பு. ஜோ. சர்மா
இந்திய நடிகர், எழுத்தாளர்
புதிபெத்தி ஜோகேஸ்வர சர்மா (Pudipeddi Jogeswara Sarma) ஓர் இந்திய திரைப்பட ஒலி மொழிமாற்றக் கலைஞராக இருந்தார். பின்னர், நடிகராகவும் எழுத்தாளராகவும் மாறினார். தெலுங்குத் திரைப்படங்களிலும், ஒரு சில தமிழ், கன்னட படங்களில் தனது படைப்புகளுக்கு பெயர் பெற்றவர்.[1] இவர் ஒரு நடிகராகவும், ஒலி மொழிமாற்றக் கலைஞராகவும் 500க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.[2][3] நடிகர்கள் சாய்குமார், பு. ரவிசங்கர், அய்யப்பா பு.சர்மா ஆகியோரின் தந்தை ஆவார்.[4] இவர், நந்தி விருது, தென்னிந்திய பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
பு. ஜோ. சர்மா | |
---|---|
பிறப்பு | புதிபெத்தி ஜோகேஸ்வர சர்மா விசயநகரம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய ஆந்திரப் பிரதேசம், இந்தியா) |
இறப்பு | (அகவை 81) ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா |
பணி | நடிகர், எழுத்தாளர் |
பிள்ளைகள் | நடிகர்கள் பி. சாய் குமார் பு. ரவிசங்கர் உட்பட 5 பேர் |
உறவினர்கள் | ஆதி (பேரன்) |
இவர் 14 திசம்பர் 2014 அன்று தனது 81 வயதில் மாரடைப்பால் காலமானார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 'Prema Kavali' release today - The Hindu
- ↑ P J Sharma
- ↑ 'Dialogue King' on a roll - The Hindu
- ↑ M. L., Narasimham. "Star voices". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 19 April 2018.
- ↑ "Telugu actor, dubbing artiste P J Sarma no more". The Hindu. 14 December 2014. http://www.thehindu.com/features/cinema/telugu-actor-dubbing-artiste-p-j-sarma-no-more/article6691020.ece.