புள்ளி கேடய வால் பாம்பு
புள்ளி கேடய வால் பாம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | யூரோபெல்டிசு
|
இனம்: | யூ. மாக்குலாட்டா
|
இருசொற் பெயரீடு | |
யூரோபெல்டிசு மாக்குலாட்டா (பெடோம், 1878) | |
வேறு பெயர்கள் [2] | |
|
புள்ளி சிறு பாம்பு என்றும் புள்ளி கேடய வால் பாம்பு என்றும் பொதுவாக அழைக்கப்படும் யூரோபெல்டிசு மாக்குலாட்டா (Uropeltis maculata) என்பது யூரோபெல்டிடே குடும்பத்தைச் சேர்ந்த நஞ்சற்ற பாம்பு சிற்றினமாகும். இந்தச் சிற்றினம் தென்னிந்தியாவில் மட்டுமே காணப்படுகிறது.[3]
புவியியல் வரம்பு
தொகுயூ. மாக்குலாட்டா தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் ஆனைமலையிலும் தெற்கு கேரளாவில் காணப்படுகிறது.
அசல் விளக்கத்தில் எந்த வகை இருப்பிடம் குறித்தும் தகவல் கொடுக்கப்படவில்லை. பெடோம் (1886′) இது "ஆனைமலையில், 6,000-7,000 அடியில் இருப்பதாகத் தெரிவிக்கின்றார்.
வாழிடம்
தொகுயூ. மாக்குலட்டாவின் விருப்பமான இயற்கை வாழிடம் காடு மற்றும் புல்வெளி ஆகும். இது விவசாயத் தோட்டங்களிலும் காணப்படுகிறது.
விளக்கம்
தொகுயூ. மாக்குலாட்டா அடர் பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் முதுகு மற்றும் வயிற்றுப் புறத்திலும் உடல் முழு நீளத்திலும் சிவப்பு புள்ளிகளுடன் காணப்படுகிறது. இந்தச் சிவப்பு புள்ளிகள் வாலிலும் காணப்படும்.
முதிர்ச்சியடைந்த பாம்பின் உடல் மொத்த நீளம் (வால் உட்பட) 38 செமீ வரை இருக்கும்.
முதுகுப்புறச் செதில்கள் 17 வரிசைகளில் உடலின் நடுப்பகுதியில் (தலைக்குப் பின்னால் 19 வரிசைகளில்) அமைந்துள்ளன. வயிற்றுப் புறச்செதில்கள் 152 முதல் 173 வரையும் வாலடிச் செதில்கள் 8 முதல் 13 வரை இருக்கும்.[4]
இனப்பெருக்கம்
தொகுயூ. மாக்குலாட்டா என்பது உள்பொரி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ species:Chelmala Srinivasulu; species:Bhargavi Srinivasulu; species:S.R. Ganesan; species:M.B. Ramesh; species:Seenapuram Palaniswamy Vijayakamar; species:Mrugank V. Prabhu (2013). "Uropeltis maculatus ". The IUCN Red List of Threatened Species (IUCN) 2013: e.T172699A1369355. doi:10.2305/IUCN.UK.2013-1.RLTS.T172699A1369355.en. http://www.iucnredlist.org/details/172699/0. பார்த்த நாள்: 10 January 2018.
- ↑ McDiarmid RW, Campbell JA, Touré TA (1999). Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, vol. 1. Washington, District of Columbia: Herpetologists' League. 511 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-00-6 (series), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-01-4 (volume).
- ↑ "Uropeltis maculata". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் 2 September 2007.
- ↑ Boulenger GA (1893).
மேலும் வாசிக்க
தொகு- Beddome, R.H. (1878). "Descriptions of new Uropeltidæ from Southern India, with Remarks on some previously-described Species". Proceedings of the Zoological Society of London 1878 (1): 154–155. (Silybura maculata, new species, pp. 154–155).
- Beddome, R.H. (1886). "An Account of the Earth-Snakes of the Peninsula of India and Ceylon". Annals and Magazine of Natural History, Fifth Series 17: 3–33. (Silybura maculata, p. 22).
- Boulenger, G.A. (1890). The Fauna of British India, Including Ceylon and Burma. Reptilia and Batrachia. London: Secretary of State for India in Council. (Taylor and Francis, printers). xviii + 541 pp. (Silybura maculata, pp. 261–262).
- Sharma, R.C. (2003). Handbook: Indian Snakes. Kolkata: Zoological Survey of India. 292 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8181711694.
- Smith, M.A. (1943). The Fauna of British India, Ceylon and Burma, Including the Whole of the Indo-Chinese Sub-region. Reptilia and Amphibia. Vol. III.—Serpentes. London: Secretary of State for India. (Taylor and Francis, printers). xii + 583 pp. (Uropeltis maculatus, new combination, pp. 83–84).