உத்ரெக்ட்

உத்ரெக்ட் (Utrecht, /ˈjtrɛkt/; டச்சு ஒலிப்பு: [ˈytrɛxt] (About this soundகேட்க)) டச்சு மாகாணமான உத்ரெக்ட்டின் தலைநகரமும் மிகுந்த மக்கள் வாழும் நகரமும் ஆகும். இது இரான்ட்சுடாடு நகரத்தொகுதியின் கிழக்கு மூலையில் உள்ளது. நெதர்லாந்திலுள்ள நகராட்சிகளில் நான்காவது மிகப் பெரும் நகராட்சியாக விளங்குகின்றது. 2014ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 330,772 ஆக இருந்தது.

உத்ரெக்ட்
நகரமும் நகராட்சியும்
நகர மையத்தில் உள்ள டோம் கோபுரத்தின் வான்வழிக் காட்சி
நகர மையத்தில் உள்ள டோம் கோபுரத்தின் வான்வழிக் காட்சி
உத்ரெக்ட்-இன் கொடி
கொடி
உத்ரெக்ட்-இன் சின்னம்
சின்னம்
Highlighted position of Utrecht in a municipal map of Utrecht
உத்ரெக்ட்டின் அமைவிடம்
நாடுநெதர்லாந்து
மாகாணம்உத்ரெக்ட்
அரசு[1]
 • Bodyநகராட்சி மன்றம்
 • நகரத் தந்தைழான் வான் சனென் (விவிடி)
பரப்பளவு[2]
 • நகராட்சி99.21
 • நிலம்94.33
 • நீர்4.88
 • ராண்ட்சுடாடு3,043
ஏற்றம்[3]5
மக்கள்தொகை (Municipality, Error; Urban and Metro, Error; Randstad, 2011)[2][4][5]
 • நகராட்சி330
 • நகர்ப்புறம்489
 • பெருநகர்656
 • ராண்ட்சுடாடு69,79,500
இனங்கள்Utrechter, Utrechtenaar
நேர வலயம்ம.ஐ.நே (ஒசநே+1)
 • கோடை (பசேநே)ம.ஐ.கோ.நே (ஒசநே+2)
அஞ்சல் குறியீடு3450–3455, 3500–3585
தொலைபேசி030
இணையதளம்www.utrecht.nl

உத்ரெக்ட்டின் தொன்மையான நகரமையம் பிந்தைய நடுக்காலத்துக் கட்டிடங்களையும் கட்டமைப்புகளையும் கொண்டுள்ளது. 8ஆம் நூற்றாண்டிலிருந்து இது நெதர்லாந்தின் சமய மையமாக விளங்குகின்றது. டச்சுப் பொற்காலம் வரை இதுவே நெதர்லாந்தின் மிகவும் முக்கியமான நகரமாக இருந்தது; நாட்டின் பண்பாட்டு மையமாகவும் மிகவும் மக்கள்தொகை மிகுந்த நகரமாகவும் ஆம்ஸ்டர்டம் முன்னேறியது. 1321க்கும் 1382க்கும் இடையே கட்டப்பட்ட டோம்கெர்க் பேராலயம் சுற்றுலாத் தலமாக விளங்குகின்றது.[6] 1674இல் ஏற்பட்ட சூறாவளி ஒன்றில் இப்பேராலயத்தின் ஒரு பகுதி அழிபட்டது. இப்பகுதி மீண்டும் கட்டப்படவில்லை. எனவே இப்பகுதி பேராலயத்தின் மற்ற பகுதிகளிலிருந்து தனியாக உள்ளது.

நெதர்லாந்தின் பெரியப் பல்கலைக்கழகமான உத்ரெக்ட் பல்கலைக்கழகம் இங்குள்ளது. தவிரவும் பல உயர் கல்வி நிறுவனங்கள் இந்நகரில் உள்ளன. நாட்டின் மையத்தில் இருப்பதால் இருப்பூர்தி, சாலைப் போக்குவரத்துக்கு மையச்சாக விளங்குகின்றது. பண்பாட்டு நிகழ்வுகளில் ஆம்சுட்டர்டாமை அடுத்து நாட்டின் இரண்டாமிடத்தில் உள்ளது.[7] 2012இல் லோன்லி பிளானட் உலகின் பாராட்டப்படாத இடங்களில் முதல் பத்து இடங்களுக்குள் உத்ரெக்ட்டை சேர்த்துள்ளது.

டோம் கோபுரம், இடது புறத்தில் டோம் பேராலயத்தின் மீதப் பகுதி. 1674இல் ஏற்பட்ட சூறாவளியில் சேதமான இப்பகுதி மீண்டும் இணைக்கப்படவில்லை.

மேற்சான்றுகள்தொகு

  1. "Burgemeester" (டச்சு). கெமீன்ட்டெ உத்ரெக்ட். பார்த்த நாள் 3 April 2014.
  2. 2.0 2.1 Anita Bouman–Eijs; Thijmen van Bree; Wouter Jonkhoff; Olaf Koops; Walter Manshanden; Elmer Rietveld (17 December 2012). De Top 20 van Europese grootstedelijke regio's 1995–2011; Randstad Holland in internationaal perspectief (PDF) (Technical report) (in Dutch). Delft: TNO. Retrieved 25 July 2013. Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: unrecognized language (link)
  3. "Postcodetool for 3512GG" (Dutch). Actueel Hoogtebestand Nederland. Het Waterschapshuis. பார்த்த நாள் 3 April 2014.
  4. வார்ப்புரு:Dutch municipality population
  5. வார்ப்புரு:Dutch municipality population urbanmetro
  6. "Province Utrecht". Holland.com. பார்த்த நாள் 2008-01-12.
  7. Gemeente Utrecht. "Utrecht Monitor 2007" (Dutch). பார்த்த நாள் 6 January 2008.

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
உத்ரெக்ட்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்ரெக்ட்&oldid=2784029" இருந்து மீள்விக்கப்பட்டது