பூச்சியம்மன்

பூச்சியம்மன் நாட்டார் தெய்வங்களில் ஒருவராவார். இவரை பொயிலாம் பூச்சியம்மாள் என்றும் மக்கள் அழைக்கின்றனர்.

பள்ளர் பெண்ணான பூச்சியம்மன், மறவரான பட்டபிரானோடு காதல் செய்து ஓடிப்போனார். அதனையறிந்த பூச்சியம்மனின் சகோதரர்கள் ஏழ்வர் அவர்களைத் தேடி கொல்கின்றனர். அதில் இளைய சகோதரன் மட்டும் தன்னுடைய தங்கையைக் கொல்ல வேண்டாம் என்று கூறுகிறான். ஆனால் தங்களுடன் வர மறுத்த தங்கையை மற்றவர்கள் கொன்றுவிடுகிறார்கள். எனவே அவர்கள் வீடு திரும்பும் வழியில் இளைய சகோதரன் தவிர மற்றோர் இறந்து விடுகின்றனர். அதனால் இளைய சகோதரன் பூச்சியம்மனுக்கு கோயில் எழுப்பி வழிபடுகின்றார்.

இவற்றையும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு


ஆதாரங்களும் மேற்கோள்களும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூச்சியம்மன்&oldid=3716997" இலிருந்து மீள்விக்கப்பட்டது