் சிறு பகுதி, தெற்கில் ராஞ்சி மாவட்டத்தில் உள்ள பார்வே பள்ளத்தாக்கு, கிழக்கில் நெதர்ஹாட் மற்றும் பக்ரிபட் மற்றும் வடக்கே கோட்டையால் சிறிய முகடுப் பகுதி 910 மீட்டர் உயரமுடைய தமோல்கர் மற்றும் புர்ஹா பஹார்ஆகியவற்றைக் வடிநில படுகையைக் கொண்டுள்ளது.[2]

இதன் மேற்பகுதியில் புர்கா ஆறு மூன்று அருவிகளைக் கொண்டுள்ளது: உலோத் நீர்வீழ்ச்சி அல்லது புர்காக் நீர்வீழ்ச்சி. புர்காக அருவி 142 மீட்டர்கள் (466 அடி) ) உயரமுடையது. குதம்காக் அருவி 36.57 மீட்டர்கள் (120.0 அடி), மற்றும் கராகுக்ரா அருவி, 7.62 மீட்டர்கள் (25.0 அடி) உயரமுடையன.

சில இடங்களில் இந்த ஆறு சார்க்கண்டு மற்றும் சத்தீசுகர் இடையே மாநில எல்லையாக உள்ளது. இங்குள்ள பாறை ஒன்றில் மழை பெய்யும் போது ஆற்றில் அதிக அதிக அளவு தண்ணீர் செல்லும். ஆனால் வறண்ட மாதங்களில் கிட்டத்தட்ட ஆற்றுப்படுகை முழுவதும் காய்ந்துவிடுகின்றது. உலோத் நீர்வீழ்ச்சியிலிருந்து பாகேசம்பா வரை அழகான காடுகள் வழியாக ஆறு பாய்ந்து செல்கிறது. குட்கு மேலே பாகேச்சம்பாவில் பாய்ந்து வடக்கு கோயலில் கலக்கின்றது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Netarhat - In The Line of Fire". Archived from the original on 2011-07-16. பார்க்கப்பட்ட நாள் 2010-04-29.
  2. "Gazetteer of Palamu District". Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2010-04-29.
  3. "River System" (PDF). Archived from the original (PDF) on 13 July 2011. பார்க்கப்பட்ட நாள் 2010-04-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புர்கா_ஆறு&oldid=3396586" இலிருந்து மீள்விக்கப்பட்டது