பூட்டுச் செம்பு

பூட்டுச் செம்பு, தூக்குச் செம்பு அல்லது திருக்குச் செம்பு[1] என்பது இறுக்கமாகப் பூட்டிப் பயன்படுத்தக் கூடியதாகவும், தூக்கிக் கொண்டு போகக் கூடியவாறும் வடிவைமைக்கப்பட்ட ஒரு செம்பு ஆகும். பானங்கள் ஒன்றோடு ஒன்று கலக்காத வகையிலும் அதே நேரம் வெளித்தெரியாத வகையிலும் தூக்கிச் செல்ல இலகுவான முறையிலும் தனித்துவமான வடிவிலும் அமைந்த இவ் வகைச் செம்புகள் பழந் தமிழரின் வாழ்க்கைத் தரத்தையும் நுட்பத் திறனையும் ரசனை உணர்வையும் ஒருங்கே வெளிப்படுத்தி நிற்பன.

வடிவமைப்பு

தொகு

பித்தளையினால் ஆன செம்பு வகையைச் சார்ந்த இப்பாவனைப் பொருள் மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கிறது. செம்பு (அடிப்பகுதி), குவளை, மூடி என்பவையே அவையாகும். செம்பின் வாய் பகுதியோடு உள்ளார்ந்து இணைக்கத்தக்க விதமாக குடிக்கும் குவளையை உள்ளடக்கி அது வெளியே தெரியாத விதமாகவும் வெளியே திரவ பதார்த்தங்கள் சிந்தாத விதமாகவும் 7- 8 புரிகள் கொண்ட மூடி அமைந்திருப்பது இதன் சிறப்பம்சம் எனலாம்.

பயன்பாடு

தொகு

தற்போது வழக்கொழிந்து போய் விட்ட இப்பாவனை பொருள் பயணங்களும் வசதிகளும் தற்போது போல இலகுவற்றிருந்த காலங்களில் தம் நீண்ட வழிப்பயணத்துக்காக பானங்களை இதில் இட்டு நிரப்பி எடுத்துச் செல்ல பயன்பட்ட ஒரு சாதனமாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "அந்தக்காலத்தில்.. புளிச்சோறு புராணம்!, பாரதி திலகர்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-10-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூட்டுச்_செம்பு&oldid=3830038" இலிருந்து மீள்விக்கப்பட்டது