பூட்டான் உச்ச நீதிமன்றம்
பூட்டான் உச்ச நீதிமன்றம் (Supreme Court of Bhutan) பூட்டான் இராச்சியத்தின் அரசியலமைப்பினை பரிசீலனை மற்றும் மொழிபெயர்ப்பு செய்யக்கூடிய மிக உயரிய நீதிமன்ற அமைப்பு ஆகும்.
பூட்டான் உச்ச நீதிமன்ற அமைப்பு
தொகுஉச்ச நீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதி மற்றும் நான்கு இணை நீதிபதிகளைக் கொண்டது.இது மேல்முறையீட்டு நீதிமன்றமாகவும் செயல்படுகிறது. அத்தகைய மேல்முறையீட்டு நடவடிக்கைகளினால் இயற்கை பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு வரையறுக்கப்பட்டு உள்ள அசல் மேல்முறையீட்டு அதிகார வரம்பிற்கு உட்பட்டு கேள்விகள் கேட்பதற்கு அதாவது "உச்ச நீதிமன்றத்தின் கருத்தை பெற தகுதி உள்ளது". பூட்டான் அரசர்,அதன் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டு உள்ள எந்தவொரு கருத்திற்கும் உரிய விளக்கம் உச்சநீதிமன்றத்திடம் கேட்க முடியும்; உச்ச நீதிமன்றமும் அதனைப் பரிசீலனை செய்து, அரசரால் குறிப்பிடப்பட்டுள்ள கருத்திற்கான உரிய பரிந்துரைகளை சமர்ப்பிக்க வேண்டும்.
நீதிபதி நியமனம் மற்றும் விதிமுறைகள்
தொகுஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி "பூட்டானின் தலைமை நீதிபதி" என்றும் அழைக்கப்படுகிறார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, இணை நீதிபதிகள் நியமனமானது, சக நீதிபதிகளில் இளையோர் மற்றும் மூத்தோரைக் கருத்தில் கொண்டும், பணியில் சிறந்தவர்களைக் கணக்கில் கொண்டும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தலைமை நீதிபதியின் பணிக்காலமானது, பணியில் அமர்ந்து 5 ஆண்டு காலம் அல்லது 65 வயது அடையும் வரையும், மற்ற இணை நீதிபதிகளுக்கு பணியில் அமர்ந்து 10 ஆண்டுகள் அல்லது 65 வயது அடையும் வரைகுயுமாகும். பூட்டானின் உச்சநீதி மன்றத்தின் அனைத்து நீதிபதிகளுக்கும் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே உரிய விதிகளின்படி பணி நீட்டிப்பு வழங்க முடியும். அதேநேரத்தில் தங்கள் பதவிக்காலத்தின்போது குற்றச்செயல்களில் ஈடுபட்டு, அவர்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தேசிய குற்றவியல் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரில் நிரூபிக்கப்பட்டால், அரசரின் கட்டளையின்படி ஒழுங்கு நடவடிக்கை, தணிக்கை மற்றும் இடைநீக்கம் செய்யப்படுவர். [1]
தேசிய நீதித்துறை ஆணையம்
தொகுதேசிய நீதித்துறை ஆணையம் என்பது 4 பேர் கொண்ட பூட்டான் தலைமை நீதிபதி தலைமையிலானது ஆகும். உச்சநீதிமன்றத்தின் மிகவும் மூத்த இணை நீதிபதி தேசிய நீதித்துறை ஆணையத்தின் ஒரு உறுப்பினராக இருப்பார்.[2]
தலைமை நீதிபதிகளின் பட்டியல்கள்
தொகு# | பெயர் | பணி தொடக்கம் | பணி முடிவு | பதவிக்காலம் |
---|---|---|---|---|
1 | லென்போ சோனம் டோப்கே [3] (நவம்பர் 14, 1949 – ) |
21 பிப்ரவரி 2010 | 14 நவம்பர் 2014 | 5 ஆண்டுகள், 10 மாதங்கள் |
2 | தாசோ செரிங் வாங்சக்[4] | 28 நவம்பர் 2014 | பதவியில் |
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Constitution of Bhutan பரணிடப்பட்டது 2012-09-04 at the வந்தவழி இயந்திரம், Art. 21, §§ 2–10, 15
- ↑ Constitution of Bhutan பரணிடப்பட்டது 2012-09-04 at the வந்தவழி இயந்திரம், Art. 21, § 17
- ↑ Dechen Dolkar (15 நவம்பர் 2014). "Chief Justice retires". Thimphu: The Journalist இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304130501/http://www.bhutanjournalist.com/?p=342. பார்த்த நாள்: 24 August 2015.
- ↑ "Dasho Tshering Wangchuk is Supreme Court’s new Chief Justice". Bhutan Broadcast Service. 28 நவம்பர் 2014. http://www.bbs.bt/news/?p=46840. பார்த்த நாள்: 24 August 2015.
உசாத்துணை
தொகு- "The Constitution of the Kingdom of Bhutan" (PDF). Government of Bhutan. 2008-07-18. Archived from the original (PDF) on 2012-09-04. பார்க்கப்பட்ட நாள் 2010-10-08.
வெளி இணைப்புகள்
தொகு- "༄༅།།འབྲུག་གི་རྩ་ཁྲིམས་ཆེན་མོ།།" (PDF) (in Dzongkha). Government of Bhutan. 2008-07-18. Archived from the original (PDF) on 2011-07-06. பார்க்கப்பட்ட நாள் 2010-10-19.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - "Royal Court of Justice of Bhutan". Government of Bhutan. பார்க்கப்பட்ட நாள் 2010-10-19.
- "Laws of Bhutan". Bhutannica. Archived from the original on 2011-04-27. பார்க்கப்பட்ட நாள் 2010-10-19.