புளோரன்சைட்டு-(Sm)

புளோரன்சைட்டு-(Sm) (Florencite-(Sm)) என்பது SmAl3(PO4)2(OH)6 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அரிய வகை கனிமமாகும். பிளம்போகும்பைட்டு குழுவைச் சேர்ந்த கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. புளோரன்சைட்டில் உள்ள சமாரியம்-(Sm) மற்ற அரிய மண் தனிமங்களால் பதிலீடு செய்யப்படுகிறது. பெரும்பாலும் இது நியோடிமியம் தனிமமாகவே இருக்கும். தனித்தனி படிகங்களாக புளோரன்சைட்டு-(Sm) உருவாகுவதில்லை, ஆனால் பிளம்போகும்மைட்டு குழுவின் சீரியம்-மேலாதிக்க உறுப்பினரான புளோரன்சைட்-(Ce) மண்டலங்களில் காணப்படுகிறது.[1][4] புளோரன்சைட்டு-(Sm) என்பது புளோரன்சைட்டு-(La) (இலந்தனம்-ஆதிக்கம்) மற்றும் வேலாண்டைட்டு (பிசுமத்து-ஆதிக்கம்) ஆகியவற்றின் சமாரியம்- ஒப்புமையாகப் பார்க்கப்படுகிறது. இவை இரண்டும் அலுமினியம் நிறைந்த கனிமங்கள் ஆகும்.[3]

புளோரன்சைட்டு-(Sm)
Florencite-(Sm)
பொதுவானாவை
வகைபாசுபேட்டு கனிமம்
வேதி வாய்பாடுSmAl3(PO4)2(OH)6
இனங்காணல்
நிறம்நிறமற்றது,வெளிர் இளம் சிவப்பு, வெளிர் மஞ்சள்
படிக இயல்புபுளோரன்சைட்டு-(Ce) படிக மண்டலங்களில்
படிக அமைப்புமுக்கோணம்
பிளப்பு{0001}, தனித்துவம்
முறிவுசமமற்று
மோவின் அளவுகோல் வலிமை5.5-6
மிளிர்வுபளபளப்பும் மெழுகுத்தன்மையும்
கீற்றுவண்ணம்வெண்மை
அடர்த்தி3.6 (அளக்கப்பட்டது)
ஒளியியல் பண்புகள்ஓரச்சு(+)
ஒளிவிலகல் எண்nω=1.70, nε=1.71
மேற்கோள்கள்[1][2][3]

தோற்றம்

தொகு

புளோரன்சைட்டு-(Sm) உருசியவின் யூரல், மால்டினிர்ட்டு மலைத்தொடரில் உள்ள குவார்ட்சு விளிம்புகளில் முதன் முதலில் காணப்பட்டது. இது செனோடைம்-(Y) கனிமத்துடன் தொடர்புடையதாக இருந்தது.[1]

புளோரன்சைட்டு-(Sm) நியோடிமியம், சிறிய அளவு சீரியம், கடோலினியம், கந்தகம், இசுட்ரோன்சியம், பிரசியோடைமியம், கால்சியம், இலந்தனம், யூரோப்பியம் மற்றும் சிலிக்கான் ஆகியவற்றின் கலவைகளைக் கொண்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Repina, S.A., Popova, V.I., Churin, E.I., Belogub, E.V., and Khiller, V.V., 2014. Florencite-(Sm)—(Sm,Nd)Al3(PO4)2(OH)6: A new mineral species of the alunite-jarosite group from the Subpolar Urals. Geology of Ore Deposits 53(7), 564-574
  2. "Florencite-(Sm) - Handbook of Mineralogy" (PDF). Handbookofmineralogy.org. Archived from the original (PDF) on 2016-04-01. பார்க்கப்பட்ட நாள் 2016-03-08.
  3. 3.0 3.1 "Florencite-(Sm): Florencite-(Sm) mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-04.
  4. "Florencite-(Ce): Florencite-(Ce) mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-09.l
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளோரன்சைட்டு-(Sm)&oldid=4107847" இலிருந்து மீள்விக்கப்பட்டது