புல்வெட்டா

புல்வெட்டா
வெண்புருவ புல்வெட்டா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பாரடாக்சார்னிதிடே
பேரினம்:
புல்வெட்டா

டேவிட் & ஒவுசுடாலெட், 1877
சிற்றினம்

8, உரையினை காண்க

புல்வெட்டா (Fulvetta) என்பது பாசரைன் பறவைகளின் பேரினமாகும். இப்பேரினம் முதலில் 1877-ல் முன்மொழியப்பட்டது. இது சமீபத்தில் வழக்கமான புல்வெட்டாக்களுக்காக மீண்டும் நிறுவப்பட்டது. இது திமாலிடே (பழைய உலக சிலம்பன்) அல்சிப்பே பேரினத்தைச் சேர்ந்த குருவிகளின் உறவினர்களுடன் நீண்ட காலமாகச் சேர்க்கப்பட்டுள்ளது.[1] ஆனால் இவை உண்மையில் கிளி அலகு பறவைகளுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையவை. எனவே இவை இப்போது பாரடாக்சோர்னிதிடே குடும்பத்தில் வைக்கப்பட்டுள்ளன.

சிற்றினங்கள்

தொகு

புல்வெட்டா பேரினமானது பின்வரும் எட்டு சிற்றினங்களைக் கொண்டுள்ளது.[2]

படம் உள்ளூர் பெயர் அறிவியல் பெயர் பரவல்
  கண்கண்ணாடி புல்வெட்டா புல்வெட்டா ரூஃபிகாபிலா சீனா
இந்தோசீன புல்வெட்டா புல்வெட்டா டானிசி லாவோஸ், வியட்நாம்
சீன புல்வெட்டா புல்வெட்டா ஸ்ட்ரைடிகோலிசு சீனா
  வெண்புருவ புல்வெட்டா புல்வெட்டா வினிபெக்டஸ் தென்கிழக்கு ஆசியாவில் பூட்டான், இந்தியா, மியான்மர், நேபாளம், வியட்நாம்
  சாம்பல் கொண்டை புல்வெட்டா புல்வெட்டா சினிரிசெப்சு மணிப்பூர்
  தைவான் புல்வெட்டா புல்வெட்டா பார்மோசனா தைவான்
  மணிப்பூர் புல்வெட்டா புல்வெட்டா மணிபுரென்சிசு வடகிழக்கு இந்தியா, மியான்மர், யுன்னான்
  பழுப்புத் தொண்டை புல்வெட்டா புல்வெட்டா லுட்லோவி பூட்டான், சீனா, இந்தியா, மியான்மர், நேபாளம்

மேற்கோள்கள்

தொகு
  1. Collar & Robson (2007)
  2. "Sylviid babblers, parrotbills, white-eyes". IOC World Bird List Version 12.2. International Ornithologists' Union. August 2022. பார்க்கப்பட்ட நாள் 19 September 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புல்வெட்டா&oldid=3813398" இலிருந்து மீள்விக்கப்பட்டது