பி. சாய் குமார்
பி.சாய் குமார் (P. Sai Kumar) ஓர் இந்திய நடிகரும், ஒலி மொழிமாற்றக் கலைஞரும், தொலைக்காட்சித் தொகுப்பாளருமாவார். இவர் முதன்மையாக கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றுகிறார்.[3][4] கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ்த் திரைப்படங்களுக்காக இவர் இரண்டு முறை ஆந்திர மாநில அரசு சார்பாக வழங்கப்படுகின்ற நந்தி விருதுகளையும் மூன்று முறை பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.[5][6] "பிரஸ்தானம்" என்ற படத்தில் (2010) இவரது நடிப்பு திரைப்படத் தோழரின் "தசாப்தத்தின் 100 சிறந்த நிகழ்ச்சிகள்" பட்டியலில் இடம்பெற்றது [7]
பி. சாய் குமார் | |
---|---|
2020இல் கோவாவில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சாய்குமார். | |
பிறப்பு | புதிபெத்தி சாய்குமார்[1] 27 சூலை 1960[2] |
படித்த கல்வி நிறுவனங்கள் | மாநிலக் கல்லூரி, சென்னை சென்னை கிறித்துவக் கல்லூரி |
பணி | நடிகர், ஒலி மொழிமாற்ற கலைஞர், தொலைக்காட்சித் தொகுப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1976–தற்போது வரை |
பெற்றோர் | பி. ஜே. சர்மா (தந்தை) கிருஷ்ண ஜோதி (தாய்) |
வாழ்க்கைத் துணை | சுரேகா |
பிள்ளைகள் | நடிகர் ஆதி உடபட 2 பேர் |
உறவினர்கள் | பு. ரவிசங்கர் (சகோதரன்) |
ஆரம்பகால மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை
தொகுசாய் குமார் பு. ஜோ. சர்மா-கிருஷ்ணா ஜோதி தம்பதிக்கு ஐந்து குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தார். சர்மா ஆந்திராவின் விஜயநகரத்திலிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்து தன்னை ஒரு நடிகராகவும், ஒலி மொழிமாற்ற கலைஞராகவும் நிலைநிறுத்திக் கொண்டார்.[8][9] குமாரின் சகோதரர்கள் பு. ரவிசங்கர், அய்யப்பா சர்மா ஆகியோரும் நடிகர்கள் ஆவர். அவர்களுக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர்.[8] குமார், சென்னை மாநிலக் கல்லூரியில் கலை பிரிவில் முதுகலைப் பட்டமும் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் முடித்தார்.[10] சாய் குமாரின் மகன் ஆதியும் தெலுங்குத் திரைப்படங்களில் நன்கு அறியப்பட்ட நடிகராவார்.[11]
திரைப்பட வாழ்க்கை
தொகுசிறு வயதிலேயே ஒலி மொழி மாற்ற குழந்தை கலைஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது தந்தை பி. ஜே. சர்மா ஒரு முன்னணி ஒலி மொழி மாற்ற கலைஞராக இருந்தார். சாய் குமார் தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, சுமன் மற்றும் ராஜசேகர் ஆகியோரின் பல படங்களுக்கு ஒலி மொழி மாற்றம் செய்தார்.[12] 1996ஆம் ஆண்டில் வெளியான "போலீஸ் ஸ்டோரி" என்னும் கன்னடத் திரைப்படம் இவர் சிறந்த நடிகராக புகழ் பெற காரணமாக அமைந்தது. இது தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளிலும் ஒலி மொழி மாற்றம் செய்யப்பட்டது. இந்த படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி வாகை சூடிய திரைப்படமாக மாறியது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Midhunam, Sri Jagadguru Adi Shankara recommended for Oscars? - NDTV Movies". NDTVMovies.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-31.
- ↑ "Happy Birthday Sai Kumar: Makers of Sreekaram share first look of the ace actor - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-17.
- ↑ Sagacious – Saikumar
- ↑ "'Dialogue King' on a roll". தி இந்து. 26 March 2011. Archived from the original on 2 April 2011. பார்க்கப்பட்ட நாள் 4 August 2012.
- ↑ "Telugu Cinema hero birthday function - Sai Kumar". www.idlebrain.com.
- ↑ "Great Andhra: Exclusive interview with Saikumar". Archived from the original on 2008-03-18. பார்க்கப்பட்ட நாள் 2021-07-05.
- ↑ "100 Greatest Performances of the Decade". அனுபமா சோப்ரா (in ஆங்கிலம்). Archived from the original on 2021-05-25. பார்க்கப்பட்ட நாள் 2020-11-14.
- ↑ 8.0 8.1 "Ravi Shankar: Dad was straightforward, mom encouraged creativity". Deccan Herald (in ஆங்கிலம்). 2020-06-12. பார்க்கப்பட்ட நாள் 2021-02-17.
- ↑ Sarma, G. v Prasada (2011-03-26). "‘Dialogue King' on a roll" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/lsquoDialogue-King-on-a-roll/article14961519.ece.
- ↑ "Sai Kumar interview - Telugu Cinema interview - Telugu film actor". Idlebrain.com. பார்க்கப்பட்ட நாள் 2021-02-17.
- ↑ "Aadi is a producer's hero: Sai Kumar - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-31.
- ↑ "Sai Kumar interview – Telugu Cinema interview – Telugu film actor". Idlebrain.com. பார்க்கப்பட்ட நாள் 21 July 2012.