சுமன் (Sumann) (முந்தைய பெயர் சுமன் மிசுரா, ஜுக்னு இஷ்கி) [1] [2] (பிறந்தது1989 திசம்பர் 24) இவர் இந்திய நடிகையாகவும் விளம்பர நடிகையாகவும், பாடகராகவும் மற்றும் நடனக் கலைஞராகவும் இருக்கிறார் .

சுமன்
தாய்மொழியில் பெயர்சுமன் மிசுரா
பிறப்பு24 திசம்பர் 1989 (1989-12-24) (அகவை 31)
ஜம்சேத்பூர், பீகார், இந்தியா
இருப்பிடம்செவன் பங்களாக்கள், மும்பை
படித்த கல்வி நிறுவனங்கள்சோபியா மகளிர் கல்லூரி, மும்பை
பணிநடிகர், விளம்பர நடிகை, நடனக் கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
2011 முதல் தற்போதுவரை
உயரம்1.65 m (5 ft 5 in)
பெற்றோர்சுசில் குமார் மிசுரா (தந்தை)
கமல் மிசுரா (தாயார்)
உறவினர்கள்சீத்தல் மிசுரா (சகோதரி)
வலைத்தளம்
iamsumann.com

தனிப்பட்ட வாழ்க்கைதொகு

சுமன் சார்க்கண்டின் ஜம்சேத்பூரில் பிறந்து வளர்ந்தார். ஆரம்பக்கல்வியை தட்சிண பாரத் மகிளா சமாஜ் ஆங்கிலப் பள்ளியிலிருந்தும், உயர்நிலைப் பள்ளியை மோதிலால் நேரு பொதுப் பள்ளியிலிருந்தும் முடித்தார். மும்பையில் உள்ள சோபியா மகளிர் கல்லூரியில் பட்டம் பெற்றார். இவரது தந்தை சுசில் குமார் மிசுரா ஒரு மருத்துவர் ஆவார். [3] இவர் நான்கு வயதிலிருந்தே நடனப் பயிற்சி செய்து வருகிறார். கதக் நடனத்தில் தனது முன்னோரிகளையும் தொடர்ந்து வருகிறார். [4]

தொழில்தொகு

விளம்பரத் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய சுமன், தீபாவளியன்று வெடிகளுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டு வெளிச்சத்திற்கு வந்தார். [5] பின்னர் அவர் லூட் என்ற திரைப்படத்தில் சாரி துனியா மேரே இஸ்பே என்ற விளம்பரப் பாடலில் தோன்றினார். [6] [7] 2013ஆம் ஆண்டில் சில்லுனு ஒரு சந்திப்பு என்றத் தமிழ்த் திரைப்படத்தில் ஒரு குத்துப் பாடலைப் பாடினார். [8] அம்மா கி போலி என்ற இந்தித் திரைப்படத்தில் தார்லாவாக தோன்றினார். [9] [10] பின்னர் பிரகாஷ் ஜா தயாரித்த நகைச்சுவைத் திரைப்படமான கிரேஸி குக்காட் பேமிலி என்பதில் இவருக்கு அங்கீகாரம் கிடைத்தது. [11] ஜஹாங்கிர் கலைக் கண்காட்சியில் நடந்த ரோசாஹேப் குராவின் ஓவிய கண்காட்சியில் சுமன் கலந்து கொண்டார்.

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமன்&oldid=2944579" இருந்து மீள்விக்கப்பட்டது