பூகாரூன் முனைத் தாக்குதல்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
பூகாரூன் முனைத் தாக்குதல் (Action off Cape Bougaroun) என்பது இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு வான்வழித் தாக்குதல். இது நடுநிலக்கடல் சண்டையின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. நடுநிலக்கடலில் நடந்த இச்சண்டையில் அல்ஜீரியக கடற்கரையோரமாக சென்று கொண்டிருந்த ஒரு நேச நாட்டு கப்பல் கூட்டத்தை நாசி ஜெர்மனியின் வான்படை லுஃப்ட்வாஃபே தாக்கிப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
பூகாரூன் முனைத் தாக்குதல் | |||||||
---|---|---|---|---|---|---|---|
நடுநிலக்கடல் சண்டையின் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய இராச்சியம் கிரீசு நெதர்லாந்து | ஜெர்மனி | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
சார்லஸ் சி ஹார்ட்மான் | |||||||
பலம் | |||||||
1 குரூசர் 10 டெஸ்டிராயர்கள் 4 டெஸ்டிராயர் பாதுகாவலர்கள் 26 போக்குவரத்து கப்பல்கள் | 25 வானூர்திகள் | ||||||
இழப்புகள் | |||||||
17 பேர் கொல்லப்பட்டனர் ~9 பேர் காயம் 1 டெஸ்டிராயர் மூழ்கடிப்பு 2 போக்குவரத்து கப்பல்கள் மூழ்கடிப்பு 1 டெஸ்டிராயர் சேதம் 2 போக்குவரத்து கப்பல்கள் சேதம் | ~10 பேர் கொல்லப்பட்டனர் 6 வானூர்திகள் அழிக்கப்பட்டன |
1943ல் நேச நாட்டுப் படைகள் இத்தாலி மீது படையெடுத்தன. இத்தாலியப் போர்முனைக்குத் தேவையான தளவாடங்கள் பிரிட்டனிலிருந்து வடக்கு ஆப்பிரிக்கா வழியாக இத்தாலிக்கு அனுப்பப்பட்டு வந்தன. நவம்பர் 1943ல் இங்கிலாந்திலிருந்து இருபத்தி ஆறு போக்குவரத்துக் கப்பல்கள் 28,000 நேச நாட்டுப் படைவீரர்களை ஏற்றிக் கொண்டு இத்தாலிக்குக் கிளம்பியது. இதன் பாதுகாவலுக்கு பதினைந்து போர்க்கப்பல்களும் உடன் வந்தன. KMF-25A என்று குறிப்பெயரிடப்பட்டிருந்த இந்த கப்பல் கூட்டம் அல்ஜீரியாவை அடைந்து அங்கிருந்து நேபொலி நகருக்குக் கிளம்பியது. நவம்பர் 6ம் தேதி வடக்கு ஆப்பிரிக்கக் கடற்கரையில் பூகாரூன் முனை அருகில் இக்கப்பல் கூட்டம் லுஃப்ட்வாஃபே வானூர்திகளால் தாக்கப்பட்டது. இத்தாக்குதலில் இரு போக்குவரத்துக் கப்பல்களும் ஒரு போர்க்கப்பலும் மூழ்கின. மேலும் இரு போக்குவரத்துக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. 6000 க்கும் மேற்பட்ட போர்வீரர்கள் நீரில் மூழ்கி இறக்கும் அபாய சூழல் உருவானது. ஆனால் கப்பல் கூட்டத்தின் பிற கப்பல்கள் ஜெர்மானிய விமானங்களை எதிர்த்துத் தாக்கி விரட்டியபின்னர், நீரில் தத்தளித்த போர் வீரர்களை அதிக உயிர்ச்சேதமின்றி மீட்டன.