புவி–உயிர் அறிவியல் நிறுவனம்

சப்பானிய ஆராய்ச்சி நிறுவனம்

புவி–உயிர் அறிவியல் நிறுவனம் (Earth–Life Science Institute) சப்பானில் உள்ள டோக்கியோ தொழில்நுட்ப நிறுவனத்தில் அமைந்துள்ள ஓர் ஆராய்ச்சி நிறுவனம ஆகும். [1] தனித்தியங்கும் நிரந்தர அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமாக இந்நிறுவனம் இயங்குகிறது. வானியல் இயற்பியல் முதல் உயிரியல் வரையிலான துறைகளில் 70 பேருக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளை [2] நிறுவனம் பணியமர்த்தியுள்ளது. இவர்கள் கோள்கள் மற்றும் உயிரினங்களின் தோற்றம் மற்றும் பரிணாமத்திற்கு இடையே உள்ள பரந்த தொடர்புகள் குறித்து கூட்டு ஆராய்ச்சி செய்கிறார்கள்.

புவி–உயிர் அறிவியல் நிறுவனம்
Earth–Life Science Institute
பு.உ.அ.நி
வகைகல்வித் துறை
உருவாக்கம்2012
சார்புடோக்கியோ தொழில்நுட்ப நிறுவனம்
பணிப்பாளர்கிய் ஈரோசு
அமைவிடம்
மெகுரோ-கு
, ,
இணையதளம்http://www.elsi.jp/en/

வரலாறு தொகு

புவி–உயிர் அறிவியல் நிறுவனம் 2012 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. [3] கிரகங்கள் மற்றும் உயிர்களின் தோற்றம் தொடர்பான கேள்விகளுக்கு ஆராய்ச்சியாளர்களை திரட்டுவதன் மூலம் பூமிக்கும் உயிர் அறிவியலுக்கும் இடையே ஒரு பாலத்தை உருவாக்குவது இந்நிறுவனத்தின் அடிப்படை நோக்கமாகும். புவி–உயிர் அறிவியல் நிறுவனம் எகிம் பல்கலைக்கழகம், ஆர்வார்டு பல்கலைக்கழகம் மற்றும் மேம்பட்ட ஆய்வுக்கான நிறுவனம் ஆகியவற்றின் செயற்கைக்கோள்-நிறுவனங்களுடன் இணைக்கப்பட்ட்டுள்ளது. தற்போது இயக்குனர் கீ ஈரோசு மற்றும் துணை இயக்குநர்கள் சிக்கெரு ஐடா மற்றும் இயான் எர்ன்லண்டு ஆகியோரால் வழிநடத்தப்படுகிறது.

நிதி ஆதாரங்கள் தொகு

தோராயமாக ஆண்டுக்கு 7மில்லியன் டாலர் தொகையை வழங்கி சப்பானின் உலக பிரீமியர் பன்னாட்டு ஆராய்ச்சி மையம் நிறுவனத்திற்கான நிதி ஆதாரமாகச் செயல்பட்டது. [4] இயான் தெம்பிள்டன் அறக்கட்டளை புவி–உயிர் அறிவியல் நிறுவன வலையமைப்பை உருவாக்க $5.6மில்லியன் [5] தொகையை மூன்று ஆண்டுகளுக்கு கொடுத்து உதவியது. சப்பான் அறிவியல் ஊக்குவிக்கும் சங்கமும், பல தனியார் அமைப்புகளும் பல்வேறு வகையான திட்டங்களுக்கு நிதி வழங்கி புவி–உயிர் அறிவியல் நிறுவனத்தை ஆதரிக்கின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. Kaufman, Marc. "Research Center a Hub for Origins of Life Studies", Space.com, May 1, 2017. Retrieved March 15, 2020.
  2. Researchers பரணிடப்பட்டது 2017-04-19 at the வந்தவழி இயந்திரம், Earth–Life Science Institute, February 1, 2020. Retrieved March 15, 2020.
  3. The Center Project Plans Selected in FY2017, Japan Society for the Promotion of Science. Archived March 27, 2019. Retrieved March 15, 2020.
  4. World Premier International Research Center Initiative, Japan Society for the Promotion of Science. Retrieved March 15, 2020.
  5. Scharf, Caleb A. "A New Era for Origins of Life Science?", Scientific American, August 7, 2015. Retrieved March 15, 2020.

புற இணைப்புகள் தொகு