புவியிணக்கச் சுற்றுப்பாதை

புவியிணக்கச் சுற்றுப்பாதை (geosynchronous orbit) என்பது புவியைச் சுற்றியுள்ளதொரு நேரான, வட்டவடிவ, குறைந்த-வாட்டமுள்ள (low-inclination) சுற்றுப்பாதை. இதன் சுற்றுக்காலம் 23 மணி 56 நிமிடம் 4 வினாடி; இதன் குத்துயரம் 35,784 km. இத்தகைய சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட ஒரு செயற்கைக்கோள் ஒரே நிலநீள்கோட்டில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கும்.

இவ்வகைச் சுற்றுப்பாதையின் வாட்டம் சுழியமாக இருந்தால், புவிநிலைச் சுற்றுப்பாதை என்றழைக்கப்படும்; வாட்டம் சுழியமாக இல்லாவிடின், அப்பாதையில் உள்ள துணைக்கோளின் தரை-வரை எட்டு ( 8 ) வடிவத்தில் இருக்கும்.

குறிப்புதவி தொகு

daviddarling [1] பரணிடப்பட்டது 2011-05-13 at the வந்தவழி இயந்திரம்