பூண்டி, தஞ்சாவூர்
பூண்டி (Poondi) என்பது இந்தியா, தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம் , பாபநாசம் வட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஆகும் . இது மாவட்டத் தலைமையகமான தஞ்சாவூரில் இருந்து கிழக்கே 14 கி. மீ. தொலைவிலும் அம்மாபேட்டையிலிருந்து 4 கி. மீ. தொலைவிலும் தஞ்சாவூர் - நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் மாநிலத் தலைநகர் சென்னையிலிருந்து 322 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
பூண்டி | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 10°46′22″N 79°14′36″E / 10.772677°N 79.243339°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் |
வட்டம் | பாபநாசம் |
ஏற்றம் | 34 m (112 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,320 |
மொழி | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
வாகனப் பதிவு | தநா-49 |
நிலவியல்
தொகுபூண்டியானது வெண்ணாற்று கரையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் விவசாயத்திற்கு ஏற்ற ஈரமான நிலம் காணப்படுகின்றது.
தட்பவெப்ப நிலைத் தகவல், Poondi | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 29.0 (84.2) |
32.0 (89.6) |
35.0 (95) |
38.0 (100.4) |
39.0 (102.2) |
37.0 (98.6) |
37.0 (98.6) |
36.0 (96.8) |
35.0 (95) |
33.0 (91.4) |
30.0 (86) |
29.0 (84.2) |
410 (770) |
தாழ் சராசரி °C (°F) | 21.0 (69.8) |
21.0 (69.8) |
23.0 (73.4) |
27.0 (80.6) |
28.0 (82.4) |
28.0 (82.4) |
27.0 (80.6) |
26.0 (78.8) |
26.0 (78.8) |
25.0 (77) |
23.0 (73.4) |
22.0 (71.6) |
297 (567) |
பொழிவு mm (inches) | 8.0 (0.315) |
8.0 (0.315) |
16.0 (0.63) |
25.0 (0.984) |
35.0 (1.378) |
25.0 (0.984) |
29.0 (1.142) |
65.0 (2.559) |
52.0 (2.047) |
99.0 (3.898) |
93.0 (3.661) |
62.0 (2.441) |
517 (20.35) |
ஆதாரம்: Best time to visit, weather and climate Poondi[1] |
மக்கள்தொகை
தொகு2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பூண்டியில் 1199 ஆண்கள் மற்றும் 1121 பெண்கள் என மொத்தம் 2320 பேர் உள்ளனர். பாலின விகிதம் 935. பூண்டியின் கல்வியறிவு விகிதம் 81.55% ஆகவும், ஆண்களின் கல்வியறிவு 88.08% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 74.56% ஆகவும் உள்ளது.[2]
தொடர்வண்டி நிலையம்
தொகுபூண்டியின் அருகே குடிகாடு மற்றும் சாலியமங்களம் தொடர்வண்டி நிலையங்கள் அமைந்துள்ளன.[3]
கல்வி
தொகுபூண்டியில் 1956ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அ. வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரி உள்ளது. இங்கு பல்வேறு இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Best time to visit, weather and climate Poondi". March 2020.
- ↑ "Poondi I Village Population - Papanasam - Thanjavur, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
- ↑ "Poondi Village , Ammapettai Block , Thanjavur District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.