புழுவடிவம்

புழுவடிவம் (Vermiform) ஒரு புழு போன்ற வடிவத்தை விவரிக்கிறது. இச்சொல் பெரும்பாலும் உயிரியல் மற்றும் உடற்கூறியல் துறையில் வெர்மிபார்ம் எனப் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக மென்மையான உடல் பாகங்கள் அல்லது குழாய் அல்லது உருளை வடிவம் கொண்ட விலங்குகளைக் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. இலத்தீன் மொழி வேர்ச்சொல் வெர்ம்சு என்பது புழுக்களையும் பார்ம்சு என்பது வடிவம் என்ற பொருளையும் குறிப்பனவாகும். [1] நன்கு அறியப்பட்ட எடுத்துக்காட்டாக மனிதர்களின் குடலிலும் பல பாலூட்டிகளிலும் பின் இணைப்பாக காணப்படும் குடல்வாலைக் கூறலாம். [2]

புழுவடிவமாக விவரிக்கப்படும் ஒரு சிறிய டைசிமா என்ற ஒட்டுண்ணி

பல மென்மையான உடல் கொண்ட விலங்குத் தொகுதி உயிரினங்கள் குறிப்பாக புழுவடிவம் கொண்டவையாக விவரிக்கப்படுகின்றன. வளையப் புழு குடும்ப வகையைச் சேர்ந்த மண்புழு மற்றும் இதன் ஒப்புமை குடும்பங்கள், ஒட்டுண்ணிப்புழுக்கள் உட்பட உருளைப்புழு தொகுதியைச் சேர்ந்த உயிரினங்கள் போன்றவை புழுவடிவம் கொண்டவை என்று விவரிக்கப்படுகின்றன. ஆனால் இதே விளக்கத்திற்கு குறைவாக அறியப்பட்ட விலங்குத் தொகுதிகளாக நுண் ஒட்டுண்ணிகளான கடல்வாழ் முதுகெலும்பற்ற உயிரினங்கள் முதல் நாடாப் புழுக்கள் வரை உள்ள விலங்குத் தொகுதிகளும் உட்படுகின்றன.

மேற்கோள்கள்தொகு

  1. Glare, edited by P.G.W. (1982). Oxford Latin Dictionary (Combined ed., repr. with corr. ). New York: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-864224-5. 
  2. H. F. Smith, R. E. Fisher, M. L. Everett, A. D. Thomas, R. R. Bollinger, W. Parker (2009). "Comparative anatomy and phylogenetic distribution of the mammalian cecal appendix". Journal of Evolutionary Biology 22 (10): 1984–1999. doi:10.1111/j.1420-9101.2009.01809.x. பப்மெட்:19678866. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புழுவடிவம்&oldid=3068161" இருந்து மீள்விக்கப்பட்டது