பூஜா ஜோசி

இந்திய நடிகை

பூஜா ஜோசி (Puja Joshi)(பிறப்பு-28 சூன் 1992) என்பவர் இந்தியத் தொலைக்காட்சி நடிகை ஆவார்.[3] இவர் கலர்ஸ் குசராத்தி[4][5] தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட குடும்ப நகைச்சுவை தொடரான சேயில் சாரு சாசுதிரி என்ற வேடத்தில் நடித்தற்காக நன்கு அறியப்படுகிறார். குங்கும் நா பக்லா பத்யா என்ற கலர்ஸ் குஜராத்தி அலைவரிசை தொடர் நிகழ்ச்சியில் குங்குமமாக நடித்ததற்காக ஜோசி மிகவும் பிரபலமானவர்.

பூஜா ஜோசி
பிறப்பு28 சூன் 1992 (1992-06-28) (அகவை 32)
மும்பை, இந்தியா.
தேசியம்இந்தியா
பணிநடிகை
அறியப்படுவதுஆஅ பேமிலி காமெடி சே[1]
கும்கும் ந பகலா படயா[2]

பூஜா, ஸ்டார் பாரதில் கால் பைரவ் ரஹஸ்யா, சேனல் விஇன் தி பட்டி ப்ராஜெக்ட் போன்ற பல இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், மானவ் கோஹில், கார்கி பட்டேல் போன்ற தொலைக்காட்சி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். சோனி பல் மற்றும் ஸ்டார் மூவிஸ் இந்தியாவின் விளம்பரத்திலும் இவர் இடம்பெற்றுள்ளார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

பூஜா ஜோசி மும்பையில் பிறந்து வளர்ந்தவர். இவர் பாதுகாப்புப் படையில் பணியாற்றியவர்களின் பின்னணியினை கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவர். இவரது தந்தை இந்திய வான்படையில் பணியாற்றினார். மும்பை மிதிபாய் கல்லூரியில் உயிர்த்தொழில்நுட்பவியல் பட்டப்படிப்பை முடித்துள்ளார் பூஜா.

தொலைக்காட்சி

தொகு
ஆண்டு நிகழ்ச்சி வேடம் தொலைக்காட்சி மொழி
2012-2014 பட்டி திட்டம் ரியா சேனல் வி இந்தியா இந்தி
2014-2015 ஆ குடும்ப நகைச்சுவை சே சாரு சாஸ்திரி கலர்ஸ் குஜராத்தி குஜராத்தி
2015-2016 குங்கும் நா பக்லா பத்யா குங்குமம் கலர்ஸ் குஜராத்தி குஜராத்தி
2017 சுட்டா செட்டா பகுதி 2 அஞ்சலி கலர்ஸ் குஜராத்தி குஜராத்தி (வெளியீட்டு தேதி : 27 பிப்ரவரி 2017)
2017-2018 கால பைரவ ரகசியம் ப்ரீத்தி பிரகாஷ் நட்சத்திர பாரதம் இந்தி
2018-2019 இணைய வாலா காதல் ஐசுவர்யா கலர்ஸ் குஜராத்தி இந்தி

திரைப்படவியல்

தொகு
ஆண்டு படம் இயக்குநர் மொழி
2018 அவு ஜெ ரெஹ்சி நிதின் ஜானி குசராத்தி
2022 ஜெய்சுக் சிட்பாயோ தர்மேஷ் மேத்தா குசராத்தி
2022 வீர்-இஷா நு சீமந்த் நீரஜ் ஜோஷி குசராத்தி
2022 ஹூன் தாரி ஹீர் த்வானி கௌதம் குசராத்தி

வலைத் தொடர்

தொகு
ஆண்டு தொடர் வேடம் மொழி நடைமேடை
2021 வாட் வாட் மா பஹேல் குசராத்தி ஷெமரூமீ
2021 பெனகாப் அனுஷ்கா ஷேஷாத்ரி குசராத்தி, இந்தி மொழிமாற்றம் ஷெமரூமீ
2022 வாட் வாட் மா ரிட்டர்ன்ஸ் பஹேல் குசராத்தி ஷெமரூமீ

இசை கானொளி

தொகு
ஆண்டு தலைப்பு இசை இணைந்து நடித்தவர்
2020 உன்கோ அப்னே கரீப் தேகா தா ஜீ மியூசிக் நிறுவனம் ஹிரு ததானி (பாடகி)
2021 வலாமியா 2.0 [6] சுர் சாகர் இசை கீதா ரபாரி (பாடகி) மற்றும் அன்ஷுல் திரிவேதி
2021 மேகா சோல் பீட்ஸ் அதிகாரி கிர்திதன் காத்வி (பாடகர்) மற்றும் பவின் பானுஷாலி

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

தொகு

விருதுகள் மற்றும் பரிந்துரைகளில் பின்வருவன அடங்கும்:[7]

ஆண்டு விருது விருது விளைவாக
2014 14வது ஆண்டு டிரான்ஸ்மீடியா குசராத்தி நாடக மற்றும் திரை விருதுகள் சிறந்த அறிமுக நடிகை பரிந்துரை
2015 15வது ஆண்டு டிரான்ஸ்மீடியா குசராத்தி நாடக மற்றும் திரை விருதுகள் சிறந்த நடிகைக்கான விருது வெற்றி
2018 குளோபல் இந்தியன் திரைப்பட விருதுகள் சிறந்த அறிமுக நடிகை பரிந்துரை

மேற்கோள்கள்

தொகு
  1. "COLORS GUJARATI AA FAMILY COMEDY CHE | AA FAMILY COMEDY CHE Episode | AA FAMILY COMEDY CHE". Archived from the original on 2015-06-14. பார்க்கப்பட்ட நாள் 2015-06-12.
  2. "COLORS GUJARATI KUMKUM NA PAGLA PADYA | KUMKUM NA PAGLA PADYA Episode | KUMKUM NA PAGLA PADYA". Archived from the original on 2015-10-09. பார்க்கப்பட்ட நாள் 2015-12-06.
  3. "Gujarati TV's favourite bahus - The Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 17 November 2018.
  4. "Pooja Joshi's comic timing winning hearts - Times of India". indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 17 November 2018.
  5. "Charu continues to tease Disha in AFCC - Times of India". indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 17 November 2018.
  6. વાલમીયા 2.0 |Valamiya 2.0 |Geeta Rabari |Puja Joshi| Anshul Trivedi|Dhwani Gautam| New Gujarati Song (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2021-08-25
  7. "YouTube". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2020-06-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூஜா_ஜோசி&oldid=4166809" இலிருந்து மீள்விக்கப்பட்டது