தாமிரபரணி (இலங்கை)

தம்பபண்ணி (Thambapanni) அல்லது தாமிரபரணி (Tamraparni) என்பது இலங்கைக்கு வழங்கப்பட்ட பெயர்களில் ஒன்றாகும். இப்பெயர் எக்காலந்தொட்டு வழங்கப்பட்டுவருகிறது என்பதை, இதுவரை சரியான சான்றுகளுடன் காலவரையறையை நிர்ணயிக்க முடியாதுள்ளது என்பது வரலாற்றாய்வாளர்களின் கருத்தாகும். இருப்பினும் வரலாற்றாய்வாளர்களின் ஆய்வின் ஊடாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.[1]

மகாவம்சமும் தம்பபண்ணியும் தொகு

தம்பபண்ணி எனும் பெயர் வழங்கப்பட்ட காலத்தை சரியாக நிர்ணயிக்க முடியாது என கூறும் வரலாற்றாய்வாளர்கள், இலங்கையின் காலத்தால் முந்திய, கி.பி. ஆறாம் நூற்றாண்டில் பாளி மொழியில் எழுதப்பட்ட மகாவம்சம் நூலிற்கிணங்க விஜயன் எனும் இளவரசன் அவனது நண்பர்கள் 700 பேருடன், வங்க நாட்டிலிருந்து அவனது தந்தையால் கப்பலில் ஏற்றி நாடுகடத்தப்படுகிறான். அவன் கடைசியாக வந்தடையும் இடம் (இலங்கையில்) தம்பபண்ணி என குறிப்பிடப் பட்டுள்ளது. அதனடிப்படையில் விஜயன் இலங்கைக்கு வந்தடைவதற்கு முன்பே தம்பபண்ணி எனும் இடம் இருந்துள்ளது என்றும், அது மகாவம்சத் தொகுப்பு இடம்பெறுவதற்கு முன்பே வழக்கில் வழங்கப்பட்டுள்ளது என்றும் கொள்ளமுடியும்.[2]

சரணடைதலும் இராச்சியதை வழங்குதலும் தொகு

தம்பபண்ணிக்கு வந்தடைந்த விசயன் மற்றும் அவனது நண்பர்கள் ஒரு பெண்ணை (யாக்கினி) கண்டதாகவும், அவளை பின் தொடர்ந்து சென்றவிடத்தில் ஒரு கிராமமும் நாயும் இருந்ததாகவும், அங்கே ஒரு மரத்தடியில் துறவி வடிவில் குவேணி நூல் நூற்றுக்கொண்டிருந்தால் என்றும், அவள் தன் மாய சக்தியால் ஒவ்வொருவராக (விசயன தவர்ந்த) அனைவரையும் ஒரு பொய்கையில் சிறை வைத்தாகவும் மகாவம்சம் கூறுகிறது. பின்னர் நண்பர்களை தேடிச்சென்ற விசயனை "இளவரசன்" என அழைத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் விசயன் தன் நண்பர்களை மீட்டதுடன், குவேணி விசயனிடம் சரணடைந்து, விசயன் தன்னை கொன்றுவிடுவான் என பயந்து, இந்த இராச்சியத்தை விசயனுக்கு அளிப்பதாகவும் வாக்குறுதி அளிக்கிறாள். தன்னை குவேணி ஏமாற்றிவிடக்கூடாது என்பதற்காக விசயன் அவளிடமிருந்து சத்தியம் செய்யும் படி கூறு உறுதிமொழி பெருகிறான். மகாவசம்த்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த நிகழ்வுகள் தம்பபண்ணிக்கு விசயன் வரும் முன்னரே அங்கு மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. அதுவும் விசயனை "இளவரசன்" என குவேணி அழைத்ததாகக் குறிப்பிடுதல் மற்றும் இராச்சியத்தை விசயனுக்கு அளிக்க வாக்குறுதி வழங்குதல் என்பதன் ஊடாக, விசயனின் வருகைக்கு முன்னர் இலங்கையில் ஒரு இராச்சியம் அமைத்து ஆளும் நிலை இருந்திருக்கிறது, அது விசயனின் நண்பர்கள் 700 பேரையும் சிறை வைக்கும் அளவிற்கான வலிமையுடனும் இருந்திருக்கிறது என்பதும் மகாவம்சம் ஊடாக கிடைக்கப்பெறும் தகவல்களாகும்.[3]

நெசவு கைத்தொழில் தொகு

விசயனின் நண்பர்கள் அவ்விடத்தில் தோன்றிய ஒரு பெண்ணை (யாக்கினி) பின் தொடர்ந்து சென்ற ஒவ்வொருவரும் குவேணியால் பொய்கை ஒன்றில் சிறைவைக்கப்படுகின்றனர். கடைசியாக அவர்களை தேடி விசயன் செல்லும் போது, ஒரு மரத்தடியில் துறவி வடிவில் குவேணி நூல் நூற்றுக்கொண்டிருந்தால் என்பதும் மகாவம்சம் கூறும் தகவலாகும். அது விசயன் இலங்கைக்கு வரும் முன்பே இலங்கையில் நெசவு கைத்தொழில் பற்றிய அறிவு இருந்துள்ளதைக் காட்டுகிறது.

தம்பபண்ணியில் சோறு தொகு

மேலும் குவேணி விசயனிடம் சரணடைந்ததன் பின்னர் அவள் விசயனுக்கும் அவன் நண்பர்கள் 700 பேருக்கும் சோறு சமைத்து கொடுத்தாள் என்பதன் ஊடாக விசயனி வருகைக்கு முன்னரே தம்பபண்ணியில் சோறு சமைத்து உண்ணும் பழக்கம் இருந்துள்ளமை மகாவம்சத்தில் கிடைக்கும் தகவலாகும்.

தம்பபண்ணியில் வணிகப் கப்பல் தொகு

விசயனுக்கும் அவன் நண்பர்களுக்கும் குவேணி உணவு பரிமாறியதுடன் வணிகக் கப்பல்களில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களையும் கொடுத்தாள் என்பதன் ஊடாக தம்பபண்ணியில் வணிகக் கப்பல்களின் வருகையை பற்றிய தகவலையும் மகாவம்சம் தருகிறது.

ஆடை அணிகலன்கள் தொகு

உணவு உண்ட பின் இரவு குவேணி ஆடை அணிகலன்கள் அணிந்து ஒரு பதினாறு வயது இளம்பெண் போன்று விசயன் முன் காட்சியளித்தாள் என்பது, ஆடை அணிகலன்கள் அணியும் வளர்ச்சி நிலையில் தம்பபண்ணி இருந்துள்ளதை மகாவம்சம் எடுத்துக்காட்டுகிறது.


சான்றுகோள்கள் தொகு

  1. The Evolution of an Ethnic Identity, கா. இந்திரபாலா
  2. " The Coming of Vijaya, Page: 54:47
  3. விசயனின் வருகையும் குவேணி இராச்சியத்தை வழங்க பணிதலும் பரணிடப்பட்டது 2015-09-25 at the வந்தவழி இயந்திரம், பக். 36
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமிரபரணி_(இலங்கை)&oldid=3379345" இலிருந்து மீள்விக்கப்பட்டது