புலியனூர் மகாதேவர் கோயில்

புலியனூர் மகாதேவர் கோயில்(Puliyannoor Mahadeva Temple) என்பது ஒரு இந்து கோயில். இக்கோவில் இந்திய மாநிலமான கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் புலியனூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இக்கோயில் பொதுவாக செருத்தில் வலுத்து புலியனூர் (சிறியதில் பெரியது) என்று மலையாளத்தில் அழைக்கப்படுகிறது. புலியனூர் ஓராய்மா கோயில் தேவஸ்வம் என்று அழைக்கப்படும் நம்பூதிரி குடும்பங்கள் கோயிலை நிர்வகிக்கின்றன. இது பாலா என்னும் இடத்திலிருந்து சுமார் 3 கிமீ (1.9 மைல்) மற்றும் எட்டுமனூரிலிருந்து 13 கிமீ (8.1 மைல்) தொலைவில் உள்ளது.[1][2]

புலியனூர் மகாதேவர் கோயில்
கோயிலின் பிரதான கோபுரம்
புலியனூர் மகாதேவர் கோயில் is located in கேரளம்
புலியனூர் மகாதேவர் கோயில்
கேரளாவில் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளா
மாவட்டம்:கோட்டயம்
அமைவு:புலியனூர்
ஆள்கூறுகள்:9°41′55″N 76°37′59″E / 9.69861°N 76.63306°E / 9.69861; 76.63306
கோயில் தகவல்கள்
மூலவர்:புலியனூரப்பன் (சிவன்)
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:பாரம்பரிய கேரள பாணி
வரலாறு
அமைத்தவர்:சத்தம்பலக்கல் சோனார் செட்டியார்

இறைவன் தொகு

இக்கோயில் இறைவன் சிவனுக்காக படைத்தளிக்கப்பட்ட கோயில் ஆகும்.[3]கணபதி, யோகேஸ்வரர், சாஸ்தா, நாக கிருஷ்ணர், தேவி, யட்சியம்மா ஆகியோர் இக்கோயிலின் துணை தெய்வங்கள் ஆகும்.

வரலாறு தொகு

இந்த கோயிலை 'சத்தம்பலக்கல் (நலோனில்) சோனார் செட்டியார்' என்ற நபர் கட்டியுள்ளார்.

விழாக்கள் தொகு

இக்கோவிலின் வருடாந்திர திருவிழா மலையாள மாதமான கும்பத்தில்(பிப்ரவரி/மார்ச்) எட்டு நாட்களுக்கு நடத்தப்படுகிறது. வருடாந்திர திருவிழா தவிர, விஷூ, நவராத்திரி, மண்டல மகரவிளக்கு மற்றும் மகா சிவராத்திரி ஆகியவை மற்ற முக்கியமான திருவிழாக்கள் ஆகும்.[4][5]

மேற்கோள்கள் தொகு