ஜௌகர்

ஓடிசாவில் உள்ள ஒரு கோட்டை
(ஜௌகுடா இலிருந்து வழிமாற்றப்பட்டது)


சௌகர் அல்லது ஜௌகர், சௌகடு, ஜௌகட் (Jaugarh or Jaugada), இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கஞ்சாம் மாவட்டத்தில் அமைந்த பழைய சிதிலமடைந்த கோட்டை ஆகும். இங்கு பேரரசர் அசோகர் நிறுவிய பெரும் பாறைக் கல்வெட்டு உள்ளது. இது பெர்காம்பூருக்கு வடமேற்கே 35 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரம் புவனேஸ்வருக்குத் தென்மேற்கே 160 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. அசோகர் கைப்பற்றிய கலிங்க நாட்டின் கோட்டை இவ்விடத்தில் இருந்தது. அசோகரின் கல்வெட்டால் இவ்வூர் புகழ் பெற்றது.

வீட்டிற்குப் பின்புறம் அமைந்த ஜௌகர் அசோகர் பெரும் பாறைக் கல்வெட்டு, ஆண்டு 1895
ஜௌகர் கல்வெட்டு அமைவிடத்தின் வரைபடம்
அசோகரின் கட்டளைகள் கொண்ட கல்வெட்டு

இக்கல்வெட்டு கிமு 250-இல் அசோகரால் நிறுவப்பட்ட பெரும் பாறைக் கல்வெட்டாகும். இக்கல்வெட்டில் 16 சொற்றொடர்கள் உள்ளன.[1] இதன் வடகிழக்கே 250 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த அசோகரின் தௌலி கல்வெட்டைப் போன்றே இதுவும் பிராமி எழுத்தில் உள்ளது.

ஜௌகர் is located in South Asia
உதயகோலம்
உதயகோலம்
நித்தூர்
நித்தூர்
Jatinga
Jatinga
Rajula Mandagiri
Rajula Mandagiri

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. The Geopolitical Orbits of Ancient India: The Geographical Frames of the Ancient Indian Dynasties by Dilip K Chakrabarty p.32

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜௌகர்&oldid=3501342" இலிருந்து மீள்விக்கப்பட்டது