புறாத்தீவு தேசிய பூங்கா
புறாத்தீவு தேசியப் பூங்கா (Pigeon Island National Park, உள்ளூர் வழக்கு: புறா மலை) என்பது இலங்கையிலுள்ள இரு கடல்சார் தேசியப் பூங்காக்களில் ஒன்று. இப்பூங்கா கிழக்கு மாகாணத்திலுள்ள நிலாவெளி கடற்கரையிலிருந்து 1 கிமீ தொலைவில் உள்ளது. இத்தீவின் பெயர் அங்கு வாழும் பாறைப் புறாவின் பெயரால் ஏற்பட்டது. இத் தேசியப் பூங்கா இலங்கையிலுள்ள சிறந்த பவளப் பாறைகள் சிலவற்றைக் கொண்டுள்ளது.[1] புறாத்தீவு 1963இல் புகலிடமாகக் குறிக்கப்பட்டது. 2003 இல் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இத்தேசியப் பூங்கா இலங்கையில் 17வது தேசியப் பூங்காவாகும். பிரித்தானிய இலங்கையில் இது சுடு பயிற்சித் தளமாகப் பயன்படுத்தப்பட்டது.[2] புறாத்தீவு 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட இடங்களில் சிலவற்றில் ஒன்றாகும்.[3]
புறாத்தீவு தேசிய பூங்கா Pigeon Island National Park | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
புறாத்தீவு தேசிய பூங்கா நுளைவு | |
அமைவிடம் | கிழக்கு மாகாணம், இலங்கை |
அருகாமை நகரம் | திருகோணமலை |
ஆள்கூறுகள் | 8°43′N 81°12′E / 8.717°N 81.200°E |
பரப்பளவு | 471.4 எக்டேர்கள் (1.820 sq mi) |
நிறுவப்பட்டது | 2003 |
நிருவாக அமைப்பு | வனவுயிர் பாதுகாப்புத் திணைக்களம், இலங்கை |
பெளதீக அமிசங்கள்
தொகுபுறாத்தீவு இரு தீவுகளைக் கொண்டு, பெரிய புறாத்தீவும் சிறிய புறாத்தீவும் ஆக காணப்படுகின்றது. பெரிய புறாத்தீவு கரையில் பவளப் பாறைகளைக் கொண்டு 200 மீ நீளமாகவும், 100 மீ அகலமாகவும் காணப்படுகின்றது. சிறிய புறாத்தீவு பாறை திட்டுக்களினால் சூழப்பட்டுக் காணப்படுகின்றது. இத் தேசிய பூங்கா இலங்கையின் உலர் வலயத்தில் காணப்படுகின்றது. இதன் வருடாந்த வெப்பநிலை 27.0 °C (80.6 °F) ஆகும்.[1] வருடாந்த மழைவீழ்ச்சி 1,000–1,700 மில்லிமீட்டர்கள் (39–67 அங்)க்கு இடைப்பட்டதாகும். இது ஒக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலத்தில் அதிக மழையினைப் பெறுகின்றது.
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "Pigeon Island National Park". iwmi.org. International Water Management Institute. Archived from the original on 2011-10-07. பார்க்கப்பட்ட நாள் 2009-06-22.
- ↑ (சிங்கள மொழி) Senarathna, P.M. (2009). Sri Lankawe Jathika Vanodhyana (2nd ed.). Sarasavi Publishers. pp. 220–221. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-573-346-5.
{{cite book}}
:|access-date=
requires|url=
(help) - ↑ Kariyawasam, Dayananda (3 March 2005). "Major plan under way to restore Lanka's natural ecosystems". Daily News இம் மூலத்தில் இருந்து 2012-10-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121010202117/http://www.dailynews.lk/2005/03/03/fea01.html. பார்த்த நாள்: 2009-06-22.