புளூட்டோனியம் ஐதரைடு

புளூட்டோனியம் ஐதரைடு (Plutonium hydride) என்பது PuH 2+x வாய்ப்பாட்டுடன் கூடிய விகிதாச்சாரம் அல்லாத வேதிச்சேர்மம் ஆகும். இது புளூட்டோனியத்தின் இரண்டு சிறப்பியல்பு ஐதரைடுகளில் ஒன்றாகும், மற்றொன்று PuH 3 ஆகும். [1] PuH 2 என்பது PuH 2 - PuH 2.7 விகிதாச்சார வரம்பைக் கொண்ட கூடுதலாக ஹைட்ரஜன் (PuH 2.7 – PuH 3) அதிகமாக உள்ள மெட்டாஸ்டேபிள் விகிதாச்சார அமைப்புகள் உருவாகலாம். [1] PuH 2 ஒரு கன அமைப்பைக் கொண்டுள்ளது. இது 100-200- °செல்சியசில் 1 வளிமண்டல அழுத்தத்தில் உள்ள தனிமங்களிலிருந்து உடனடியாக உருவாகிறது: [1] விகிதாச்சார இயைபு PuH 2 க்கு அருகில் இருக்கும் போது அது வெள்ளியின் தோற்றத்தைக் கொண்டிருக்கும், ஆனால் ஹைட்ரஜன் உள்ளடக்கம் அதிகரிக்கும் போது கருமையாகிறது, கூடுதலாக ஏற்படும் நிற மாற்றம் கடத்துத்திறன் குறைவதோடு தொடர்புடையது. [2]

புளூட்டோனியம் ஐதரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புளுட்டோனியம் ஈரைதரைடு (அதிக அளவிலன ஐதரசனுடன்)
முறையான ஐயூபிஏசி பெயர்
புளுட்டோனியம்(2+) ஐதரைடு
வேறு பெயர்கள்
புளுட்டோனியம் ஈரைதரைடு

புளுட்டோனியம்(II) ஐதரைடு

புளுடோனசு ஐதரைடு
இனங்காட்டிகள்
17336-52-6 Y
ChemSpider 57566567
InChI
  • InChI=1S/Pu.2H/q+2;2*-1 N
    Key: IPKHWWGTRXXYCX-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 57464762
  • [H-].[H-].[Pu++]
பண்புகள்
H2Pu
வாய்ப்பாட்டு எடை 246.02 g·mol−1
தோற்றம் கருப்பு, ஒளிபுகா படிகங்கள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)
Pu + H 2 → PuH 2

200-350°செல்சியசில் ஈரமான காற்றுடன் புளூட்டோனியம் உலோகத்தின் வினை பற்றிய ஆய்வுகள்  P2 O 3, PuO 2 உடன் மேற்பரப்பில் கன புளூட்டோனியம் ஐதரைடு இருப்பதைக் காட்டியது மற்றும் எக்சு கதிர் இரட்டை விலகல் மற்றும் எக்ஏ கதிர் ஃஒளி எலக்ட்ரான் நிறமாலைமானி மூலம் கலப்பு-இணைதிறன் கட்டம் Pu IV 3−x Pu VI என அடையாளம் காணப்பட்ட உயர் ஆக்சைடு xO 6+x . [3] வெப்பப்படுத்தாமல் செய்யப்படும் வினையின் ஆய்வு, Pu உலோகம் மற்றும் ஈரப்பதமான காற்றின் வினை PuO2 மற்றும் அதிக ஆக்சைடு மற்றும் உறிஞ்சப்பட்ட ஹைட்ரஜனுடன் சேர்ந்து, O2 உடன் வினையூக்கமாக இணைந்து தண்ணீரை உருவாக்குகிறது. [4]

நீரேற்றப்பட்ட புளூட்டோனியத்தின் மேற்பரப்பில் உள்ள புளூட்டோனியம் இருஐதரைடு, காற்றில் இருந்து O2 மற்றும் N2 இரண்டையும் உட்கொண்டு உலோகத்தின் ஆக்சிஜனேற்றத்திற்கு ஒரு ஊக்கியாக செயல்படுகிறது. [5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Gerd Meyer, 1991, Synthesis of Lanthanide and Actinide Compounds Springer, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7923-1018-7.
  2. The Chemistry of the Actinide and Transactinide Elements, Lester R. Morss, Norman M. Edelstein, J. Fuger, Springer, 2010, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789048131464
  3. J. L. Stakebake, D. T. Larson, J. M. Haschke: Characterization of the Plutonium-water Reaction II: Formation of a Binary Oxide containing Pu(VI), Journal of Alloys and Compounds, 202, 1–2, 1993, 251–263, எஆசு:10.1016/0925-8388(93)90547-Z.
  4. J. M. Haschke, T. H. Allen, L. A. Morales: Surface and Corrosion Chemistry of Plutonium, Los Alamos Science, 2000, 252.
  5. John M. Haschke Thomas H. Allen: Plutonium Hydride, Sesquioxide and Monoxide Monohydride: Pyrophoricity and Catalysis of Plutonium Corrosion, Journal of Alloys and Compounds, 320, 1, 2001, 58–71, எஆசு:10.1016/S0925-8388(01)00932-X.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளூட்டோனியம்_ஐதரைடு&oldid=3831518" இலிருந்து மீள்விக்கப்பட்டது