பூட்டானில் பெண்கள்

பூட்டானில் பெண்கள் மக்கள்தொகையில் 49% ஆகும். முதன்மையான சமயங்களான பௌத்தம் மற்றும் இந்து மதத்தை ஒட்டி ஆண்வழி அதிகாரப் பரவலும் பெண்வழி அதிகாரப் பரவலும் சமநிலையில் உள்ளது. பூட்டான் அரசு அதிகாரப்பூர்வமாக நாட்டின் அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கிறது. சில பெண்கள் ஊரக, நகரிய பொருளியலில் முதன்மை பங்காற்றுகின்றனர். வேறு சிலர் பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் முதன்மை மேலாண்மை நிலைகளில் பங்காற்றுகின்றனர்.திருமணமானப் பெண்கள் இல்லத்தரசிகளாக இருப்பதோடு தங்கள் கணவர்களுக்கு இணையாக வருமானம் ஈட்டுகின்றனர். உலகளவில், பெண்களின் நிலை பூட்டானில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது.[2]

பூட்டானில் பெண்கள்
பூட்டானில் பெண்கள், 2011
பாலின சமனிலிக் குறியீடு
மதிப்பு0.464 (2012)
தரவரிசை92nd
தாய் இறப்புவீதம் (100,000க்கு)180 (2010)
நாடாளுமன்றத்தில் பெண்கள்13.9% (2012)
உயர்நிலைக் கல்வி முடித்த பெண் 25 அகவையினர்34.0% (2010)
பெண் தொழிலாளர்கள்65.8% (2011)
உலகளாவிய பாலின இடைவெளிக் குறியீடு[1]
மதிப்பு0.638 (2018)
தரவரிசை122nd out of 136

பொருளியல் பங்கேற்பு தொகு

பூட்டானின் பொருளியல் முன்னேற்றம் பல்வேறு துறைகளில் பெண்களின் பங்கேற்பிற்கு வாய்ப்பளித்துள்ளது. குறிப்பாக மருத்துவம் (மருத்துவர்களாகவும் செவிலியராகவும்), கல்வி,நிர்வாகம் போன்ற துறைகளில் கூடுதலான பெண்களின் பங்களிப்பு உள்ளது. 1989 நிலவரப்படி கிட்டத்தட்ட 10 விழுக்காடு அரசுப் பணியாளர்கள் பெண்களாக இருந்தனர். அந்தாண்டு குடிமைப் பணி பொதுத்தேர்வில் முதல்வராக வந்தவர் பெண்ணாகும். அரசுப் பணியிலுள்ள பெண்களுக்கு மூன்று குழந்தைகள் வரை மூன்று மாத கால பேறுகால விடுமுறை முழுச் சம்பளத்துடன் வழங்கப்படுகின்றது. மூன்றுக்கு மேற்பட்ட மகப்பேறுகளுக்கு சம்பளமில்லா விடுமுறை அளிக்கப்படுகின்றது.

சமூகத்தில் ஆணாதிக்க நிலையை சுட்டும் வண்ணம் பெண்களை விட இரண்டுக்கு மூன்று என்ற விகிதத்தில் ஆண்கள் துவக்க மற்றும் இடைநிலைக் கல்வி நிலையங்களில் பயில்கின்றனர். பெண்ணிய தன்னார்வலர் குழுக்கள் விழிப்புணர்வை கூடுதலாக்கி வருவதால் பெண்கள் தங்கள் குடும்ப வருவாயில் கணிசமான பங்கை அளிக்கின்றனர். காட்டாக, சாபா-பூட்டான் (SABAH-Bhutan) என்ற அமைப்பு நெசவு, தையல், உணவுப் பதப்படுத்தல் போன்ற திறன்தொகுப்புகளில் பயிற்சியளித்து குடும்ப வருவாயை கூட்டிட பெண்களுக்கு வழகாட்டுகின்றனர்.

அரசியல் பங்கேற்பு தொகு

2008க்கும் 2011க்கும் இடையே உள்ளாட்சி அரசு பேரவை உறுப்பினர்களை (ஷோக்பாஸ்) தேர்ந்தெடுப்பதும் தக்க வைப்பதும் கடினமாக இருந்தது. ஆர்வமின்மை, பொருளியல் ஊக்கமின்மை மற்றும் விதிகளுக்கு உடன்பாடு என பல இடையூறுகள் இருந்தன. இதனால் நடப்பிலிருந்த தேர்தல் விதிகளின்படி தேவையான கல்வித்தகுதி மற்றும் திறன்தொகுப்புடன் இரண்டு வேட்பாளர்கள் கிடைக்காது தேர்தல்கள் முடிவுக்கு வர மிகவும் தாமதமானது. 2008இல் துவங்கிய தேர்தல் 2011இல் தான் நிறைவுபெற முடிந்தது.[3]

முதற்சுற்றில் அடிப்படை கல்வியறிவு மற்றும் செயற்திறன் பல தொகுதிகளுக்கு சார்பாளர் இல்லாத நிலையை ஏற்படுத்தியது. இரண்டாவது சுற்றில் 90% தொகுதிகள் சார்பாளரைப் பெற்றன. தேர்வானவர்களில் பெண்கள் மிகக் குறைவாகவே (அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின்படி 14%), இருந்தனர். ஆனால் வாக்காளர்களில் 50% பெண்களாக இருந்தனர்.[3][4][5][6][7] இது பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டால் அரசியலிலும் தேர்தலிலும் கூடுதலான பெண்கள் பங்கேற்க இயலுமா என்ற உரையாடலுக்கு வித்திட்டுள்ளது. [8]

வரலாறு தொகு

1980களில் பெண்கள் வேளாண் பணிகளில் குறிப்பிடத்தக்க அளவில் பங்கேற்றனர். ஆண்கள் பெரும்பாலும் சேவைத்துறைகளுக்கும் நகரிய தொழில், வணிக நிறுவனங்களுக்கும் சென்றனர். 1980களின் நடு ஆண்டுகளில் 15 வயதிலிருந்து 64 வயது வரையிலான பெண்களில் 95% வேளாண் துறையில் பணி புரிந்து வந்தனர். இதே அகவைத் தொகுப்பில் 78% ஆண்களே வேளாண்மையில் ஈடுபட்டனர். பண்ணைத் தொழிலில் ஆண்களும் பெண்களும் சமநிலையில் பணியாற்றியதாக வெளிநாட்டு நோக்கர்கள் பதிந்துள்ளனர். பணித்தகுதி பெற்ற மொத்த பெண்களில் 4 விழுக்காட்டினர் மட்டுமே வேலையின்றி இருந்தனர். ஆண்களில் 10 விழுக்காட்டினருக்கு வேலை வாய்ப்பு கிடைக்காதிருந்தது.

பெண்களின், குறிப்பாக ஊரகப் பெண்களின், சமுதாயப் பொருளியல் சார்ந்த நிலையை மேம்படுத்த பூட்டான் அரசு பூட்டானின் தேசிய பெண்கள் சங்கத்தை 1981இல் நிறுவியது. இந்த சங்கத்திற்கு முதன்மைநிலை வழங்க அரசரின் உடன்பிறப்பான ஆஷி சோனம் வாங்சுக் இதன் தலைவராக நியமிக்கப்பட்டார். 1985 இலிருந்து இந்தச் சங்கத்திற்கான நிதிநிலை, அரசின் வரவு செலவு கணக்கில் சேர்க்கப்பட்டது. 1992இல் இச்சங்கத்திற்கு 2.4 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டது. இந்தச் சங்கம் பரம்பரை கலை மற்றும் பண்பாட்டை சிறப்பிக்கும் வண்ணம் வருடாந்திர அழகுப் போட்டிகளை ஒருங்கிணைத்தது. நலவாழ்வு, சுகாதாரம் ஆகியவற்றில் பயிற்சிகள், நூல், விதைகள் விநியோகம், முதலியவற்றை முன்னெடுத்தது. சிற்றூர்களில் புகையில்லா அடுப்புகளைப் பரவலாக்கிற்று.

மேற்கோள்கள் தொகு

  1. "The Global Gender Gap Report 2018" (PDF). World Economic Forum. pp. 10–11.
  2. Verma, Priyadarshini (2014). WOMEN IN BHUTAN: EXPLORING THEIR SOCIO CULTURAL STATUS IN THE LATE 20 TH CENTURY. Proceedings of the Indian History Congress. பக். vol. 75, pp. 920–927. 
  3. 3.0 3.1 "Freedom in the World 2011 - Bhutan". அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் Refworld online. Freedom House. 2011-05-12. பார்க்கப்பட்ட நாள் 2011-05-20.
  4. Tshering, Dechen (2011-04-16). "Tshogpa dearth for real". Kuensel. பார்க்கப்பட்ட நாள் 2011-05-21.
  5. Namgyal, Gyembo (2011-05-03). "Where have the tshogpas gone?". Bhutan Observer online. Archived from the original on 2011-05-11. பார்க்கப்பட்ட நாள் 2011-05-21.
  6. Sherpa, Sherpem (2011-01-21). Baerthlein, Thomas (ed.). "Bhutan holds first-ever local government elections". Deutsche Welle online. பார்க்கப்பட்ட நாள் 2011-05-20.
  7. "When the candidates are illiterate". பூட்டான் ஒளிபரப்பு சேவை. 2010-09-28. Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-05-20.
  8. Pelden, Sonam (2011-08-12). "Should Bhutan Have Leadership Quotas for Women?". Bhutan Observer online. Archived from the original on 2011-09-08. பார்க்கப்பட்ட நாள் 2011-09-08.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Women of Bhutan
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூட்டானில்_பெண்கள்&oldid=3564548" இலிருந்து மீள்விக்கப்பட்டது