புலியூர்க் கேசிகன்

எழுத்தாளர், உரையாசிரியர்
(புலியூர்க்கேசிகன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புலியூர்க் கேசிகன் தனித்தமிழ் எழுத்தாளர், உரையாசிரியர், மெய்ப்பு திருத்துநர், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர், சோதிடர், எண்கணித வல்லுநர், செய்யுளாசிரியர், ஆவியியல் ஆய்வாளர், சொற்பொழிவாளர் என்னும் பன்முகம் கொண்டவர்.

புலியூர்க் கேசிகன்
உரையாசிரியர்
பிறப்புக. சொக்கலிங்கம்
16 அக்டோபர் 1923
புலியூர்க்குறிச்சி திருநெல்வேலி மாவட்டம்
இறப்பு17 ஏப்ரல் 1992
சென்னை
இருப்பிடம்சென்னை
இனம்தமிழர்
குடியுரிமைஇந்தியர்
கல்விஇடைநிலை
பணிஎழுத்தாளர்
மெய்ப்புத்திருத்துநர்
பணியகம்தெ. தி. சை. நூற்பதிப்புக் கழகம்
அருணா பப்ளிகேஷன்ஸ்
பாரி நிலையம்
மாருதி பதிப்பகம்
அறியப்படுவதுஎளிய உரை
சமயம்சைவம்
பெற்றோர்கந்தையா பிள்ளை, மகாலட்சுமி அம்மையார்
வாழ்க்கைத்
துணை
சுந்தரத்தம்மையார்
பிள்ளைகள்ஒரு மகனும் மூன்று மகள்களும்
உறவினர்கள்மறைமலை அடிகள்
நீலாம்பிகை அம்மையார்

பிறப்பு தொகு

நெல்லை மாவட்டத்தில் உள்ள புலியூர்க் குறிச்சி என்னும் சிற்றூரில் கந்தசாமி பிள்ளை, மகாலட்சுமி அம்மையார் ஆகியோருக்கு அக்டோபர் 16, 1923 ஆம் நாள் புலியூர்க் கேசிகன் பிறந்தார். இவருக்கு சொக்கலிங்கம் எனப் பெற்றோர் பெயரிட்டனர். அவர் தந்தைக்கு வேளாண்மை முதன்மைத் தொழில் ; மளிகைக்கடை வணிகம் துணைத்தொழில்.[1]

கல்வி தொகு

சொக்கலிங்கம் என்னும் இயற்பெயருடைய புலியூர்க் கேசிகன் [2] தனது ஊருக்கு அருகிலுள்ள டோணாவூரில் தொடக்கக் கல்வியையும் உயர்நிலைப்பள்ளி கல்வியையும் பெற்றார். பின்னர் திருநெல்வேலியில் உள்ள மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் இடைநிலை வகுப்புக் கல்வி (Intermediate) பெற்றார். அப்பொழுது நடைபெற்ற இரண்டாவது இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டார்.[3]

கல்லூரிக்கல்விக்குப் பின்னர் தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார், தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகள், தமிழ்த்தென்றல் திரு. வி. கலியாணசுந்தரனார், பேராசிரியர் முனைவர் மு. வரதராசன் ஆகியோரிடம் தொடர்புகொண்டு தன்னுடைய தமிழறிவை வளர்த்துக்கொண்டார்.

பணி தொகு

கல்லூரிக் கல்வியை நிறைவு செய்த புலியூர்க் கேசிகன், நெல்லை மாவட்டத்தில் உள்ள வடுகச்சி மலைப்பள்ளியில் மூன்று ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். அப்பொழுது டோணாவூர் மருத்துவமனையில் மறைமலையடிகள் மகளும் தனித்தமிழ் இயக்கத்தின் நிறுவுநர்களில் ஒருவருமான தமிழ்ப் பேராசிரியர் நீலாம்பிகை அம்மையார் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கேசிகனும் அவர் குடும்பத்தினரும் பேருதவியாக இருந்தனர். இதனால் மகிழ்ந்த நீலாம்பிகை அம்மையார், தன் கணவரும் திருநெல்வேலி தென்னிந்திய சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் அமைச்சருமான திருவரங்கனாரிடம் புலியூர்க் கேசிகனைப் பற்றி எடுத்துரைத்தார். இதன் விளைவாக கேசிகன் அந்த நூற்கழகத்தின் திருநெல்வேலிக் கிளையில் மேலாளராகப் பணியில் அமர்த்தப்பட்டார். புலியூர்க் கேசிகன் பத்தாண்டுகள் அப்பணியை மேற்கொண்டார்.[1]

பின்னர் சென்னைக்கு இடம்பெயர்ந்தார். அருணா வெளியீடு என்னும் பதிப்பகத்தில் இரண்டு ஆண்டுகள் மேலாளராகப் பணியாற்றினார். பின்னர் பாரி நிலையம், மாருதி பதிப்பகம் ஆகியவற்றில் நீண்ட நாள்கள் பணியாற்றினார்.[2]

குடும்பம் தொகு

திருவரங்கனார் – நீலாம்பிகை அம்மையார் இணையர் மகள் சுந்தரத்தம்மையாரை புலியூர்க் கேசிகன் மணந்துகொண்டார். அவ்விணையர்களுக்கு கந்தவேலன் என்னும் ஒரு மகனும் நீலச்செல்வி என்ற மகாலட்சுமி, சொ. கலைச்செல்வி. மலர்ச்செல்வி என்னும் மூன்று மகள்களும் பிறந்தனர்.[2]

தமிழ் எழுத்துப் பணிகள் தொகு

அருணா வெளியீடு, பாரி நிலையம், வானதி பதிப்பகம் ஆகிய பதிப்பகங்களின் வழியாக 50 இலக்கிய நூல்களுக்கு உரைகள்; 10 சோதிட நூல்கள்; 5 உளவியல் நூல்கள்; 3 யோக நூல்கள்; 5 ஆன்மிக நூல்கள்; 2 வரலாற்று நூல்கள்; 7 குறள் தொடர்பான நூல்கள்; தொகுப்பு, ஆராய்ச்சி, கவிதை ஆகியன உள்ளடக்கிய துறைகளில் 8 நூல்கள் என 90 நூல்களை புலியூர்க் கேசிகன் படைத்திருக்கிறார்.[1] அவற்றுள் சில:

தமிழியல் பெரும் பணிகள் தொகு

தமிழ் பேரிலக்கியங்களுக்கும்  பெருங் காப்பியங்களுக்கும்  எளிமையான நடையில்  ஜனரஞ்சகமான முறையில் தெளிவுரைகளை  ஏழுதி  வெளியீடு செய்து பெரும்பணி ஆற்றிய பேராளர்.   நவீன தமிழியல் வளர்ச்சிக்கு பல  பேராசிரியர்களையும்  விஞ்சிய வகையில் புலியூர்க் கேசிகன் பணி செய்துள்ளார்.  இத்தகைய ஒரு பெரும் பணியாளணை தமிழ் உலகம் பல டாக்டர் பட்டங்கள்  வழங்கி  அவர் வாழும்போதே வாழ்த்தி  இருக்கவேண்டும்   என கனடாவின்  டொரோண்டோ பல்கலைக் கழகப்   பேராசிரியர் அமுது ஜோசப் சந்திரகாந்தன்  2019 இல் குறிப்பிட்டார்.

உரைநூல்கள் தொகு

சங்க இலக்கியம் தொகு

  1. நற்றிணை – முதற் பகுதி
  2. நற்றிணை – இரண்டாம் பகுதி (1980, பாரி நிலையம், சென்னை)
  3. குறுந்தொகை
  4. ஐங்குறு நூறு – மருதமும் நெய்தலும் (அக்டோபர் 1982, பாரி நிலையம், சென்னை)
  5. ஐங்குறு நூறு – குறிஞ்சியும் பாலையும்
  6. ஐங்குறு நூறு – முல்லை
  7. பதிற்றுப்பத்து
  8. பரிபாடல்
  9. கலித்தொகை (மார்ச் 1958, அருணா பப்ளிகேஷன்ஸ். சென்னை)
  10. அகநானூறு – களிற்றியானை நிரை
  11. அகநானூறு – மணிமிடை பவளம்
  12. அகநானூறு – நித்திலக்கோவை (1962, அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை)
  13. புறநானூறு (1958, அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை); 464 பக்கங்கள்
  14. பத்துப்பாட்டு

பதினென் கீழ்க்கணக்கு தொகு

  1. பழமொழி நானூறு
  2. திருக்குறள் (சூன் 1976, பூம்புகார் பதிப்பகம், சென்னை)

காப்பியங்கள் தொகு

  1. சிலப்பதிகாரம்
  2. மணிமேகலை

பக்தி இலக்கியம் தொகு

  1. திருவாசகம் (திசம்பர் 1964, ஶ்ரீமகள் நிலையம், சென்னை) [4]
  2. ஆண்டாள் திருப்பாவை (திசம்பர் 1959, அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை) [5]

இலக்கணம் தொகு

  1. தொல்காப்பியம் - தெளிவுரையுடன் (1961 அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை)
  2. புறப்பொருள் வெண்பாமாலை
  3. நன்னூல் காண்டிகை

சிற்றிலக்கியம் தொகு

  1. கலிங்கத்துப்பரணி
  2. நளவெண்பா
  3. திருக்குற்றாலக் குறவஞ்சி
  4. முக்கூடற்பள்ளு
  5. தகடூர் யாத்திரை

தனிப்பாடல்கள் தொகு

  1. காளமேகம் தனிப்பாடல்கள்
  2. ஒளவையார் தனிப்பாடல்கள்
  3. கம்பன் தனிப்பாடல்கள்

பாலியல் இலக்கியம் தொகு

  1. அதிவீரராமனின் இல்லற ரகசியம்
  2. அதிவீரராமனின் கொக்கோகம்

ஆய்வு நூல்கள் தொகு

  1. முத்தமிழ் மதுரை (30.1.1981)
  2. ஐந்திணை வளம்
  3. புகழ் பெற்ற பேரூர்கள்
  4. புறநானூறும் தமிழர் சமுதாயமும் (திசம்பர் 1964, பசவேசுவரா பிரசுரம், கிருஷ்ணகிரி) [6]
  5. புறநானூறும் தமிழர் நீதியும் (சனவரி 1965, பசவேசுவரா பிரசுரம், கிருஷ்ணகிரி) [7]
  6. பூலித்தேவனா? புலித்தேவனா? (சனவரி 1959, அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை) [8]

சோதிட நூல்கள் தொகு

  1. எண்களின் இரகசியம்
  2. எண்களும் எதிர்காலமும்
  3. ஜாதகமும் குடும்ப வாழ்க்கையும்
  4. திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தங்கள் (1980 மாருதி பதிப்பகம், சென்னை) [9]

உளவியல் நூல்கள் தொகு

  1. மனோசக்தி

யோக நூல்கள் தொகு

  1. தியானம்

ஆன்மிக நூல்கள் தொகு

  1. ஶ்ரீ சந்தோஷி மாதா

குறள் தொடர்பான நூல்கள் தொகு

  1. குறள் தந்த காதல் இன்பம் (அக். 1959, அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை) [10]

வரலாற்று நூல்கள் தொகு

  1. அறநெறிச் செல்வர்
  2. புலவரும் புரவலரும்

பிற தொகு

  1. சிங்கார நாயகிகள்
  2. பெண்மையின் ரகசியம்

தொகுப்பு தொகு

  1. திருவருட்பா பாராயணத் திரட்டு, (திசம்பர் 1964, ஶ்ரீமகள் நிலையம், சென்னை) [11]

பிற பணிகள் தொகு

பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், இலக்கிய அமைப்புகள் ஆகியவை நடத்தும் விழாக்களிலும் வானொலியிலும் தமிழ்மொழி, இலக்கியம் தொடர்பாக உரையாற்றினார்.

விகடன், அமுதசுரபி, குமுதம், கல்கண்டு, குங்குமம், தாய், இதயம் பேசுகிறது, ஞானபூமி உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் பல்வேறு பொருள்களில் எழுதினார்.

நந்திவாக்கு, சோதிட நண்பன் உள்ளிட்ட சில இதழ்களின் ஆசிரியராக இருந்திருக்கிறார்.

பெற்ற சிறப்புகள் தொகு

புலியூர்க் கேசிகனின் தமிழ்த்தொண்டைப் பாராட்டி பின்வரும் அமைப்புகள் அவருக்குச் சிறப்புச் செய்திருக்கின்றன:

  1. தென்னிந்திய இருப்புப்பாதை நிறுவனம்
  2. முத்தமிழ் மன்றம்
  3. சிறீராம் நிறுவனம்
  4. கம்பன் கழகம்
  5. திருவள்ளுவர் இலக்கிய மன்றம்
  6. பன்னாட்டு தமிழுறவு மன்றம்

நாட்டுடைமையாக்கம் தொகு

புலியூர்க் கேசிகனின் படைப்புகளை 2009 ஆம் ஆண்டு தமிழக அரசு நாட்டுடமை ஆக்கியது.

மறைவு தொகு

புலியூர்க் கேசிகன் தனது 69ஆம் அகவையில் சென்னையில் ஏப்ரல் 17, 1992ஆம் நாள் மரணமடைந்தார்.[2]

சான்றடைவு தொகு

  1. 1.0 1.1 1.2 கலைச்செல்வி, உரையாசிரியர் புலியூர்க் கேசிகன் முதலாண்டு நினைவு மலர், சென்னை, 1993
  2. 2.0 2.1 2.2 2.3 வாழ்க்கைக் குறிப்பு, கெளமாரீசுவரி (பதி), திருக்குற்றாலக் குறவஞ்சி மூலமும் புலியூர்க் கேசிகன் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை, 2009
  3. "புலியூர்க் கேசிகன் நூற்றாண்டு: நினைவுகூரப்பட வேண்டிய பெருஞ்செயல்!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-10-09.
  4. வே. தில்லைநாயகம் (பதி), தமிழ்நாட்டு நூற்றொகை 1965 – பகுதி 3, சென்னை கன்னிமர பொதுநூலக நூலகர், 1973 பக். 68
  5. வே. தில்லைநாயகம் (பதி), தமிழ்நாட்டு நூற்றொகை 1966 – பகுதி 3, சென்னை கன்னிமர பொதுநூலக நூலகர், 1969 பக். 51
  6. வே. தில்லைநாயகம் (பதி), தமிழ்நாட்டு நூற்றொகை 1965 – பகுதி 3, சென்னை கன்னிமர பொதுநூலக நூலகர், 1973, பக். 17
  7. வே. தில்லைநாயகம் (பதி), தமிழ்நாட்டு நூற்றொகை 1965 – பகுதி 3, சென்னை கன்னிமர பொதுநூலக நூலகர், 1973, பக்.18
  8. வே. தில்லைநாயகம் (பதி), தமிழ்நாட்டு நூற்றொகை 1966 – பகுதி 3, சென்னை கன்னிமர பொதுநூலக நூலகர், 1969 பக். 72
  9. வே. தில்லைநாயகம் (பதி), 1980ல் தமிழ்நூல்கள் ஒரு மதிப்பீடு, தமிழ்நாடு பொதுநூலகத் துறை, சென்னை, ஜனவரி 1981 பக். 56
  10. வே. தில்லைநாயகம் (பதி), தமிழ்நாட்டு நூற்றொகை 1966 – பகுதி 3, சென்னை கன்னிமர பொதுநூலக நூலகர், 1969 பக். 19
  11. வே. தில்லைநாயகம் (பதி), தமிழ்நாட்டு நூற்றொகை 1965 – பகுதி 3, சென்னை கன்னிமர பொதுநூலக நூலகர், 1973 பக். 14
"https://ta.wikipedia.org/w/index.php?title=புலியூர்க்_கேசிகன்&oldid=3686555" இலிருந்து மீள்விக்கப்பட்டது