அசோகரின் காந்தார அரமேயம் கல்வெட்டு

அசோகரின் காந்தார அரமேயம் கல்வெட்டு (Aramaic inscription of Kandahar) பேரரசர் அசோகர் தனது மௌரியப் பேரரசின் பகுதியான தற்கால ஆப்கானித்தான் நாட்டின் காந்தாரப் பகுதியில் அரமேய மொழியில் கிமு 260-இல் கல்வெட்டை நிறுவினார். 24x18 செண்டிமீட்டர் அளவுள்ள இக்கல்வெட்டு கருப்பு நிற சுண்ணாம்புக் கல்லால் ஆனது.

பேரரசர் அசோகரின் காந்தார அரமேயம் கல்வெட்டு
அரமேய மொழிக் கல்வெட்டுக் குறிப்புகள் ரோமன் எழுத்தில் எழுத்துப்பெயர்ப்பு
செய்பொருள்கருப்பு நிற சுண்ணாம்புக் கல்
எழுத்துஅரமேயம்
உருவாக்கம்ஏறத்தாழ கிமு 260
காலம்/பண்பாடு3ஆம் நூற்றாண்டு
இடம்பழைய காந்தாரம், ஆப்கானித்தான்
தற்போதைய இடம்பழைய காந்தாரம், ஆப்கானித்தான்
இந்திய துணைக்கண்டத்தில் அசோகர் நிறுவிய கல்வெட்டுக்கள் மற்றும் தூபிகளைக் காட்டும் வரைபடம்

அசோகரின் காந்தார கிரேக்க மொழிக் கல்வெட்டை கண்டுபிடித்த அதே ஆண்டான 1963-இல் அசோகரின் இந்த அரமேய மொழிக் கல்வெட்டை பழைய காந்தார நகரத் தொல்ல்யல் களத்தில் ஆண்டூரு டூபாண்ட் சோம்மர் கண்டிபிடித்தார். [1][2]

அசோகரின் அரமேய மொழிக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட பழைய காந்தாரத்தின் சிதிலங்கள்

கல்வெட்டின் உள்ளடக்கம்

தொகு

அசோகரின் பெரிய தூண் கல்வெட்டுக்கள் வகையில் சேர்ந்த அரமேய மொழிக் கல்வெட்டு ஆகும். [3][4] n°7-இலிருந்து ஒரு பத்தியின் பதிப்பாக விளக்கப்படுகிறது.[5] இந்த அராமிக் மொழி கல்வெட்டில் பல முறை காணப்படும் SHYTY என்ற சொல் மத்திய இந்திய சொல்லான Sahite உடன் ஒத்துள்ளது. இந்தக் கல்வெட்டு, அதன் பகுதியளவு மற்றும் பெரும்பாலும் தெளிவற்ற தன்மையைக் கொண்டிருந்தாலும், வரிக்கு வரி வர்ணனையாகவோ காணப்படுகிறது.[2] A புகைப்படங்களுடன் கூடிய விரிவான பகுப்பாய்வை ஆசியாடிக் ஜர்னலில் வெளியிடப்பட்டது.[6]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. A new Aramaic inscription of Asoka found in the Laghman Valley (Afghanistan), André Dupont-Sommer Proceedings of the Academy of Inscriptions and Belles-Lettres Year 1970 114-1 p.173
  2. 2.0 2.1 A new Aramaic inscription of Asoka discovered in Kandahar (Afghanistan) Dupont-Sommer, André Records of the sessions of the Academy of Inscriptions and Belles-Lettres Year 1966 110-3 pp.440-451
  3. Handbuch der Orientalistik by Kurt A. Behrendt p.39
  4. "A third fragment found in Kandahar (Kandahar III) is a passage from the seventh pillar edict of which the text of Origin in Mgadh is translated into groups of words in Aramaic "Session Reports - Academy of Inscriptions & belles-lettres 2007, p.1400
  5. Handbuch der Orientalistik by Kurt A. Behrendt =PA39 p.39
  6. "An Indo-Aramaic Inscription of Asoka from Kandahar", Emil Benveniste and André Dupont-Sommer, Journal Asiatique, T. ccliv 1966, pp.437-465.