பூங்காவனத்தம்மன் கோயில், புட்டலூர்
பூங்காவனத்தம்மன் கோயில், புட்டலூர் என்பது தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் புட்டலூரில் அமைந்துள்ள ஓர் ஆலயம் ஆகும்.
அருள்மிகு பூங்காவனத்தம்மன் கோவில் | |
---|---|
பெயர் | |
வேறு பெயர்(கள்): | அங்காளபரமேசுவரி அம்மன் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருவள்ளூர் |
அமைவிடம்: | புட்லூர் |
கோயில் தகவல் | |
தாயார்: | பூங்காவனத்தம்மன் |
சிறப்புத் திருவிழாக்கள்: | சிவராத்திரி, மாசி மகம் |
அமைவிடம்
தொகுபூங்காவனத்தம்மன் கோயில், தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புட்டலூரில் அமைந்துள்ளது. இக்கோயில் சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து 38 கி.மீ. தொலைவிலும், சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து 35 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
வரலாறு
தொகுஇந்தக் கோயிலின் பூர்வ பெண் தெய்வம் பூங்காவனத்தம்மன் ஆகும். பிற்காலத்தில் அங்காள பரமேசுவரி என்று சமசுகிருத சொல் கொண்டு அழைக்கப்பட்டது.[1]
தொல் காலத்தில் நிகழ்ந்த பெண்ணின் மகப்பேறு பெருந்துயரத்தை நினைவூட்டும் மகப்பேறாகிறது. புட்லூர் பூங்காவனத்தம்மன் தாய் தெய்வ வழிபாடு நமக்குத் தெரிவிக்கின்றன. குறத்தியின் கூடையோடு இணைந்ததுதான் மைய வழிபாடு.[2] இது பாம்பு புற்றுத் தோற்றத்தில் காணப்படுகிறது. நிறைமாத கர்ப்பிணியாய் குழந்தையை பெற்றெடுக்கும் நிலையை புற்றின் புறத்தோற்றம் தெரிவிக்கிறது. வலி தாங்க முடியாமல் வாய் திறந்த நிலையில், கண்கள் மிரட்சியோடு காணப்படுகின்றன. பெண் பக்தர்கள் கண்ணீர் மல்கி, உன் துயரமும் என் துயரமும் ஒன்றுதானா? அம்மா என்று கதறியழுகிறார்கள். யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத தங்கள் வேதனைகள் அனைத்தையும் தாய் தெய்வத்திடம் முறையிடுகிறார்கள். ஆணாதிக்க சமூகத்தில் காயப்பட்ட பெண்களின் உலகம் தங்களுக்கான மனநல மருத்துவத்தை இங்கு பெற்றுக் கொள்கிறது. ஆலய பின்னணி நீரற்று போன ஒரு கோடைகாலத்தில் நிறைமாத கர்ப்பிணியாய் குடையை சுமந்து குறத்தி வருகிறாள். ஒரு பூங்காவனம், அருகில் கூவம் ஆறு ஓடுகிறது. குடிக்க நீரின்றி தவிக்கிறாள். அவளுக்கு குழந்தை பிறந்து உயிருடன் இருந்ததா? அவள் உயிர் பிழைத்தாளா? என்ற எந்த தகவலும் இல்லை. அவள் எளிய மக்களால் வழிபாட்டு பெண் தெய்வமாக்கப்பட்டிருக்கிறாள்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/putlur-amman-temple-power-and-benefits/
- ↑ https://www.vikatan.com/spiritual/temples/87881-know-the-power-of-putlur-amman
- ↑ மலர், மாலை (2020-01-21). "புட்லூர் அங்காளம்மன் ஆலயம்- திருவள்ளூர்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-04-12.