புறணி (தாவரவியல்)

புறணியானது தாவரப் பகுதிகளான வேர், தண்டு, இலை ஆகியவற்றின் உட்புறத்தில் புறத்தோலுக்கும் (எபிடெர்மிஸ்) அகத்தோலுக்கும் (எண்டோடெர்மிஸ்) இடைப்பட்ட பகுதியாகும். புறணி செல்களின் முக்கிய பணி சேமித்தல் ஆகும்.

குறுக்கு வெட்டு தோற்றம் ஆளி (செடி) தாவரத் தண்டு:
1. அகணி
2. காழ்
3. காழ் I
4. உரியம் I
5. அடியிழையம் (தாவரத்தோல் நார்)
6. புறணி
7. மேற்தோல்

வேரில் புறணியானது மெல்லிய செல் சுவரையும், செல் இடைவெளிகளையும் கொண்ட பாரன்கைமா செல்களை மட்டும் கொண்டுள்ளது. இங்கு வாயுப் பரிமாற்றம் எளிதாக நிகழ்கிறது. இச் செல்களில் உணவுப் பொருள்கள் சேமிக்கப்பட்டுள்ளன. இச் செல்கள் முட்டை வடிவத்திலோ அல்லது கோள வடிவத்திலோ காணப்படும். செல்களிடையே ஏற்படும் அழுத்தத்தின் காரணமாக இச் செல்கள் பல கோண வடிவத்தில் காணப்படும். இச் செல்களில் பசுங்கணிகங்கள் காணப்படுவதில்லை. ஸ்டார்ச் துகள்கள்[1] சேமிக்கப்பட்டுள்ளன. இச் செல்களில் லுயூக்கோபிளாஸ்ட்கள் காணப்படுகின்றன.

தாவரத் தண்டின் புறணியானது புறத்தோலுக்கு (எபிடெர்மிஸ்) உட்புறமாக காணப்படுகிறது. இங்கு புறத்தோலானது மூன்று பகுதிகளாக வேறுபட்டுள்ளது. புறத்தோலுக்கு உள்பக்கமாக ஒரு சில அடுக்கு கோலென்கைமா செல்களான பகுதி காணப்படுகிறது. இது ஹைப்போடெர்மிஸ் அல்லது புறத்தோலடித்தோல் எனப்படும். இது தண்டிற்கு உறுதியினைத் தருகிறது. இச்செல்கள் உயிருள்ளவை. இச்செல் சுவர்கள் மூலையில் தடிப்புற்று காணப்படுகின்றன. ஹைப்போடெர்மிஸ் உட்புறமாக ஒரு சில அடுக்கு குளோரேன்கைமா செல்களால் ஆன பகுதி காணப்படுகிறது. இப்பகுதி ஒளிசெயற்கையை மேற்கொள்கிறது. சில ரெசின் குழாய்களும் காணப்படுகிறது. புறணியின் கடைசி அடுக்கு அகத்தோலாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4919380/
"https://ta.wikipedia.org/w/index.php?title=புறணி_(தாவரவியல்)&oldid=2527443" இலிருந்து மீள்விக்கப்பட்டது