அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுக்கள்

அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுக்கள் (Major Rock Edicts) பேரரசர் அசோகர் தனது ஆட்சிக் காலத்தில்[1] கிமு 260-ஆம் ஆண்டு முதல் பரத கண்டம் முழுவதும், மௌரியப் பேரரசு பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய தர்ம நெறிகள் குறித்து 14 பெரும் பாறைகளில் கல்வெட்டாக பொறித்து வைத்தார்.

அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுகள்
செய்பொருள்பாறைகள்
உருவாக்கம்கிமு 3-ஆம் நூற்றாண்டு
தற்போதைய இடம்இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானித்தான்
அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுக்கள் is located in South Asia
உதயகோலம்
உதயகோலம்
நித்தூர்
நித்தூர்
Jatinga
Jatinga
Rajula Mandagiri
Rajula Mandagiri

அசோகர் இப்பெரும் பாறைக் கல்வெட்டுக்களில் தனது பெயராக அசோகர் எனப்பொறிப்பதற்கு பதிலாக, தேவனாம்பிரியா ("Beloved of the God", thought to be a general regnal title like "Our Lord") என்றும் பிரியதாசி (Priyadasi)" ("Our Lord Priyadasi") என்றும் பொறித்துள்ளார்.[2]

அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுகள்
  1. அசோகரின் குஜராத் பெரும்பாறைக் கல்வெட்டுக்கள் - ஜூனாகத் & கிர்நார்
  2. நள சோப்ரா, மகாராட்டிரா
  3. சன்னதி, கர்நாடகா
  4. எர்ரகுடி, ஆந்திரப் பிரதேசம்
  5. தௌலி, ஒடிசா
  6. ஜௌகுடா
  7. கல்சி, உத்தராகண்டம்
  8. காந்தாரம், ஆப்கானித்தான்
  9. மன்செரா, பாகிஸ்தான்
  10. சபாஷ் கார்கி, பாகிஸ்தான்

பெரும் பாறைக் கல்வெட்டு 1

தொகு

விழாக்களையும், விலங்குகளைக் கொல்வதையும் அசோகர் தடை செய்தல்.

பெரும் பாறைக் கல்வெட்டு 1
ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பு (கல்சி பிரதி) மொழி: பிராகிருதம், எழுத்துமுறை: பிராமி எழுத்துமுறை

நன்னெறி குறித்த இந்த ஆணை எழுதப்படுவதற்கு தேவனாம்ப்ரிய பிரியதர்சின் காரணமாக இருந்தார். இங்கு எந்த உயிரினமும் கொல்லப்படவோ, பலியிடப்படவோ கூடாது. மற்றும் மேலும் எந்தவொரு விழாச் சந்திப்பும் நடத்தப்படக் கூடாது. ஏனெனில் தேவனாம்ப்ரிய ப்ரியதர்சின் விழாச் சந்திப்புக்களை மிகத் தீயதாகக் கருதுகிறார். மற்றும் மன்னர் தேவனாம்ப்ரிய ப்ரியதர்சினால் சில விழாச் சந்திப்புக்கள் தகுதி வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன. முன்னர் மன்னர் தேவனாம்ப்ரிய ப்ரியதர்சினின் சமயலறையில் பல இலட்சக் கணக்கான விலங்குகள் தினமும் குழம்பு செய்வதற்காகக் கொல்லப்பட்டன. ஆனால் தற்போது, நன்னெறி குறித்த இந்த ஆணை எழுதப்படுவதற்குக் காரணமான போது, பிறகு மூன்று விலங்குகள் மட்டுமே (தினமும்) கொல்லப்படுகின்றன, (அதாவது) இரு மயில்கள் (மற்றும்) ஒரு மான், ஆனால் இந்த மானும் கூட வாடிக்கையாக இல்லை.

ஆனால் இந்த மூன்று விலங்குகளும் கூட (எதிர் காலத்தில்) கொல்லப்படக் கூடாது.

— 1ஆம் பெரும் பாறை ஆணை. ஆய்கன் கூல்ட்சுவின்(1857-1927) ஆங்கில மொழி பெயர்ப்பிலிருந்து. 1925இல் இந்தியாவில் பதிப்பிக்கப்பட்டது. அசோகரின் பொறிப்புகள் பக்.27.
பெரும் பாறைக் கல்வெட்டு 1 (கிர்நார்)

பெரும் பாறைக் கல்வெட்டு 2

தொகு

தமிழக மன்னர்கள் உள்ளிட்ட தன் எல்லையில் இருந்த மன்னர்கள், மானிடர் மற்றும் விலங்குகள் உள்ளிட்டோருக்கு அசோகர் மருத்துவ சேவை அளித்தல், மூலிகைகள் மற்றும் கனித் தாவரங்கள் நடுதல்.

பெரும் பாறைக் கல்வெட்டு 2
ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பு (கல்சி பிரதி) மொழி: பிராகிருதம், எழுத்துமுறை: பிராமி எழுத்துமுறை
அதியமான் நெடுமான் அஞ்சி ஔவையாருக்கு நெல்லிக்கனி வழங்கிய காட்சியைக் காட்டும் தற்காலச் சிலை. பெரும் பாறைக் கல்வெட்டு 2 அசோகரின் மருத்துவ சேவைகளைப் பெற்ற ஒருவராக அதியமானையும் குறிப்பிடுகிறது.[3][4]

மன்னர் தேவனாம்ப்ரிய ப்ரியதர்சினின் நிலங்களில் எங்கும் மற்றும் சோழர், பாண்டியர், சத்தியபுத்தர்,[5] கேலளபுத்தர்,[6] தாமிரபரணி (இலங்கை), அந்தியோகா (அந்தியோச்சுசு) என்ற பெயருடைய யவன (கிரேக்கர்) மன்னர், மற்றும் இந்த அந்தியோகாவின் அண்டை நாட்டவரான பிற மன்னர்கள் இவரது எல்லைகளில் உள்ளோரின் நிலங்கள், எங்கும் இரு (வகை) மருத்துவ ஆட்கள் மன்னர் தேவனாம்ப்ரிய ப்ரியதர்சினால் நிறுவப்பட்டனர், (விரிவாக.) மானிடர்களுக்கான மருத்துவ சிகிச்சை மற்றும் கால்நடைகளுக்கான மருத்துவ சிகிச்சைக்காக.

எங்கெல்லாம் மானிடர்களுக்கு மற்றும் கால்நடைகளுக்குப் பயனளிக்காத மூலிகைகள் இல்லையோ, அங்கெல்லாம் அவை வரவழைக்கப்பட்டு நடப்பட வேண்டும். இதே போல், எங்கெல்லாம் வேர்கள் மற்றும் கனிகள் இல்லையோ, அங்கெல்லாம் அவை வரவழைக்கப்பட்டு நடப்பட வேண்டும்.

சாலைகளுக்கு அருகில் மரங்கள் நடப்பட்டன மற்றும், கால்நடைகள் மற்றும் மானிடர்களின் பயன்பாட்டிற்காக கிணறுகள் தோண்டப்பட்டன.

— 2ஆம் பெரும் பாறை ஆணை. ஆய்கன் கூல்ட்சுவின்(1857-1927) ஆங்கில மொழி பெயர்ப்பிலிருந்து. 1925இல் இந்தியாவில் பதிப்பிக்கப்பட்டது. அசோகரின் பொறிப்புகள் பக்.28. பொது இணையத் தொகுதி.
பெரும் பாறைக் கல்வெட்டு 2 (கிர்நார்)

பெரும் பாறைக் கல்வெட்டு 3

தொகு

அற விதிகள் மற்றும் குடிசார் சேவையாளர்கள் மூலம் அவற்றின் அமல்படுத்தல்.

பெரும் பாறைக் கல்வெட்டு 3
ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பு (கல்சி பிரதி) மொழி: பிராகிருதம், எழுத்துமுறை: பிராமி எழுத்துமுறை

மன்னர் தேவதனாம்ப்ரிய ப்ரியதர்சின் இவ்வாறு பேசுகிறார். நான் 12 ஆண்டுகளுக்கு திருநீராட்டப்பட்டிருந்த போது பின்வருவன என்னால் ஆணையிடப்பட்டன. என்னுடைய நிலப்பரப்பில் எங்கும் யுக்தர்கள், லசுகர்கள், (மற்றும்) பரதேசிகர் ஆகியோர் இந்த காரணத்திற்காக ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முழுமையான சுற்றுப் பயணத்தை (தங்களது பணிகளுக்காக) மேற்கொள்ள வேண்டும், (அதாவது) நன்னடத்தைக்கான அறிவுரைகளை பின்பற்றுவதோடு பிற வணிகத்திற்கான அறிவுரைகளையும் பின்பற்ற வேண்டும்.

தாய் மற்றும் தந்தைக்கு பணிந்து நடத்தல் மெச்சத்தக்கதாகும். நண்பர்கள், தெரிந்தவர்கள், மற்றும் உறவினர்கள் மற்றும் சமணர்கள் ஆகியோரிடம் ஈகைக் குணத்துடன் நடந்து கொள்வது மெச்சத்தக்கதாகும். விலங்குகளைக் கொல்வதைத் தவிர்ப்பது மெச்சத்தக்கதாகும். செலவீனங்களைல் குறைவாகச் செய்தல் (மற்றும்) உடைமைகளைக் குறைவாக வைத்துக் கொள்ளுதல் ஆகியவை மெச்சத்தக்கதாகும்.

இந்த விதிகளை மேற்கொண்ட காரணங்கள் மற்றும் மடலுடன் சேர்த்து பதிய மகாமாத்திரர்களின் மன்றம் யுக்தர்களுக்கு ஆணையிட வேண்டும்.

— 3ஆம் பெரும் பாறை ஆணை. ஆய்கன் கூல்ட்சுவின்(1857-1927) ஆங்கில மொழி பெயர்ப்பிலிருந்து. 1925இல் இந்தியாவில் பதிப்பிக்கப்பட்டது. அசோகரின் பொறிப்புகள் பக்.29. பொது இணையத் தொகுதி.
பெரும் பாறைக் கல்வெட்டு 3 (கிர்நார்)

பெரும் பாறைக் கல்வெட்டு 4

தொகு

அற விதிகள்.

பெரும் பாறைக் கல்வெட்டு 4
ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பு (கல்சி பிரதி) மொழி: பிராகிருதம், எழுத்துமுறை: பிராமி எழுத்துமுறை

முற்காலத்தில் பல நூற்றாண்டுகளாக விலங்குகளைக் கொல்லுதல், உயிர்களுக்குத் தீங்கிழைத்தல், உறவினர்கள் (மற்றும்) சமணர்களுக்கு அவமரியாதை செய்தல் ஆகியவை எப்போதும் ஊக்குவிக்கப்பட்டன.

ஆனால் தற்போது, மன்னர் தேவனாம்ப்ரிய ப்ரியதர்சினின் அறப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றும் முறையின் விளைவாக முரசின் சத்தமானது அறத்தின் சத்தமானது, வான் இரதங்கள், யானைகள், பெரும் நெருப்பு மற்றும் பிற தெய்வீக உருவங்களின் பிரதிநிதித்துவங்கள் மக்களுக்குக் காட்டப்படுகின்றன.

பல 100 ஆண்டுகளாக முன்னர் இல்லாதிருந்த நிலையில் அவை தற்போது, மன்னர் தேவனாம்ப்ரிய ப்ரியதர்சினின் அற அறிவுரைகளின் வழியாக ஊக்குவிக்கப்படுகின்றன. விலங்குகளைக் கொல்வதைத் தவிர்த்தல், உயிர்களுக்குத் தீங்கிழைத்தலைத் தவிர்த்தல், உறவினர்கள் மற்றும் சமணர்களுக்கு மரியாதை செய்தல் (மற்றும்) தாய் மற்றும் தந்தைக்குப் பணிந்து நடத்தல் ஆகியவை ஊக்குவிக்கப்படுகின்றன.

இது மற்றும் பல பிற வழிகளில் அறப் பழக்க வழக்கங்களானவை ஊக்குவிக்கப்படுகின்றன. மற்றும் மன்னர் தேவனாம்ப்ரிய பிரியதர்சின் இந்த அறப் பழக்கவழக்கங்களை எப்போதுமே ஊக்குவிப்பார்.

மன்னர் தேவனாம்ப்ரிய பிரியதர்சினின் மகன்கள், பேரன்கள் மற்றும் கொள்ளுப் பேரன்கள் ஊழி (உலகம் அழியும் நாள்) வரை இந்த அறப் பழக்கவழக்கங்களை எப்போதுமே ஊக்குவிப்பர், அறம் குறித்து (மக்களுக்கு) அறிவுறுத்துவர், அறப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றவும் மற்றும் நன்னடைத்தையுடன் வாழவும் ஊக்குவிப்பர்.

அற அறிவுரைகளே சிறந்த பணியாகும். நன்னடத்தையைத் தவிர்க்கும் (ஒரு நபருக்கு) அறப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவது என்பது (சாத்தியமாகாது). எனவே ஊக்குவிப்பதும், நன்னடத்தையைத் தவிர்க்காமல் இருப்பதும் மெச்சத்தக்கதாகும்.

பின்வரும் தேவைக்காக இது எழுதப்பட்டுள்ளது, (அதாவது) இந்தப் பழக்கவழக்கத்தை ஊக்குவிப்பதற்கு இவர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும், மற்றும் (இதைத்) தவிர்ப்பதை அவர்கள் அங்கீகரிக்கக் கூடாது.

தான் திருநீராட்டப்பட்டு 12 ஆண்டுகள் கழித்த பிறகு மன்னர் தேவனாம்ப்ரிய பிரியதர்சின் இது எழுதப்படுவதற்குக் காரணமானார்.

— 4ஆம் பெரும் பாறை ஆணை. ஆய்கன் கூல்ட்சுவின்(1857-1927) ஆங்கில மொழி பெயர்ப்பிலிருந்து. 1925இல் இந்தியாவில் பதிப்பிக்கப்பட்டது. அசோகரின் பொறிப்புகள் பக்.30. பொது இணையத் தொகுதி.
பெரும் பாறைக் கல்வெட்டு 4 (கிர்நார்)

பெரும் பாறைக் கல்வெட்டு 5

தொகு

மகாமாத்திரர்களின் நியமிப்பும், அவர்களது பங்கும்.

பெரும் பாறைக் கல்வெட்டு 5
ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பு (கல்சி பிரதி) மொழி: பிராகிருதம், எழுத்துமுறை: பிராமி எழுத்துமுறை

மன்னர் தேவனாம்ப்ரிய பிரியதர்சின் (இவ்வாறு) பேசுகிறார்.

நீதி நேர்மை வாய்ந்த செயல்களைப் புரிவது என்பது கடினமானதாகும்/ நீதி நேர்மை வாய்ந்த செயல்களைப் புரிய ஆரம்பிக்கும் ஒருவன் கடினமான செயல்களைச் சாதிக்கிறான்.

தற்போது என்னால் பல நீதி நேர்மை வாய்ந்த செயல்கள் புரியப்பட்டுள்ளன. எனவே எனது மகன்கள் மற்றும் பேரன்கள் மற்றும் எனது வழித்தோன்றல்கள் மத்தியில் அவர்களுக்குப் பின்னர் இந்த உலகம் அழியும் நாள் வரை இப்பணியைப் பின்பற்றுவோர் நல்ல செயல்களைப் புரிவார்கள்.

ஆனால் இப்பணியில் ஒரு சிறு பகுதியைக் கூட தவிர்ப்பவர்கள் தீய செயல்களைப் புரிவார்கள். உண்மையில் பாவமானது வேகமாக நடைபெறுகிறது.

முற்காலத்தில் அறத்துக்கான மகாமாத்திரர் என்று அழைக்கப்பட்ட அதிகாரிகள் இல்லை. நான் திருநீராட்டப்பட்டு 13 ஆண்டுகள் கழித்து அறத்துக்கான மகாமாத்திரர்கள் என்னால் நியமிக்கப்பட்டனர். அறத்தை நிறுவுதல், அறத்தை ஊக்குவித்தல் மற்றும் தங்களை அறத்திற்கான அர்ப்பணித்துக் கொண்டவரின் நலம் மற்றும் மகிழ்ச்சிக்காக அனைத்து பிரிவுகளிலும் இவர்கள் உள்ளனர். யவனர், காம்போஜர், காந்தாரர் மற்றும் எந்த ஒரு பிற மேற்கு எல்லைப்புறத்தில் உள்ளவர்கள் மத்தியிலும் இவர்கள் உள்ளனர்.

பணியாளர்கள் மற்றும் எசமானர்கள், இபியாசுகள் மற்றும் வறியோர் மற்றும் முதியோர், அறத்துக்கென அர்ப்பணித்துக் கொண்டவர்களின் நலம் மற்றும் மகிழ்ச்சி மற்றும் அவர்களை உலக வாழ்வின் பிணைப்பில் இருந்து விடுதலை செய்தல் ஆகிய பணிகளில் இவர்கள் மூழ்கியுள்ளனர். கைதிகளில் ஒருவருக்கு குழந்தைகளோ அல்லது அவர் மயக்கப்பட்டோ அல்லது வயது முதிர்ந்தோ இருந்தால் முறையே கைதிகளுக்கு (நிதி மூலம்) ஆதரவளித்தல், அவர்களது பிணைகளிலிருந்து விடுவித்தல், அவர்களை விடுதலை செய்தல் ஆகிய பணிகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் எங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர், இங்கு மற்றும் அனைத்து வெளிப்புறப் பட்டணங்கள், நமது சகோதரர்களின் அந்தப்புரங்கள், (நமது) சகோதரிகளின் இடங்கள் மற்றும் எங்கெல்லாம் நமது பிற உறவினர்கள் உள்ளனரோ அங்கெல்லாம் இவர்கள் பணிபுரிகின்றனர். இந்த அறத்தின் மகாமாத்திரர்கள் அறத்துக்கென அர்ப்பணித்துக் கொண்டவருடன் என்னுடைய நிலப்பரப்பில் எங்கும் பணி புரிகின்றனர். ஒருவர் அறத்தின் மீது ஆர்வம் கொண்டுள்ளாரா? அல்லது மனிதநேயத்திற்கென தன்னை முறையாக அர்ப்பணித்துள்ளாரா? என்பதை அறிவதற்காக இவர்கள் பணி புரிகின்றனர்.

பின்வரும் காரணமானது அறம் குறித்த இந்த ஆணை எழுதுவதற்கு காரணமானது, (அதாவது) இப்பணியானது நீண்ட காலத்திற்கு எடுத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கலாம், மற்றும் என்னுடைய வழித்தோன்றல்கள் இது நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

— 5ஆம் பெரும் பாறை ஆணை. ஆய்கன் கூல்ட்சுவின்(1857-1927) ஆங்கில மொழி பெயர்ப்பிலிருந்து. 1925இல் இந்தியாவில் பதிப்பிக்கப்பட்டது. அசோகரின் பொறிப்புகள் பக்.32. பொது இணையத் தொகுதி.
பெரும் பாறைக் கல்வெட்டு 5 (கிர்நார்)

தம்ம மகாமாத்தா ("தரும ஆய்வாளர்கள்" அல்லது "அறத்தின் மகாமாத்தர்" என்று பலவாறாக மொழி பெயர்க்கப்படுகிறது) என கிர்நாரில் 5ஆம் பெரும் பாறைக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள எழுத்துக்கள்.

மேற்கோள்கள்

தொகு
  1. "The Edicts of King Ashoka". Archived from the original on 14 March 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-03-15.
  2. Beckwith, Christopher I. (2017). Greek Buddha: Pyrrho's Encounter with Early Buddhism in Central Asia (in ஆங்கிலம்). Princeton University Press. pp. 235–240. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-17632-1.
  3. Inscriptions of Asoka. New Edition by E. Hultzsch (in சமஸ்கிருதம்). 1925. p. 3.
  4. Kosmin, Paul J. (2014). The Land of the Elephant Kings (in ஆங்கிலம்). Harvard University Press. p. 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780674728820.
  5. இது தமிழ் மன்னர் அதியமானைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. Kumar, Raj (2003). Essays on Indian Society (in ஆங்கிலம்). Discovery Publishing House. p. 68. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788171417100.
  6. கேலளபுத்தர் என்பது கேரளத்தைக் குறிக்கும் பிராகிருதச் சொல் ஆகும். Filliozat, Jean (1974). Laghu-Prabandhāḥ (in பிரெஞ்சு). Brill Archive. p. 341. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9004039148.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ashoka Major Rock Edicts
என்பதில் ஊடகங்கள் உள்ளன.