புளுவோர்கேபைட்டு
பாசுப்பேட்டுக் கனிமம்
புளுவோர்கேபைட்டு (Fluorcaphite) என்பது (Ca,Sr,Ce,Na)5(PO4)3F [1]என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். உருசியாவிலுள்ள கோலா தீபகற்பத்தில் புளுவோர்கேபைட்டு கிடைக்கிறது[2]. கனிமத்தின் படிகங்கள் இரட்டைக் கூர்நுனி கோபுர வகை அறுகோண வடிவத்தில் ஒளிபுகுந் தன்மையும் கண்ணாடி பளபளப்பும் கொண்டவையாக உள்ளன. இளமஞ்சள் நிறத்திலிருந்து அடர் மஞ்சள் நிறம் வரைக்குமான நிறத்தில் வெள்ளைக் கீற்றுகளுடன் இக்கனிமம் காணப்படுகிறது. மோவின் கடினத்தன்மை மதிப்பு 5 என மதிப்பிடப்பட்டுள்ளது[3]. மேலும் புளுவோர்கேபைட்டுக் கனிமம் கதிரியக்கத்தன்மை கொண்டதாகும்[1].