பூஞ்சை வங்கி

பூஞ்சை வங்கி அல்லது மைகோபேங் (MycoBank) என்பது ஒரு இணையத் தரவுத்தளமாகும். இது புதிய பூஞ்சையியல் பெயர்கள் மற்றும் சேர்க்கைகளை ஆவணப்படுத்துகிறது. இதில் பூஞ்சைகளின் விளக்கங்கள் படங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது உத்ரெக்ட்டில் உள்ள வெஸ்டர்டிஜ்க் பூஞ்சை பல்லுயிர் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.[1]

பூஞ்சை வங்கி
MycoBank
உள்ளடக்கம்
விவரம்பூஞ்சையியல் பெயர்கள் மற்றும் சேர்க்கைகள், விளக்கங்கள் மற்றும் விளக்கப்படங்கள்
தொடர்பு
ஆய்வு மையம்வெசுடர்டிஜ்க் பூஞ்சை பல்லுயிர் நிறுவனம்
அணுக்கம்
வலைத்தளம்www.mycobank.org
கருவிகள்
ஏனையவை

ஒவ்வொரு புதுமையான பூஞ்சையும், பெயரிடல் வல்லுநர்களால் சரிபார்க்கப்பட்டு, தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறைக்கு இணங்கக் கண்டறியப்பட்ட பிறகு, புதிய பெயர் சரியான முறையில் வெளியிடப்படுவதற்கு முன்பு ஒரு தனித்துவமான பூஞ்சை வங்கி எண் ஒதுக்கப்படுகிறது. புதிய பெயர் அறிமுகப்படுத்தப்படும் வெளியீட்டில் பெயரிடும் ஆய்வாளர்களால் இந்த எண்ணை மேற்கோள் காட்டலாம். இதற்குப் பின் தனிப்பட்ட எண் தரவுத்தளத்தில் பொதுவில் வரும்.

இவ்வாறு செய்வதன் மூலம், எந்தெந்த பெயர்கள் செல்லுபடியாகும், எந்த ஆண்டில் வெளியிடப்பட்டன என்பதை அறியும் சிக்கலைத் தீர்க்க இந்த அமைப்பு உதவும்.

இண்டெக்சு பங்கோரம், உயிர் அறிவியல் அடையாளங்காட்டிகள், உலகளாவிய பல்லுயிர் தகவல் வசதி மற்றும் பிற தரவுத்தளங்கள் போன்ற பிற முக்கியமான பூஞ்சைச் தரவுத்தளங்களுடன் பூஞ்சை வங்கி இணைக்கப்பட்டுள்ளது. பூஞ்சை வங்கி என்பது பூஞ்சைக்கான பெயரிடல் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று பெயரிடப்பட்ட களஞ்சியங்களில் ஒன்றாகும். குறியீட்டுப் பூஞ்சை மற்றும் பூஞ்சை பெயர்கள்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Hawksworth, D. L. (2005). "Universal fungus register offers pattern for zoology". Nature 438 (7064): 24. doi:10.1038/438024b. பப்மெட்:16267528. Bibcode: 2005Natur.438Q..24H. 
  2. Redhead, Scott A.; Norvell, Lorelei L. (2013). "MycoBank, Index Fungorum, and Fungal Names recommended as official nomenclatural repositories for 2013". IMA Fungus 3 (2): 44–45. doi:10.1007/BF03449512. 

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூஞ்சை_வங்கி&oldid=4109326" இலிருந்து மீள்விக்கப்பட்டது