புலிக்குளம் காளை

புலிக்குளம் என்பது தமிழ்நாட்டின் புகழ்மிக்க காளை மாட்டு இனங்களில் ஒன்றாகும். புலிக்குளம் என்னும் ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. ஜல்லிகட்டுக்கு என்று பிரத்தேகமாக வளர்க்கப்படும் காளையினம் புலிக்குளம். புலிக்குளம் இன பசுக்களின் பாலே சிறந்தது நிருபிக்கப்பட்டுள்ளது. மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இது ஜல்லிக்கட்டு விளையாட்டிற்காக விரும்பி வளர்க்கப்டும் காளை இனமாகும். பெரிய திமிலும், கூரிய கொம்பும், சீறிப்பாயும் வீரியமும் மிக்க காளை இனம் இந்த புலிக்குளம் காளை இனமாகும்,

அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுக்களில் அதிகம் பயன்படுத்தப்படுவது இந்த புலிக்குளம் காளை. ஒரு புலியைக்கூட தன் கொம்பின் வலிமையால் குத்திக்கொன்றுவிடும் வலிமை பெற்றது இந்த காளை எனவும் சொல்லப்படுகிறது.[1]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புலிக்குளம்_காளை&oldid=2623659" இலிருந்து மீள்விக்கப்பட்டது