புள்ளித்தொண்டை மரங்கொத்தி

பறவை இனம்
புள்ளித்தொண்டை மரங்கொத்தி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பிசிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
தைனோபியம்
இனம்:
தை. எவெரெட்டி
இருசொற் பெயரீடு
தைனோபியம் எவெரெட்டி
துவேடேல், 1878

புள்ளித்தொண்டை மரங்கொத்தி (Spot-throated flameback)(தைனோபியம் எவெரெட்டி) என்பது பிசிடே குடும்பத்தில் உள்ள பறவை சிற்றினமாகும். இது பலாபாக், புசுவாங்கா மற்றும் கலாமியன் மற்றும் பலவான் தீவுகளில் பலவான் மாகாணத்தில் மட்டுமே காணப்படுகிறது. இது பிலிப்பீன்சில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இது சில நேரங்களில் மேற்கத்திய பொன்முதுகு மரங்கொத்தியின் துணையினமாகக் கருதப்படுகிறது. இது முதன்மை, இரண்டாம் நிலை காடுகள் மற்றும் தோட்டங்கள் உட்பட ஈரமான தாழ் நிலக் காடுகளில் காணப்படுகிறது.[2] இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

விளக்கம் தொகு

 
பெண் (இடது) மற்றும் ஆண் மரங்கொத்தி (வலது)

ஈபேர்டு இந்தப் பறவையை "பலவான் மற்றும் அண்டை தீவுகளில் உள்ள மரங்கள் நிறைந்த வாழ்விடங்களின் காணப்படும் ஒரு பெரிய மரங்கொத்தி எனவும், இதன் அடிப்பகுதி வெண்மை நிறத்தில் கருப்பு வரிகளுடனும், மேற்பகுதி தங்க-ஆலிவ் நிறத்திலும், பின்புறத்தில் பரவலான சிவப்பு நிற குறியுடன் மெல்லிய புள்ளிகள் கொண்டும், வெளிர் நுரை நிற தொண்டையுடன், கோண முகடு கொண்டும், பெண்களில் இது சிவப்பு முனையுடன் கருப்பு நிறமாகவும், ஆண்களில் முற்றிலும் சிவப்பு நிறமாகவும் இருக்கும்” எனத் தெரிவிக்கின்றது. மேலும் இந்த மரங்கொத்தி சிறிய சிவப்பு மீசையையும் கொண்டுள்ளது.[3]

வாழ்விடம் தொகு

தென்னந்தோப்புகள் உட்படக் காடுகளிலும் திறந்த வனப்பகுதிகளிலும் புள்ளித்தொண்டை மரங்கொத்தி காணப்படுகிறது. இது மனிதனால் மாற்றப்பட்ட வாழ்விடத்திலும் வாழக்குடியது. ஆனால் அசாதாரணமாகக் காணக்கூடியதாகக் கருதப்படுகிறது. இது பொதுவாக தாழ் நிலங்களில் வாழ்கிறது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

பாதுகாப்பு நிலை தொகு

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தின் செம்பட்டியலில் இந்த பறவையை அச்சுறு நிலையை அண்மித்த நிலையில் இருப்பதாக மதிப்பிட்டுள்ளது. இதன் எண்ணிக்கை 2,500 முதல் 9,999 வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இனத்தின் முக்கிய அச்சுறுத்தல் வாழ்விட இழப்பு ஆகும்.

தாழ் நிலக் காடு இழப்பு, சீரழிவு மற்றும் துண்டு துண்டாகப் பலவான் பகுதியில் தொடர்ந்து நடந்து வருகிறது. தீவில் மீதமுள்ள பெரும்பாலான வனப்பகுதிகளிலும் மரம் வெட்டுதல் மற்றும் சுரங்கம் அமைத்தல் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. சட்ட விரோதமான மரக்கட்டைகள் தென்பகுதி முழுவதும் கடத்துவது தொடரும் என்று கருதப்படுகிறது.

இதன் துல்லியமான சூழலியல் தேவைகள் மற்றும் சீரழிந்த மற்றும் துண்டு துண்டான வாழ்விடங்களில் நிலைத்து நிற்கும் திறனைத் தீர்மானிக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. தற்போதுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் பயனுள்ள பாதுகாப்பை உறுதி செய்யவும் பரிந்துரைக்கப்படுகிறது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Dinopium everetti". IUCN Red List of Threatened Species 2016: e.T22727192A94943046. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22727192A94943046.en. https://www.iucnredlist.org/species/22727192/94943046. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Allen, Desmond (2020). Birds of the Philippines. Barcelona: Lynx and Birdlife International Guides. pp. 214–217.
  3. "Spot-throated Flameback". Ebird.
  4. International), BirdLife International (BirdLife (2016-10-01). "IUCN Red List of Threatened Species: Dinopium everetti". IUCN Red List of Threatened Species. பார்க்கப்பட்ட நாள் 2021-09-07.

மேலும் காண்க தொகு

  • Collar, N.J. 2011. Species limits in some Philippine birds including the Greater Flameback Chrysocolaptes lucidus. Forktail number 27: 29–38.

  பொதுவகத்தில் Dinopium everetti பற்றிய ஊடகங்கள்