புல்-இ-தருந்தே அராமேயக் கல்வெட்டு
அசோகரின் புல்-இ- தருந்தே அரேமேயப் பாறைக் கல்வெட்டு ( Pul-i-Darunteh Aramaic inscription) ஆப்கானித்தான் நாட்டின் லக்மான் மாகாணத்தில் புல்-இ- தருந்தே எனுமிடத்தில் பேரரசர் அசோகர் கிமு 260-ஆம் ஆண்டில் நிறுவிய அரமேய மொழியில் பொறித்த பாறைக் கல்வெட்டு ஆகும்.[1] இப்பாறைக் கல்வெட்டை 1969-இல் பெல்ஜியத்தின் மானிடவியல் அறிஞர்கள் ஆப்கானித்தானின் லக்மான் பிரதேசத்தில் தற்செயலாக கண்டுபிடித்தனர். 1973-ஆம் ஆண்டில் இதே பகுதியில் இக்கல்வெட்டின் பிற துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. [2]
அசோகரின் புல்-இ-தருந்தே அராமேயக் கல்வெட்டு | |
செய்பொருள் | இயற்கையான கல் |
---|---|
எழுத்து | அரமேயம் |
உருவாக்கம் | ஏறத்தாழ கிமு 260 |
காலம்/பண்பாடு | கிமு 3-ஆம் நூற்றாண்டு |
இடம் | புல்-இ- தருந்தே, லக்மான் மாகாணம், ஆப்கானித்தான் |
தற்போதைய இடம் | புல்-இ- தருந்தே, லக்மான் மாகாணம், ஆப்கானித்தான் |
1935-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட அசோகரின் இந்த அரமேய மொழிப் பாறைக் கல்வெட்டு, 1915-இல் ஜான் மார்ஷல் கண்டுபிடித்த அசோகரின் தட்சசீலம் கல்வெட்டு, அசோகரின் காந்தாரக் கல்வெட்டுகள் மற்றும் அசோகரின் காந்தார அரமேயம் கல்வெட்டுகள் போன்றே உள்ளது.[2]
பாறைக் கல்வெட்டின் உள்ளடக்கம்
தொகுஇக்கல்வெட்டின் உள்ளடக்கம் முழுமை பெறவில்லை. இருப்பினும் கண்டுபிடிக்கப்பட்ட இடம், எழுத்து நடை, பயன்படுத்தப்பட்ட சொற்களஞ்சியம், கல்வெட்டை இப்பகுதியில் அறியப்பட்ட மற்ற அசோகர் கல்வெட்டுகளுடன் இணைக்க உதவுகிறது. மற்ற கல்வெட்டுகளின் வெளிச்சத்தில், புல்-இ-தாருந்தே கல்வெட்டு, பிராகிருதம் மற்றும் அரமேயம் மொழிகளின் கலவையைக் கொண்டுள்ளது, இவை அனைத்தும் அராமைக் எழுத்துக்களில் உள்ளன, மேலும் பிந்தையது முதல் மொழியின் மொழிபெயர்ப்புகளைக் குறிக்கிறது.[3] இந்தக் கல்வெட்டு அசோகரின் ஆணைகள் கொண்டுள்ளது. இதை அசோகரின் சிறு பாறை ஆணைகளில் வகைப்படுத்த முன்மொழிந்துள்ளனர்.[4]
அசோகரின் புல்-இ- தருந்தே அரேமேயப் பாறைக் கல்வெட்டின் எழுத்துப்பெயர்ப்புகள்:
வரிசை | அரமேய மொழி வரிகள் | எழுத்துப்பெயர்ப்பு | ஆங்கில மொழிபெயர்ப்பு |
---|---|---|---|
1 | ...𐡕𐡀 𐡐𐡈... | ...tʾ pṭ... | |
2 | ...𐡅𐡄 𐡋𐡀𐡍𐡔... | ...wh lʾnš... | |
3 | ...𐡅𐡉 𐡎𐡄𐡉𐡕𐡉 𐡋𐡀 𐡈... | ...wy shyty lʾ ṭ... | |
4 | ...𐡌𐡎𐡀𐡓𐡕𐡄𐡎 𐡎𐡄𐡉𐡕𐡉 𐡄𐡅... | ...msʾrths shyty hw... | |
5 | ...𐡇𐡆𐡄 𐡃𐡉𐡇𐡄𐡉𐡕𐡅𐡉 𐡎𐡄𐡉𐡕𐡉... | ...ḥzh dḥhytwy shyty... | |
6 | ...𐡍𐡐𐡓𐡉𐡎 𐡀𐡁𐡄𐡉𐡎𐡉𐡕𐡎 𐡎𐡄𐡉𐡕𐡉... | ...nprys ʾbhysyts shyty... | |
7 | ...𐡓𐡉𐡔𐡅 𐡎𐡄𐡉𐡕𐡉 𐡔𐡉𐡌𐡅 𐡋𐡌𐡊𐡕𐡁 𐡁𐡏𐡌... | ...ryšw shyty šymw lmktb bʿm... | |
8 | ...𐡀𐡇𐡓𐡉𐡍 𐡄𐡅𐡃𐡏𐡍... | ...ʾḥryn hwdʿn... |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ A new Aramaic inscription of Asoka found in the Laghman Valley (Afghanistan), André Dupont-Sommer Proceedings of the Academy of Inscriptions and Belles-Lettres Year 1970 114-1 p.173
- ↑ 2.0 2.1 History of Discoveries and identifications from M. Boyce / F. Grenet, A History of Zoroastrianism, Zoroastrianism under Macedonian and Roman Rule, 1991.
- ↑ Essenism and Buddhism, Dupont-Sommer, André, Proceedings of the Academy of Inscriptions and Belles-Lettres Year 1980 124-4 pp.698-715 p.706
- ↑ Inscriptions of Asoka from DC Sircar p.33
- ↑ W. B. Henning, The Aramaic Inscription of Asoka Found in Lampāka, Bulletin of the School of Oriental and African Studies, University of London, Vol. 13, No. 1 (1949), pp. 80-88
வெளி இணைப்புகள்
தொகு- Asoka - the Buddhist Emperor of India /Chapter 4 by Vincent Arthur Smith: The Rock Edicts (this version)