பைரத் பௌத்த தொல்லியல் களம்
பைரத் பௌத்த தொல்லியல் களம் (Bairat Temple) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர் மாவட்டத்தின் விராட்நகர் தாலுகாவில் அமைந்த பைரத் எனும் ஊரின் மலை மீது அமைந்த அசோகரின் கல்வெட்டும், வட்ட வடிவ பௌத்த விகாரையும், தூபிகளும் கொண்ட கிமு 3-ஆம் நூற்றாண்டின் தொல்லியல் களம் ஆகும்.[1][2] [3] இத்தொல்லியல் களம் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் பராமரிப்பில் உள்ளது.[4][5] அசோகர் காலத்தில் நிறுவப்பட்ட வட்ட வடிவில் அமைந்த விகாரையின் நடுப்பகுதியில் தூபி நிறுவப்பட்டுள்ளது. [6][4] இந்த விகாரையின் அருகே அசோகர் நிறுவிய இரண்டு சிறு பாறைக் கல்வெட்டுக்கள் உள்ளது. [6]தற்போது பைரத் தொல்லியல் களத்தில் இருந்த வட்ட வடிவ விகாரையும், தூபியும் மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது.
பைரத் பௌத்த தொல்லியல் களம் | |
---|---|
சிதிலமடைந்த வட்ட வடிவ பைரத் பௌத்த விகாரை | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | இந்தியா |
புவியியல் ஆள்கூறுகள் | 27°25′02″N 76°09′44″E / 27.417116°N 76.16229°E |
சமயம் | பௌத்தம் |
மாநிலம் | இராஜஸ்தான் |
மாவட்டம் | ஜெய்ப்பூர் |
மாநகராட்சி | பைரத் |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | கிமு 3-ஆம் நூற்றாண்டு |
நிலை | சிதிலமடைந்துள்ளது |
செயற்பாட்டு நிலை | இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் பராமரிப்பில் உள்ளது |
அசோகரின் சிறு பாறைக் கல்வெட்டுக்கள்
தொகுபைரத் விகாரை அருகில் அசோகரின் பாறைக் கல்வெட்டி கண்டுபிடிக்கப்பட்டது.[5] இக்கல்வெட்டு கிமு 260 ஆண்டு காலத்தியது ஆகும். [7][8][5][9]
பைரத் அசோகரின் பிராமி கல்வெட்டுக்களை ஜேம்ஸ் பிரின்ஸ்செப் என்பவர் 1837-இல் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.[10]
மகதத்து அரசன் பிரியதர்சி (அசோகர்), சங்கத்தை வணங்கி அவர்கள் சுகமும் ஆரோக்கியமும் அடையவேண்டுமென்று விரும்பிக் கூறுவதாவது.
புண்ணியவான்களே! புத்தர், தர்மம், சங்கம் மீது எனக்குள்ள விசுவாச வெகுமானமும் நம்பிக்கையும் எவ்வளவு அதிகமென்று உங்களுக்குத் தெரியும்.
புண்ணியவான்களே! பகவான் புத்தரால் கூறப்பட்டுள்ள யாவும் மிக நன்றாகவே கூறப்பட்டிருக்கின்றன.
புண்ணியவான்களே, நான் உங்களுக்கு ஒரு வாக்கியத்தைச் சுட்டிக்காட்ட அனுமதி கொடுப்பீர்களானால் அது “உண்மையான தர்மம், சாசுவதமாய் நிலை நிற்கும்” என்பதே. புண்ணியவான்களே ! வேறு சில வாக்கியங்களையும் எடுத்துக்கூற விரும்புகின்றேன்:
வினய சமுகசே ("ஒழுக்கத்தின் மேன்மை"), அலியவசானி. ("பெரியோரின் நடக்கை"), அநாமதடியாநி ("வரப்போவதைக் குறித்துள்ள பயம்"), முனிகாதை ("முனிவரின் கீதங்கள்"), உபதிஷ்யன் கேள்விகள், மோனேயசுதே ("முனிவர்களின் வாழ்க்கையைப் பற்றிய உரையாடல்கள்"), அநித்தியம் முதலிய கொள்கைகளைப் பற்றி ராகுலனுக்குக்குள்ள உபதேசம். பகவான் புத்தரால் கூறப்பட்டுள்ள இவைகள் எல்லாவற்றையும், புண்ணியவான்களே, பிட்சுக்களும் பிக்குணிகளும் அடிக்கடி கேட்டு மனனம் செய்யவேண்டும் என்று என் விருப்பம்;
அப்படியே இல்லறத்திலுள்ள ஆண்களும் பெண்களும் இவற்றை அடிக்கடிக் கேட்டு மனனம் செய்ய வேண்டும்.
புண்ணியவான்களே, இக்காரணம் பற்றியே-அஃதாவது, ஜனங்கள் எனது கோரிக்கையை அறியும் பொருட்டே - இதை நான் வரையச் செய்தேன்.
— ஆர். ராமய்யர் மொழிபெயர்ப்பு, நூல் அசோகனுடைய சாஸனங்கள்- II. பாப்ரு சாஸனம் [11]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ BAIRAT - EXCAVATED SITE
- ↑ Chakrabarty, Dilip K. (2009). India: An Archaeological History: Palaeolithic Beginnings to Early Historic Foundations (in ஆங்கிலம்). Oxford University Press. p. 421. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199088140.
- ↑ Chandra (2008)
- ↑ 4.0 4.1 "ASI Notice".
- ↑ 5.0 5.1 5.2 5.3 Archaeological Survey Of India Four Reports Made During The Years 1862 - 63 - 64 - 65 Volume Ii. 1871. pp. 242–248.
- ↑ 6.0 6.1 Le Huu Phuoc, 2010, p.233-237
- ↑ Misra, Virendra N. (2007). Rajasthan: Prehistoric and Early Historic Foundations (in ஆங்கிலம்). Aryan Books International. p. 47. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7305-321-4.
- ↑ Cunningham, Alexander (1871). Archaeological Survey Of India Vol.2. p. 247.
- ↑ Smith, Vincent E. (2018). Asoka: The Buddhist Emperor (in ஆங்கிலம்). Sristhi Publishers & Distributors. p. 104. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-87022-26-3.
- ↑ Proceedings of the Meetings of the Session, Volume 24, Indian Historical Records Commission, 1948 "the discovery at Bairat of the Asokan inscription which, in the hands of James Prinsep, became the key for unravelling and deciphering the edicts of King Piyadasi"
- ↑ ஆர். ராமய்யர், அசோகனுடைய சாஸனங்கள் 1925 நூல், அத்தியாயம்; II. பாப்ரு சாஸனம், பக்கம் 88-90 விக்கிமூலம்
வெளி இணைப்புகள்
தொகுஆதாரம்
தொகு- Chandra, Pramod (2008), South Asian arts, Encyclopædia Britannica.