புவியின் சுழற்சி

புவியின் சுழற்சி (Earth's rotation) என்று திண்மிய புவி தன்னுடைய அச்சில் சுழலுவதைக் கூறுகிறோம். புவி தனது மேற்கு புறத்திலிருந்து கிழக்கு நோக்கி சுழலுகிறது. துருவ நட்சத்திரத்திலிருந்து காண்கையில் புவி எதிர்கடிகாரச் சுற்றாக சுற்றுகிறது.

புவியின் சுழற்சியைக் காட்டும் ஓர் அசைபடம்.
சிலியிலுள்ள வான் ஆய்வகத்தின் மேல் இரவில் காணும் தெற்கத்திய வானம் [1]

புவிசார் வட துருவம் எனப்படும் வட துருவம் வடக்கு அரைக்கோளத்தில் புவியின் சுழல் அச்சும் புவிப்பரப்பும் சந்திக்கும் இடமாகும்.இந்தப் புள்ளி புவியின் வட காந்தமுனையிலிருந்து மாறுபட்டது. புவியின் சுழல் அச்சும் புவிப்பரப்பும் சந்திக்கும் மற்றொரு புள்ளி அன்டார்க்டிக்காவில் உள்ள தென் துருவம் ஆகும்.

சூரியனைப் பொருத்தவரை புவி 24 மணி நேரத்திற்கு ஒருமுறை சுழல்கிறது; விண்மீன்களைப் பொறுத்தவரை புவி 23 மணி 56 நிமிடங்கள் 4 வினாடிகளில் தன்னைத் தானே சுற்றுகிறது. புவியின் சுழற்சி நேரப்போக்கில் வேகம் குறைந்து வருகிறது; பண்டைய நாட்களைவிட இன்றைய நாட்கள் நீளமானவை. நிலா ஏற்படுத்தும் கடல் அலைகளால் சுழற்சி தடைபடுவதால் உண்டாகிறது. அணுக்கடிகாரங்கள் தற்போதைய நாள் நூறாண்டுகளுக்கு முன்பிருந்ததை விட சுமார் 1.7 மில்லிசெகண்டுகள் நீளமானதாக காட்டுகின்றன.[2] இதற்கானத் தீர்வாக ஒ.அ.நே லீப் விநாடிகள் மூலம் சீராக்கப்படுகின்றன.

மேற்சான்றுகள்

தொகு
  1. "Stars Circle over the Residencia at Cerro Paranal". ESO. http://www.eso.org/public/images/potw1313a/. பார்த்த நாள்: 4 April 2013. 
  2. McCarthy, D.D. & Seidelmann, P.K. TIME: From Earth Rotation to Atomic Physics. Weinheim: Wiley-VCH. (2009). pp. 88–89
"https://ta.wikipedia.org/w/index.php?title=புவியின்_சுழற்சி&oldid=2745914" இலிருந்து மீள்விக்கப்பட்டது